Tuesday, April 10, 2018

ஊட்டி அருகேயுள்ள மாயாறு

காவேரி ஆறு தமிழகத்தில் தான் உற்பத்தியாகிறது. ஊட்டியில் அணைகட்டினால் கர்நாடகாவிற்கு செல்லும் காவேரி நீரை தடுத்து நாம் பயன்படுத்தலாம். அதனால் கர்நாடகா நம்மிடம் தண்ணீருக்கு பிச்சை எடுக்கும் நிலை உருவாகும்” என்று ஒரு தவறானா தகவல் கட்ந்த சில தினங்களாக திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது,
ஊட்டி அருகேயுள்ள மாயாறு(moyar) அணை பற்றி தான் தற்போது இணையதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. மாயாறு என்பது 50 கி.மீ நீளம் மட்டுமே கொண்ட காட்டாறு. அந்த ஆற்றின் நீர்வரத்தின் மூலம் தமிழ்நாடு அரசு 36 மெகா வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. இதற்கு ஊட்டியில் இருக்கும் சிறு சிறு ஏரி குளங்கள் மூலம் தான் நீர் வருகிறது. காவேரி ஆற்றின் மூலம் கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்கள் ஒரு வருடத்திற்கு பயன்படுத்தும் நீரின் அளவு மட்டும் 740 டிம்சி. 50 கிமீ தூரம் மட்டுமே ஒடும் காட்டாற்றை தடுத்து தீர்த்து விட்டால் காவேரி ஆற்றையே தடுத்துவிடலாம் என்பது சீப்பை ஒழித்து வைத்துவிட்டு கல்யாணத்தை நிறுத்தும் கதை தான்.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஊட்டி மலைப்பகுதிகளில் உள்ள மேற்சொன்ன ஏரி, குளங்களை தேக்கி அணை கட்டியதன் மூலம் தான் மாயாறுக்கு நீர் வருகிறது. கிளையாறுகள் ஏதும் இன்றி எங்கும் பிரியாமல் மலை பள்ளத்தாக்குகளில் இறங்கி நேராக பவாணிசாகர் அணைக்கு தான் அதன் மொத்த நீரும் வந்தடைகிறது. ஆற்றின் 26 கிமீ பகுதி கர்நாடகா வழியாகவே வருகிறது . இருப்பினும் கிளை ஆறு ஏதும் கிடையாது. 60கிமீ தொலைவில் இருக்கும் கர்நாடக கபினி அணையும், மாயாறும் இணைவதற்கு துளியளவும் வாய்ப்பில்லை. மேலும் ஒரு ஆற்றின் மொத்த நீரும் பம்பு செட்டு பைப்பில் வருவது போல் ஒரே ஊற்றில் வாராது. அதன் நீர் பிடிப்பு பகுதிகள் முழுவதுமாக மழையில் இருந்து நீர் பிடித்து வருவதுதான்
இந்த கதை பாவனிக்கு வேண்டுமென்றால் பொருந்தும். அதுதான் தமிழ் நாட்டில் இருந்து கேரளாவிற்குள் போய் வருவது. ஆனால் பவானி, காவேரியின் கிளை நதி என்பதால் கேரளாவிற்குள் போவதை நாம் தடுத்தால் அது நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரானது. பின் நடுவர் மன்ற தீர்ப்பின் படி கர்நாடகாவில் இருந்து 192 டி.எம்.சி தண்ணீர் கேட்பதில் சிக்கல் வரும்.
அதிக அளவிலான சமவெளிப் பரப்பை கொண்ட கடைமடை பகுதி விதிகளை மீற முடியாது. காவேரி, பாவானி, நொய்யல் என எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காவேரி மேலாண்மை வாரியம்தான். அதன் கட்டுப்பாட்டில் அனைத்து அணைகளையும் கொண்டுவருவதுதான். அதனால்தான் தமிழக விவசாயிகள் காவேரி மேலாண்மைவாரியம் அமைப்பதுதான் ஒரே தீர்வு என்று டெல்லியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடக்கும் போராட்டத்தை திசை திருப்ப ஊட்டியில் அணை என்று குழப்புகிறார்கள் சங்கிகள்

No comments: