Tuesday, April 10, 2018

காவிரி விவகாரத்தில் திமுக துரோகம் இழைத்துவிட்டது...

காவிரி விவகாரத்தில் திமுக துரோகம் இழைத்துவிட்டது...

சரி, இப்போது எதற்கு போராட்டம் நடைபெறுகிறது...? 

காவிரி மேலாண்மை மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சொன்னது யார்...?

உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்றம் ஏன் அமைக்க சொல்லியது...?

காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பில் மேலாண்மை வாரியம் அமைக்க சொல்லியதால்.

காவிரி நடுவர் மன்றம் என்ன, எப்போது இறுதி தீர்ப்பு வழங்கியது...?

திமுக ஆட்சியில் 2007 பிப்ரவரி 5ல் 192 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும். அதற்காக காவிரி மேலாண்மை வாரியத்தையும் அமைக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.

காவிரி நடுவர்மன்றம் இடைக்கால தீர்ப்பு என்ன, எப்போது வழங்கப்பட்டது..?

திமுக ஆட்சியால் 1991 ஜூன் 25ல்
205 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
(1991 ஜூன் 24 ஜெயலலிதா முதல்முறையாக முதல்வராக பதவி ஏற்பு.. மறுநாள் தீர்ப்பு. இதில் அதிமுகவுக்கு வேறு எந்த சம்பந்தமும் இல்லை)

காவிரி நடுவர் மன்றம் ஏன் இடைக்கால தீர்ப்பை வழங்கியது...?

நடுவர் மன்றத்தில் வழக்கு முடிய நீண்ட காலம் ஆகும். எனவே இடைக்கால நிவாரணமாக ஒரு ஏற்பாடு வேண்டும் என திமுக ஆட்சியில் வழக்கு தொடுக்கப்பட்டதால். அதனால் நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பை வழங்கியது.

சரி, அந்த காவிரி நடுவர் மன்றம் எப்போது, யாரால் அமைக்கப்பட்டது..?

திமுக ஆட்சியில் 1990 ஜூன் 2ம் தேதி, மத்தியில் திமுக கூட்டணி அங்கம் வகித்த தேசிய முன்னணி அரசால் அப்போதைய பிரதமர் வி.பி.சிங் அவர்களால் அமைக்கப்பட்டது.

சரி... இப்ப சொல்லு இதில் திமுக எங்கே துரோகம் இழைத்தது...?

அன்று திமுகவால் அமைக்கப்பட்ட நடுவர்மன்றத்தால் தான் இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் அதை உறுதிப்படுத்தி உச்சநீதிமன்ற தீர்ப்பும் வந்துள்ளது...

No comments: