Tuesday, April 10, 2018

1970களின் கலைஞரின் அசாத்தியமும் ஆற்றலும் அவர் எதிர்கொண்ட சிக்கலும்

எந்த சர்ச்சை வந்தாலும் இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி கலைஞரை கொச்சைபடுத்துவது இங்கு புதிதல்ல, ராமசந்திரனாலும் பின் ஜெயாவினாலும் சில பிரச்சினைகளை சந்தித்த கலைஞரின் பின்னாளைய அரசியலில் சில சர்ச்சைகள் இருக்கலாம்
ஆனால் 1970களில் கலைஞரும் இந்திராவும் ஆடிய ஆட்டம் சுவாரஸ்யமும், திருப்பங்களும் நிறைந்தது. உலக நாடுகளுக்கே சவால்விட்ட இந்திராவினை கலைஞர் பல இடங்களில் திகைக்கவிட்டார்
திமுக இந்தியாவில் முதன் முதலில் ஆட்சிக்கு வந்த மாநில கட்சி, இது டெல்லியின் கண்களை உறுத்த பல சதிவலை பின்னபட்டது. அந்த நேரத்தில்தான் காவேரி சிக்கல் ஒப்பந்தமும் வந்தது
1972ல் கலைஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நர்மதா நீர் பகிர்வு, கிருஷ்ணா நீர் பகிர்வு போல முடிந்திருக்கும் விஷயம் அது, ஆனால் இந்திரா தந்திரம் செய்தார்
இதற்கெல்லாம் ஏன் வழக்கு? வழக்கினை வாபஸ் வாங்குங்கள் பேச்சு நடத்தலாம் என அழைத்தார்
இந்திய நீதிமன்றங்களின் தன்மையினை உணர்ந்த கலைஞரும் வழக்கினை வாபஸ் வாங்கினார், இந்திரா உறுதிமொழி கொடுத்தபடி பேச்சுகளும் தொடங்கின‌
இப்படி போக்குகாட்டிவிட்டு அப்பக்கம் ராமசந்திரனை இழுத்து கொண்டுவந்து கலைஞருக்கு சிக்கலை உருவாக்கினார் இந்திரா, இந்நிலையிலும் காவேரி உரிமைகளை மீட்க போராடினார் கலைஞர்
ஆனால் மிசா சட்டமும் அதனை தொடர்ந்து கலைஞரை விசாரிக்க வேண்டும் என மனுவோடு நின்ற ராமசந்திரனும் இந்திராவிற்கு சாதகமானவை
ராமசந்திரனின் வேண்டுகோளுக்கிணங்க சர்காரியா கமிஷன் அனுப்பபட்டது
எந்த கலைஞர் காவேரிக்காக வழக்கு தொடர்ந்தாரோ, அவரை வாபஸ் பெற சொல்லிவிட்டு அரசியல் ஆட்டம் ஆடி சர்ர்காரியாவினை அனுப்பினார் இந்திரா
எப்படிபட்ட தந்திரம் அது
அதன் பின் சர்காரியா தாடியினை பிய்த்து ஓடியதும், விஞ்ஞான ஊழல் நடந்தது என்பதும் உலகறியும்
விஞ்ஞானத்திற்கு தேவையே ஆதாரம்தான், ஆனால் ஆதாரமில்லா ஊழல் எப்படி விஞ்ஞான ஊழலாகுமொ தெரியாது
ஆக 1975ல் ஆட்சியினை விட்ட கலைஞர் திரும்ப வந்தது 1996ல் இடையில் 1.5 வருடம் இருந்தார் அது மிக குறுகிய காலம் அப்பொழுது மண்டல் கமிஷனுக்காக போராடி, அமைதிபடை மீட்புக்காக போராட்கொண்டிருந்தார்
அந்நிலையிலும் விபிசிங் மூலம் காவேரி நடுவர் மன்றம் அமைக்கவும் அவர் தவறவில்லை, அதன் பின் உச்சநீதிமன்றத்திற்கு சென்றது கன்னடம்,
கன்னட கலவரம் எல்லாம் முடிந்து ஒரு அமைதி திரும்பிய நேரமது, அதற்குள் கலைஞர் ஆட்சியும் முடிந்தது
பின்னாளில் டெல்லி முழுக்க காங்கிரஸ் கன்னடத்திற்கு ஆதரவாய் மாற, ஜனதாவும் அதனையே செய்ய, இப்பொழுது பாஜகவும் அதனையே செய்ய காவேரி சிக்கலில் வந்து நிற்கின்றது
இதில் பெரும் பொய் ஒன்று பரவுகின்றது
அதாவது சர்காரியா கமிஷனுக்கு பயந்து கலைஞர் காவேரி வழக்கினை வாபஸ் வாங்கினாராம்
1975க்கு பின் வந்த சர்காரியா கமிஷனுக்காக 1972களில் தொடுத்த வழக்கை வாபஸ் வாங்கினாராம்
இதனையும் ஒரு கருத்தாக பலர் சொல்லி கொண்டிருக்கின்றான் பலர் ஆமாம் அவர் அப்படித்தான் என சொல்லிகொண்டிருக்கின்றார்கள்
சரி அடுத்து வந்த ராமசந்திரன் என்ன செய்தார், முல்லை பெரியாறு நீர்மட்டத்தையே 132 அடியாக குறைத்தவர் அவர், காவேரிக்கு என்ன செய்திருப்பார்? ஒன்றுமில்லை
பிற்கால கலைஞரில் சில சர்ச்சை இருக்கலாம் ஆனால் 1970களின் கலைஞரின் அசாத்தியமும் ஆற்றலும் அவர் எதிர்கொண்ட சிக்கலும் கொஞ்சம் அல்ல‌
அவரின் முகாமில் இருந்தே ராமசந்திரன் எனும் கோடரி காம்பினை எடுத்து டெல்லிவெட்டிய சதிகளையும் தாண்டித்தான் அவர் இவ்வளவுதூரம் வளர்ந்து நின்றார்
அந்த கோடரி காம்பு இன்னொரு தலைவலியினையும் அந்த தலைவலி சில கோமாளிகளையும் உருவாக்கிவிட்டது வேறுகதை
அந்த கோமாளிகளை இன்று டெல்லியின் பாஜக அட்டகாசமாக உருட்டி மிரட்டி ஆடுகின்றது

No comments: