Thursday, July 05, 2018

பொன்னியின் செல்வனை விட ஆயிரம் மடங்கு சிறந்த நூல் வால்காவிலிருந்து கங்கை வரை

புத்தகம் வாசிக்கும் பழக்கமுள்ள தமிழர்களில் மிகப் பெரும்பாலோர் பொன்னியின் செல்வன் புத்தகம் படித்திருப்பார்கள்.
அது வரலாறு இல்லையென்றாலும் பெருமளவு வரலாற்று தரவுகளை வைத்து எழுதப்பட்ட இருப்பதாலும் கதைகளுக்கே உரிய ஹீரோயிசம் இருப்பதாலும் பலருக்கும் அதைப படிப்பதில் ஆர்வமும் படித்த பின்பு மன்னர்களை பற்றி ஒரு பெருமித உணர்வு இருக்கும். அந்த நிலையோடு நாம் அந்த மன்னர்கள் காலத்தில் இருந்திருந்தால் அவர்களை கடவுளை போல நினைத்து அவர்களிடம் அடிமையாக இருக்க தயங்கியிருக்க மாட்டோம். தமிழர் பெருமை பேசும் பதிவுகளை, ராஜராஜன், ராஜேந்திரன் புகழ்பாடும் கட்டுரைகளை கதைகளை புகழ்ந்து பரப்பிக் கொண்டிருப்போம்.
பொன்னியின் செல்வனை விட ஆயிரம் மடங்கு சிறந்த நூல் வால்காவிலிருந்து கங்கை வரை.
இந்த ஒரு புத்தகத்தை தமிழர்கள் படித்தால் அவர்களுக்கு திராவிட இயக்கத்தின் அவசியம் தானாக புரியும். தமிழர்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்று அறிஞர் அண்ணா இந்த புத்தகம் பற்றி பேசியிருக்கிறார்.
தனக்கு பிடித்த 10 புத்தகங்களில் ஒன்று என்று கலைஞர் சொல்லியிருக்கிறார்.
ஆறாயிரம் வருட வரலாறு எளிய சுவாரசியமான கதைகளாக எழுதப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் தேவைக்கு அதிகமாக கொண்டாடப்பட்டதும் இந்த அரிய பொக்கிசத்தை பற்றி பெரிதாக பேசப்படாமல் இருந்ததில்கூட சூழ்ச்சியும் அரசியலும் இருக்கலாம்.
இந்த புத்தகம் pdf வடிவிலும் online ல் கிடைக்கிறது.
வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்கள், கதைகள் படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள், அரசியல் ஆர்வம் உள்ளவர்கள் இதுவரை இந்த புத்தகத்தை படிக்கவில்லையென்றால் முதலில் இதை படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.
நமக்கான புத்தகங்கள் எவையோ அவை கொண்டாடப்பட வேண்டும்.

No comments: