Thursday, April 12, 2018

IPL எதிர்ப்பாளர்கள் எவ்வளவு அரைவேக்காடுகள்



IPL எதிர்ப்பாளர்கள் எவ்வளவு அரைவேக்காடுகள் என்பதற்கும் memes creators எவ்வளவு அடிமுட்டாள்கள் என்பதற்கும் இந்த காணொளிகள் ஆகச்சிறந்த உதாரணம். Tamil Nadu Digital Media Association என்கிற பெயர் வைத்திருக்கும் கும்பல் எந்த அளவுக்கு digital யுகத்திற்கு எதிரானவர்கள் media ethics இல்லாதவர்கள் என்பதற்கும் அதைவிட கேவலம் இவர்கள் தமிழ்நாட்டின் ஆளும் கட்சியின் எடுபிடிகள் என்பதற்கும் இந்த காணொளிகள் மிகச்சிறந்த சாட்சியங்கள். IPLஐ பார்க்கச்செல்பவர்களைப்பார்த்து நீங்கள் வயிற்றுக்கு சோறு தின்கிறீர்களா ** தின்கிறீர்களா என்று அத்தனை பேர் முன்னால் ஒருவர் திரும்பத்திரும்ப மைக்கில் கேட்கிறார். அதற்கு மேடையிலும் கீழேயும் இருப்பவர்கள் கெக்கெபிக்கே என்று சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். நம்புங்கள் இவர்கள் தான் தமிழ்நாட்டின் digital age இளைஞர்கள். மாற்று ஊடகவியலாளர்கள்?!?!? இன்னொரு பிரகஸ்பதி முதல்வரும் துணைமுதல்வரும் “எங்க ஆளுக” என்கிறார். ஆனால் எதிர்கட்சியினர் காவிரிக்காக நடைபயணம் போவதை திட்டுகிறார். ஐம்பது ஆண்டுகளாக தமிழ்நாடு நாசமானதாக ஒப்பாரி வைக்கிறார். இதற்கெல்லாம் உச்சமாக இந்த digital media அமைப்பை வாழ்த்த வந்த வில்லன் நடிகர் உதிர்த்த முத்து தான் விலைமதிக்கமுடியாத “விவசாய முத்து”. போன (காங்கிரஸ்) ஆட்சியின் 100 நாள் வேலைதிட்டம் தான் இந்திய/தமிழக விவசாயத்தை அழித்துவிட்டது என்று ஒரே போடாக போட்டார் அந்த நடிகர். கிராமப்புற விவசாயக்கூலிகளின் பட்டினிச்சாவுகளை தடுத்த ஆகச்சிறந்த திட்டம் என்று உலக அளவில் பாராட்டப்படும் 100 நாள் திட்டம் விவசாயிகளை சோம்பேறிகளாக்கிவிட்டது என்று தீர்ப்பே எழுதினார் அந்த வில்லன் நடிகர். விவசாயிக்கும் விவசாயக்கூலிக்குமான வித்தியாசம் தெரியவில்லை என்பதா அல்லது இந்த 100 நாள் வேலைதிட்டத்தால் பலன்பெரும் ஏழை விவசாயக்கூலிகள் தனக்கு முன்புபோல கொத்தடிமைகளாக இருப்பதில்லை என்கிற மேல்ஜாதி விவசாயியின் கோபத்தை கொட்டினாரா தெரியவில்லை. இத்தனைக்கும் தானும் விவசாயக்குடும்பத்தில் இருந்து வந்ததாக அவர் கூறிக்கொண்டார். விவசாயகுடும்பத்தில் இருந்து வந்ததாக கூறிக்கொண்டவரின் விவசாய நெருக்கடி குறித்த புரிதல் இந்த லெட்சணத்தில் இருந்தால் நெல்லு மரத்தில் காய்க்குமா கொடியில் தொங்குமா என்று கேட்கும் மற்ற நகர்ப்புற அரைவேக்காட்டு இளைஞர்கள் பற்றி என்ன சொல்ல? IPL பார்க்கச்செல்பவர்களை வாயில் வந்தபடி திட்டுவது; எதிர்கட்சிகள் காவிரிக்காக போகும் நடைபயணத்தை விமர்சிப்பது; அவர்கள் ஓட்டுகேட்டு வந்தால் போன ஆட்சியில் காவிரிக்காக என்ன செய்தாய் என கேள்விகேட்கும்படி மக்களை தூண்டுவது; மத்திய அரசை பாம்புக்கும் நோகாமல் கம்புக்கும் நோகாமல் பூவால் வருடுவதைப்போல லேசாக திட்டுவது என்பதாக வாய்நீளம் காட்டிய இந்த வெண்ணெய் வெட்டிகள் யாரும் ஏழுகோடி தமிழரை ஆளும் எடப்பாடியையோ ஓபிஎஸ்ஸையோ மறந்தும் ஒரு சொல் சொல்லவில்லை. அவர்கள் இருவரின் பேரைச்சொன்னவர் கூட “அவுக எங்காளுக” என்பதாக சொந்தம் கொண்டாடினாரே தவிர அவர்களை கண்டித்து ஒரு வார்த்தை பேசவில்லை. எல்லா அர்ச்சனைகளும் அந்த IPL Cricket பார்க்கப்போன அப்பாவிகளை எதிர்த்தே செய்தார்கள். அதைவிட முக்கியம் காவல்துறை நம் நண்பர்கள் நல்லவர்கள் ஆட்சியில் இருப்பவர்களின் ஆணையை நிறைவேற்றுவது அவர்களின் கடமை என்று ரஜினிகாந்தைப்போலவே காவல்துறைக்கு “நற்சான்று பத்திரம்” படித்தார்கள். Mainstream media தான் மோசம் என்றால் இந்த மாற்று mediaக்கள் என்று கூறிக்கொள்பவர்கள் கேவலத்திலும் கேவலமான எடுபிடிகளாக, ஜாதிவெறியர்களாக, எந்த விஷயத்தைப்பற்றியும் குறைந்தபட்ச புரிதலும் இல்லாத lumpenகளாக இருக்கிறார்கள். இதில் இப்போதெல்லாம் யாரும் செய்திகளையே பார்ப்பதில்லை என்றும் memes பார்த்தே செய்திகளை தெரிந்துகொள்வதாகவும் இதுகளில் ஒன்று ஆணவம் பொங்க அறிவித்தது. தமிழ்நாட்டை ஆளும் கட்சியை தட்டிக்கேட்க வக்கில்லாமல் தொடர்பே இல்லாமல் IPL பார்க்கச்சென்றவர்களை ஆபாசமாக திட்டிய lumpenகளை பார்க்கும்போது அவர்களுக்கான அரசியல் புரிதலை இந்த அரைவேக்காடுகள் தான் தொடர்ந்து memesகளாக அளித்து மூளையை மழுங்கடிக்கின்றன என்பது மட்டும் உறுதியானது.

No comments: