Wednesday, April 11, 2018

சென்னை வெள்ளம் வந்தப்போ

சென்னை வெள்ளம் வந்தப்போ, எங்க மாவட்டத்துக்காரன் எல்லாம் வேலையை விட்டுட்டு உங்களுக்கு பொருட்களை அனுப்பினான், நீங்க கேவலம் ஒரு IPL மேட்ச்சை பார்க்காம இருக்க முடியாதா? எங்களுக்காக?? ///
டேய், கோமுட்டி மண்டையா, சென்னையில இருக்கவன் எல்லாருமே சென்னை பூர்வீக குடிகளா டா தடிமாடு? உன் ஊர்லருந்து சென்னைக்கு எவனுமே வரலையா?? நீயே வீக்கெண்ட் பார்ட்டி, குடிக்க ஈசிஆர் போகலாம்னு சொல்ற டோமர் தானே, நீயெல்லாம் சென்னை ஆட்களைக் கேள்வி கேட்கலாமா??
சரி, வெள்ளம் வந்தப்ப உதவினோம்ன்னு சொல்லி இன்னும் எங்களை ஏதோ பரிதாபத்துக்கு தத்தெடுத்த மாதிரியே பில்டப் கொடுக்கிறியே, உன்னை மாதிரி ஆட்கள் ஐ.டி கம்பெனியில வேலைச் செய்ய சென்னைப் புறநகரில் எவ்வளவு விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டதுன்னு தெரியுமா ? எத்தனை ஏரிகள் நீங்க படிச்ச தனியார் பல்கலைக்கழகங்களா மாறியிருக்கு தெரியுமா? பஞ்சமி நிலங்களெல்லாம் பன்னாட்டு கம்பெனியா இருக்கிறது தெரியுமா?
சில ஆண்டுகளா ஊர்லருந்து வந்து இங்கேயே ஒரு ஊரையே வளைச்சுப் போட்டு கடைகளைக் கட்டி அந்த கழிவெல்லாம் எங்க கூவத்துல கலக்குறது தெரியுமா?
பத்து பைசா இல்லாமல் வந்தாலும், பசியாற்றுற ஊரு இது. எங்கிருந்து வந்தாலும் கொஞ்சம் நன்றியுணர்வு இருக்க மக்களால் தான் கூட்டம் கூட்டமா எவ்வளவு பேர் வந்தாலும் அத்தனைப் பேருக்கும் இடம் கொடுக்குது. உன்னை மாதிரி திடீர் IPL புறக்கணிப்பு போராளியெல்லாம் சென்னையையும், இங்கே வாழுற மக்களையும் பார்த்து கேள்வி கேட்கவோ, இதைச் செய்யலைன்னா தமிழனே இல்லைன்னும் சொல்றதுக்கெல்லாம் நிஜமாவே அந்த எக்ஸ்டரா மூளை தான் காரணம் போல.

No comments: