Wednesday, April 11, 2018

வாச்சாத்தியும் ரஜினிகாந்தின் நீலிக் கண்ணீரும்

வாச்சாத்தியும் ரஜினிகாந்தின் நீலிக் கண்ணீரும்:
காவிரிப் பிரச்சனையை ஒட்டி பொதுவெளியில் நடக்கும் போராட்டம் அப்பட்டமான பாசிஸ பாதையில் பயணிக்கிறது. பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மிக ஆபாசமாக அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள். கும்பல் எப்போதும் இலக்கில்லாமல் மூர்க்கம் காட்டும். கும்பலாக இருப்பதாலேயே தனி மனிதனாக செய்ய துணிவில்லாததையும் தனியாக செய்ய கூசும் செயல்களையும் எளிதாகச் செய்யும்.திரையரங்கில் கும்பலாகவோ, தனியாகவோ இருட்டைப் பயன் படுத்தி ஆபாசமாக கூவும் தமிழர்களை, அமெரிக்காவிலும் கண்டிருக்கிறேன். இதில் முதலிடம் வகிப்பவர்கள் ரஜினி ரசிகர்கள்.


கும்பலுக்கு போலீஸ், பொது மக்கள் என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது இன்னும் சொல்லப் போனால் இவ்வாய்ப்பை பயன் படுத்தி அதிகாரத்தின் குறியீடாக இருக்கும் காவல் துறை, காவல் நிலையம், பொதுத்துறை சொத்துகள் தாக்கப்படுவதற்கு வாய்ப்பு அதிகம். காவல் துறையும் அமைதிப் பதுமைகள் அல்ல. வெளுத்து வாங்குபவர்கள் தான். கேவலம் லஞ்சத்துக்காக ஒரு குடும்பத்தை சீரழித்த கதை சமீபத்தில் தானே நடந்தது. அப்போது எங்கே போனார் இந்த ‘சூர்யா சார், உரசாதீங்க’ ரஜினிகாந்த்?
வாச்சாத்தி, வரலாறு அறிந்தவர்கள் மறக்காத அவலம். வாச்சாத்தியில் போலீஸ் வெறியாட்டம் நடத்திய போது ஹீரோயின்களோடு இடுப்பாட்டம் போட்டுக் கொண்டிருந்த ரஜினிகாந்துக்கு இப்போது தான் பேச வாய் வருகிறது. ஜல்லிக் கட்டு போராட்டத்தில் காவல் துறை வெறியாட்டம் நடத்தியதே? அப்போது எங்கே போனார் இந்த காகிதப் புலி? உடனே, ஆ அப்போது கலவரம் செய்ததை போலீஸ் ஒடுக்கியது என்று விரல் நீட்டாதீர்கள். கலவரத்தை அடக்குவது என்பது வேறு அதிகார மமதையில் வெறிக்கொண்டு அடக்குவது வேறு. காணொளிகள் சொல்லும் நடந்தது எந்த வகை என்று.
இன்றும் இந்தப் போராட்டத்தின் பாசிஸத் தன்மையை கண்டிக்கத் துணிவில்லாமல் வசதியாக உளறியிருக்கிறார் காகிதப் புலி.

No comments: