Wednesday, April 11, 2018

வன்முறையை கொண்டாடும் மனப்போக்கு அதிகரித்தால் எதிர்காலம் சூனியமாவது உறுதி.

வன்முறையை கொண்டாடும் மனப்போக்கு அதிகரித்தால் எதிர்காலம் சூனியமாவது உறுதி.

கிளாடியேட்டர் படத்தில் அடிமைகள் அடித்துக்கொண்டு சாவதை பார்த்து கொண்டாடும் மனநிலைக்கு இங்கு பலர் வந்துவிட்டனர்.

யாராவது யாரையாவது அடிக்க வேண்டும், அதைப்பார்த்து மகிழவேண்டும். இதைச் செய்யும் சிறு அமைப்புகளை பாராட்ட வேண்டும், அமைதியான அற வழியில் மக்களை திரட்டி எதிர்ப்பை காட்டும் பெரிய கட்சிகளை இகழ வேண்டும்.

இறுதியில் தமிழகத்திலும் ஈழத்தில் நடந்தது போல பேரழிவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் கிளாடியேட்டர் ரசிகர்கள்.

வேலை வெட்டியை விட்டுட்டு போராட்டம் பன்னி சாவரவனுக்கு எதுக்கு வீரவணக்கம்
முடிஞ்சா அவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி கொடுத்து அடுத்த தலைமுறை இப்படி அனியாயமா சாகாமல் இருக்க அறிவுரை சொல்லுங்கள்

இப்புடி போராட்டம் பண்ணி தான் காஷ்மீரில் ஒரு இனமே அழிந்து , பாதி மாநில மக்கள் அகதிகளாகவும் , மீதி மக்கள் தீவிரவாதிகளுக்கு அஞ்சியும் வாழ்ந்துவருகின்றனர்

தமிழகத்தையும் காஷ்மீர் போல மாற்ற தமிழ் தேசியவாதிகள் முனைந்துவருகின்றனர் என்பதில் எனக்கு ஐயமில்லை

இதன் விளைவாக , நம் பிள்ளைகள் மற்றும் வருங்கால தலைமுறையின் வாழ்க்கை பாதிப்படையும் என்பதை விளங்கிக்கொள்வது அவசியம்

அறவழியில் சட்டரீதியாக உரிய வழியில் நம் உரிமைகளை வேண்டிப்பெறுவதே உசிதம்

போராட்டம் போராட்டம் என்று இன்டர் நேஷனல் லெவல்ல பேசுறவன் எல்லாம். பாதுகாப்பா போய்விடுவான் கடைசியில் அடிவாங்கும் ஆட்களை பாருங்கள்.



வன்முறை செய்யும் அமைப்புகளுக்கு இணையப் போராளிகளிடம் பெரும் வரவேற்பு இருந்தது.

ஜனநாயக முறைப்படி போராட்டம் செய்யும் திமுக போன்ற, மக்களிடம் வாக்குகளை வாங்கும் பொறுப்பான எதிர்க்கட்சிகள், விவசாயிகளோடு - மக்களோடு காவிரி மீட்புப் பயணத்தை செய்கிறது.
நேற்று தமிழ்தேசியம் பேசும் கட்சிகளும், அமைப்புகளும் மக்களைத் தூண்டி விட்டு, உசுப்பி விட்டு தமிழனை தமிழர்களே அடித்தார்கள்.

இதற்காகவே காத்திருந்த காவல்துறை நிலைமையை கட்டுக்குள் வைக்க தடியடி நடத்துகிறோம் என்று 2,000 பேர் மீது வன்முறையை நடத்தியது.
யார் யாருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.
அரசின் வெறியாட்டத்தைக் கேட்டால் அப்புறானிகளை அடித்ததை நீங்களே பார்த்தீர்களே என்று நம்மிடமே விளக்கும் கேட்கும்.

பொறுப்பான எதிர்க்கட்சிகள் மக்களுக்கு வரலாற்றையும், போராட்டத்தின் அவசியத்தையும் சொல்கிறது. கூட்டத்தை கட்டுக்குள் வைக்கிறது, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் அரசின் கவனத்தை ஈர்த்து பிரச்சினைகளை தீர்க்கப் பார்க்கிறது.

வன்முறை தான் தீர்வு என்று பேசும் சிலரால் அரசின் வன்முறையைத்தான் எதிர் வினையாகப் பெறமுடியும்.
அது தொண்டர்கள் தலையில் தான் விழும்.

No comments: