Tuesday, April 10, 2018

காமராஜர் நல்லாட்சி - காமராஜர் ஏன் தோற்றார்.

காமராஜர் நல்ல ஆட்சியைத்தான் தந்தாரு... மக்கள் தோக்கடிச்சாங்க... ஆனா அதே தேர்தல்ல 51 காங்கிரஸ் ஆளுங்க ஜெயிச்சாங்க... அப்ப தப்பு யார் மேல? மக்கள் மேலயா இல்ல தோற்கடிச்ச திமுக மேலயா இல்ல காங்கிரஸ் மேலயா? இன்னொன்னும் சொல்லுறேன்...டவுசர் பயலுக காமராஜர புகழ்றது எல்லாம் திராவிட ஆட்சியாளர்களை குறை சொல்ல மட்டும்தானே தவிர அக்கறை அன்பு எல்லாம் சுத்தமா கிடையாது... ஏன்னா அதே காமராஜர எரிச்சி கொலை பண்ண முயற்சி செஞ்சவனுங்கதான் இந்த டவுசர் பயலுக... இத்தன நாளா அணை கட்டல அணை கட்டலன்னு சொன்னானுங்க... இப்ப ஆத்துமேல கட்டுனது எல்லாம் அணையான்னு கேட்குறானுங்க.... வரலாற்றை இரட்டிப்பாக்கி பொய் பிராடு பித்தலாட்டம் இதையே மூலதனமா கொண்டு விஷமத்தை பரப்பும் டவுசர்களா பெரியார் காலத்துலேயே எப்பேர்பட்ட எதிர்ப்பையும் சமாளித்து வளர்ந்த இயக்கம்டா... இது நவீன யுகம் உங்க பிராடு பித்தலாட்டம் எல்லாம் ரொம்ப நாள் தாங்காது...

உண்யையிலேயே இன்று வரும் வாட்சப் புரளிகளை போல காமராஜர் ஆட்சி பொற்கால ஆட்சி தானா. அப்படி இருந்திருந்தால் காமராஜர் ஏன் தோற்கடிக்கப்பட்டார்.

அதற்குமுன் அவர் தமிழினத்திற்கு எதிராக செய்த செயல்களை பட்டியலிட்டு விடலாம். 

1. அப்போதிருந்த மதராஸ் மாகாணம் என்ற பெயர் மாற்றப்பட்டு தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டுமென்ற கோரிக்கை பல நாட்களாக வைக்கப்பட்டு வந்தது. அதனை காமராஜர் எதிர்த்தார். அதற்கு அவர் கூறிய பதில் பெயர் மாற்றம் சிக்கலான ஒன்று. தமிழ்நாடு என்கிற பெயர் மற்றவர்களுக்கு எப்படி புரியும் என்பது தான். பின் 1967 ல் ஆட்சிக்கு வந்த அறிஞர் அண்ணாவின் ஆட்சியில் தான் தமிழ்நாடு என்ற பெயர் வைக்கப்பட்டது.

2. அவர் காலத்தில் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. வாரம் ஒருநாள் அரிசியை பார்ப்பதும் ஒருநாளுக்கு ஒருமுறை உணவு உண்பதுமே கஷ்டம் என்கிற சூழல் உருவானது. அப்போது நிருபர் கேட்டதற்கு (கோபத்திலோ ஏதோ ஒன்றிலோ) பக்தவச்சலம் எலிக்கறி கிடைக்கிறதே அதை சாப்பிட வேண்டியது தானே என்று கூறினார். அதை சத்தமில்லாமல் கடந்து சென்றார் காமராஜர்.

3. 1965 ல் இந்தி எதிர்ப்பு உச்சத்தில் இருந்த சமயத்தில் காங்கிரஸ் ஆட்சி தான். அவர் அதற்கு முன்னரே முதல்வர் பதவியை துறந்து விட்டு காங்கிரஸ் கட்சியை வளர்க்க சென்று விட்டார். பெரியாரும் சொன்னார். இந்த சிக்கலான நேரத்தில் நீங்கள் பதவியை துறப்பது நல்ல முடிவல்ல என்று. ஆனால் அவருக்கு அப்போது தமிழ்நாட்டின் நலனை விட கட்சியின் நலன் பெரிதாக தெரிந்தது.

4. அந்த சமயத்தில் கோட்டையை நோக்கி வந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது பக்தவச்சலம் தலைமையிலான அரசு. அப்போது காவல்துறை அமைச்சராக இருந்தவர் கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரரான கக்கன். நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு கொல்லப்பட்ட போது காமராஜர் இருந்தது அப்போதைய காங்கிரஸ் தலைவரான நிஜலிங்கப்பா வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில்.

5. காவிரி நீர் உற்பத்தி ஆகும் இடமான குடகுமலையில் உள்ள கபினி பகுதியை சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். அவர்கள் நாங்கள் தமிழ்நாடுடன் தான் இணைவோம் என்று கூறிய போது எங்கே இருந்தால் என்னப்பா எல்லாரும் இந்தியாக்குள்ள தான இருக்க போறோம் என்று கூறி பிரித்தவர் காமராஜர் தான். இதே பதில் தான் பல ஊர்களை கேரளத்திற்கு தாரைவார்க்கும் போது வந்ததும். இதற்கு மேல் ஆந்திரப்பிரிவினையின் போது தமிழகத்திற்கு சேர்ந்த திருப்பதியை ஆந்திராவிற்கு கொடுத்த போதும் வந்த பதிலும் இதேதான்.

6. கச்சத்தீவை கொடுத்தபோது காங்கிரஸ் தலைவராக இருந்தவரும் காமராஜர் தான். அது 1974 மற்றும் 1976 என்று இரு ஒப்பந்தங்களால் நிறைவேற்றப்பட்ட ஒன்று. அறிவுஜீவிகள் யாரும் 1975 ல் இறந்த காமராஜரால் எப்படி 1976 ல் கொடுக்கப்பட்ட கச்சத்தீவிற்கு பொறுப்பாக முடியும் என்று கேட்க வேண்டாம். முதல் ஒப்பந்தம் போடப்பட்ட போது காங்கிரஸ் தலைவராக இருந்தவர் காமராஜர் தான்.

இன்னும் உள்ளன. ஆனால் இதுவே உங்கள் தேடலை தூண்டும் என்ற நம்பிக்கையில் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்.

காமராஜர் தலைவர் தான் மிகப்பெரிய தலைவர் தான். ஆனால் அவர் தமிழினத்தை விட இந்திய தேசியத்தை பெரிதாக எண்ணிய தலைவர். அவர் ஒன்றும் புனிதரல்ல. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல. அவர் மனிதர் தான் விமர்சனத்திற்கு உட்பட்டவர்தான்.

இனியாவது காமராஜர் காரில் சென்று கொண்டிருந்த போது வகையான வாட்சப் புரளிகளுக்கு ஆர்கசம் அடையாமல் உண்மையை தேடுங்கள். அதுதான் வரலாறை தெரிந்து கொள்ள ஒரே வழி...

No comments: