Wednesday, April 11, 2018

தமிழகத்தை அடிதடி மாநிலமாகக் காட்டும் பரப்புரை நடைபெறும் அபாயம் இருக்கிறது

திரைப்படங்கள் தொடர்ந்து மதுரையை ஒரு ரவுடி / வெட்டுக்குத்து / ரத்தவெறி ஊராகக் காட்டிக்கொண்டே இருந்ததால் பல நிறுவனங்கள் மதுரை பக்கம் வரவே தயங்கின .
குறிப்பா ஐ. டி துறை ஜாம்பவான்களிடம் கேட்டுப்பாருங்கள். தமிழகத்தின் தென்பகுதி , சென்னையின் வடக்கு பகுதிகளில் நிறுவனங்கள் தங்கள் கிளைகளை விஸ்தீகரிக்க ஏன் தயங்குகின்றன என்று .
ஏரியா வஸ்தாதுகள் கலாட்டா செய்து வியாபாரத்தைக் கெடுத்துவிடுவார்கள் என்ற பயமும் ஒரு காரணம். இதில் தமிழ் சினிமாவின் பங்கும் அதீதம்.
தமிழன்டா என்று நாம் கொக்கரிக்கும் அதே நேரம், வட இந்திய ஊடகங்கள் தமிழகம் என்றாலே வெற்று கலாட்டா செய்கிறவர்கள் என்று திரும்ப திரும்ப நம்மை stamping செய்கிறார்கள்.
இந்த மாதிரியான திட்டமிட்ட பரப்புரைகளால் நியாயமான போராட்டங்களைக் கூட விஷமமான நோக்கில் மக்களிடம் சென்று சேரும் அபாயம் இருக்கிறது...
இப்படிப்பட்ட சூழலில் சும்மா இருப்பவனை அடித்து உதைத்து ,சட்டையைக் கிழித்து அடிக்கும் போக்கால் தமிழகம் என்றாலே வெற்றுக் கூச்சல், கலவர பூமி என்று ஆணித்தரமாக தமிழகத்தை அடிதடி மாநிலமாகக் காட்டும் பரப்புரை நடைபெறும்.
IT நிறுவனங்கள் , பன்னாட்டு நிறுவனங்களே வேண்டாம் ஆடு மாடு மேய்க்கும் அரசுவேலை மட்டும் போதும் என்றால் , Cattle per capita மிக மிக குறைவு.....
இதை எப்படி கையாளப் போகிறோம் ?

No comments: