Tuesday, April 10, 2018

திராவிடத்தால் வாழ்ந்தோம்

1960ல், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவர் சராசரியாக 390 ரூபாய் சம்பாதித்தார். தமிழகத்தைச் சேர்ந்தவரோ 330 ரூபாய் சம்பாதித்தார். அதே 2014ல், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் சராசரியாக 80,000 ரூபாய் சம்பாதித்தார். தமிழகத்தைச் சேர்ந்தவரோ 1,36,000 ரூபாய் சம்பாதித்தார்.
1960ல் (அதாவது பொற்கால காமராசர் ஆட்சியில்) இந்தியாவின் நான்காவது வறிய மாநிலமாக இருந்த தமிழகம், 2014ல் இந்தியாவின் இரண்டாவது பணக்கார மாநிலமாக வளர்ந்து நிற்கிறது.
1991இல் இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தின் மதிப்பு 274 பில்லியன் கோடி டாலர். இப்போது தமிழகம் என்னும் ஒற்றை மாநிலத்தின் பொருளாதாரம் மட்டுமே ஏறத்தாழ அந்த அளவை எட்டி விட்டது.
திராவிடத்தால் வாழ்ந்தோம். இல்லை என்று சொல்பவன் முட்டாள் அல்லது மோசடிப் பேர்வழி.

No comments: