Tuesday, July 03, 2018

முதல்வர் அண்ணாவின் சிகிச்சைக்கு பணம் கொடுக்க தயாராக இருந்த அளவிற்கு பெரியாரிடம் பணம் இருந்ததா.?

முதல்வர் அண்ணாவின் சிகிச்சைக்கு பணம் கொடுக்க தயாராக இருந்த அளவிற்கு பெரியாரிடம் பணம் இருந்ததா.? என நண்பர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
oOo
அது அறிவினாவோ, அறியாவினாவோ, இல்லை பெரியாரின் நேர்மையை கேள்வி எழுப்புகிற ஐய வினாவோ நானறியேன்.
நான் சொன்னேன்.
oOo
ஆமாம், 1900 களிலே அந்த ஈரோட்டுப் பெரும் தனக்காரன், கோடிகளில் சொத்து பத்துகளை கொண்டிருந்தவன் .
முதல் வகுப்பு பயணசீட்டு வாங்கிக்கொடுத்தால்,
அந்த கஞ்சன்
அதை மாற்றி காசாக்கி கட்சி நிதியில் சேர்த்துவிட்டு
மூன்றாம் வகுப்பில் பயணித்து மிச்சம் பிடிப்பான்.
இரண்டு ரூபாய்க்கு காய்கறி வாங்கிவிட்டு , 1 அணாவுக்கு கறிவேப்பிலை வாங்கி வந்தவரிடம் , ஒரு அணாவை வீணாக்கிவிட்டாயே, கொசுறாக கறிவேப்பிலை வாங்கத்தெரியாத என்று கடிந்துகொள்வான்.
அந்த கஞ்சன் பெரியார் தான் அண்ணாவுக்கு சிகிச்சை பணம் தேவை என்றதும்,அரசை ஏன் கேட்கிறீர்கள் நான் தருகிறேன் என்று அள்ளிக்கொண்டு வந்தான்.
அதே போல் திருச்சியில் கல்லூரி கட்ட அரசுக்கு பல லட்சங்களையும் தன் நிலத்தையும் அள்ளிக்கொடுத்தான்.
ஈட்டத் தெரிந்தும், ஈட்டியதை அனுபவிக்க நாட்டமில்லாமல் தன்னைத், தன் பொருளை
இயக்கச் சொத்தாக்கி மக்களுக்குத் தந்துவிட்டுப் போனவன்.
அவனை கஞ்சனென்பது பிழை புரிதல்
அவன் தான் துறவி என்பது நன்றியறிதல்.

No comments: