Tuesday, April 10, 2018

ஸ்டாலின் சாதனை

நேற்று சன்டீவியில் தனி ஒருவன் திரைப்படம் பழைய நினைவுகளை கிளறிவிட்டது

இரண்டாயிரத்தின் துவக்கத்தில் ஹார்ட் அட்டாக், கேன்சர், ஜான்டிஸ் போன்ற நோய்களுக்கு நாங்கள் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தோம். தமிழகத்தில் பயோடேக்னாலாஜி மாணவர்கள் மத்தியில் பிரபலமாகிக் கொண்டிருந்த நேரம் அது. கேன்சருக்கு நியுபோஜன்என்ற மருந்தின் விலை 45000 ரூபாய். சோதனைக்கு ரெபரன்சாக அந்த மருந்து தேவை என கேட்கும்போதெல்லாம் மேனேஜரிடமிருந்து திட்டு விழும். அதன் விலை இப்பொழுது வெகுவாக குறைந்துவிட்டது.

அப்போது சென்னையில் டைசல் பார்க்கை கலைஞர் தொடங்கினார்.

அதன் தொடர்ச்சியாக டைசல் பயோபார்க் –II என்று ஸ்டாலின் அதே வளாகத்தில் கட்டி முடித்தார்.

உயிர் காக்கும் மருந்துகளை கண்டுபிடிக்க, அதனை பரிசோதனை செய்து பார்க்க என்று கோடிக்கணக்கில் செலவாகும் , எனவே அந்த ஆராய்ச்சியில் இறங்க பலரும் பயந்தார்கள், அதற்கு ஒரு வழி செய்தார்கள்.

ஒரு முழு அளவிலான ரிசர்ச் செண்டர் டைசல் பயோ பார்க்கில் திறக்கப்பட்டது. தேவையான அத்தனை இயந்திரங்களும் கோடிக்கணக்கில் வாங்கி நிறுவப்பட்டது, நீங்கள் எத்தனை ஆண்டுகாலம் தேவையோ அத்தனை ஆண்டுகாலம் வாடகைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் , இதனால் பெருமளவில் நிறுவனங்களின் செலவீனம் குறைக்கப்படும், ஆராய்ச்சி வெற்றியடைந்தால் தனியே அவர்கள் தொழிற்சாலை தொடங்கிக் கொள்வார்கள்.

ஆனால் பரிதாபம், திமுக ஆட்சி அத்தோடு முடிவுற்றது, அடுத்து வந்த அதிமுக ஆட்சி அதற்குண்டான பராமரிப்பில் கவனம் செலுத்தாததால் நிருவப்பட்ட அத்தனை இயந்திரங்களும் சிறிதளவும் பயன்படுத்தாமல் உள்ளது. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் தரமணியில் உள்ள டைசல் பயோ பார்க்கில் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கடந்த ஆறாண்டுகளில் தமிழக அரசின் சாதனை என்று எதையாவது குறிப்பிட முடியுமா, திமுக ஆட்சியில் இருந்தால் நம் வீட்டுப் பிள்ளைகள் அடுத்த மாநிலத்திற்கு வேலை தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டிருக்குமா ? அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் இந்தியா முழுக்க உள்ள பயோடேக்னாலாஜி நிறுவனங்களில் தமிழக மாணவர்களே பணிபுரிகின்றனர்

செயல் தலைவரின் சாதனை என்ன என்று கேள்வி கேட்கும் ஊடகங்கள், ஸ்டாலின் திறந்து வைத்த குடிநீர் திட்டங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களின் இன்றைய கதி என்ன என்று இன்றைய அரசைக் கேள்வி கேட்குமா ?

ஒருநாள் டைடல்பார்க் வாசலிலும், டைசல் பயோபார்க் வாசலிலும் நின்று பாருங்கள், திமுகவின் சாதனையும் தெரியும், இன்றைய அதிமுக அரசின் அவலமும் தெரியும்.

No comments: