Tuesday, April 10, 2018

ஆமை கறி சைமன் - யாழ்பாணத்தார் தமிழக தமிழரை அவர்கள் எள்ளி நகையாடியது கொஞ்சமல்ல

ஆளாளுக்கு ஆமை கறி சைமன் என்கின்றார்களே தவிர, எனக்கு சிங்கவால் இறால் கறி கொடுத்தார் பிரபாகரன் என்ற ஜெகத் கஸ்பர் சாமியாரின் கட்டு கதையினையோ
"எனக்கு கோழிகறி கொடுத்தார் பிரபாகரன் நான் சைவம் என்றேன், இது என்ன சைவ சிறுத்தையா?" என காமெடி செய்தார் என சொன்ன திருமாவினையோ யாரும் கண்டுகொள்ளவில்லை
கஸ்பர் விட்டதும் கப்சா, திருமா விட்டதும் பெரும் ரீல் ஆனால் சீண்டுவாரில்லை
ஆனால் ஆமைகறி சைமன் மட்டும் மாட்டிகொண்டார், காரணம் அந்த வாய்
அன்றே புலிகள் மேல் ஒரு கவனம் இருந்தது, மற்ற போராளிகளை விட புலிகள் உணவிலே கவனமாக இருந்தனர், பிரபாகரனே நன்றாக சமைக்க கூடியவர்.
புலிகள் பயிற்சியில் சமையலும் ஒரு பாடம்
சந்திரிகா கடும் பொருளாதார தடை காலத்தில் புலிகளுக்கு உணவு தட்டுபாடு இருந்தது அப்பொழுது ஒரு கப்பல் புலிகளின் ஆயுதகப்பல் என பிடிபட்டபொழுது அதில் இருந்த பொருளை பார்த்து சிரிப்பாய் சிரித்தது சிங்களம்
ஆம், அது தாய்லாந்தில் இருந்து வந்த உடும்பு கறி
இப்படி புலிகளின் உணவு வெறி இன்னொரு பக்கம், அதை எல்லாம் புலிகள் கூடுமானவரை மறைத்தே வந்தனர்
இப்பொழுது ஆளாளுக்கு ஆமை, இறால், கோழி என சொல்லி அதனை திறக்கின்றனர்
புலிகளிள் இருந்தால் இப்படித்தான் பேசிகொண்டிருப்பார்கள், அதில் யாழ்பாண மேலாண்மையும் இருக்கும்
அன்றே நம்மை கள்ளதோணி என்றும், வழியற்றதுகள் என்றும் சொன்னவர்கள் யாழ்பாணத்தார் , தமிழக தமிழரை அவர்கள் எள்ளி நகையாடியது கொஞ்சமல்ல,
அவர்களுக்குள் இப்படித்தான் பேசியிருப்பார்கள்
"பாத்தியளே ஆமை கறிக்கும், இறாலுக்கும், கோழிக்கும் வக்கற்ற பயல்களை கூட்டி பேசியிருக்கோம். இவனுகள் வாழ்க்கையில் ஆமைகறி கூட பார்த்ததில்லை போல‌
இவைகள் எங்கிருந்து நமக்கு உதவும்?
சிங்களன் ஆட்டுகறி கொடுத்தால் அங்கே போய்விடுமோ என்ற கனத்த பயம் வந்துட்டு பாருங்கோவன்"

No comments: