Tuesday, April 10, 2018

திராவிடத்தால் வீழ்ந்தோம்னு சொல்லீட்டு திரியரவங்களை பீகாருக்கோ இல்ல உ.பி க்கோ

"திராவிடத்தால் வீழ்ந்தோம்... கழகங்களால் நன்மையில்லை.. தமிழகம் வளரவில்லை..." என்றெல்லாம் வாய் கூசாமல் பொய் பேசிவந்த கும்பல்களே, இப்போது, "தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் வளர்ந்த மாநிலங்கள் தான்..
ஹிந்துத்துவா கொலோசும், பிஜேபி ஆளும் வட ஹிந்திய மாநிலங்கள் எல்லாம் வளர்ச்சியடையாத, பின்தங்கிய மாநிலங்கள்... அதினால் அவர்களுக்கு அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது" என்ற உண்மையை பேசவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்..
அதேபோல, திராவிட நாடு விவாதத்தால், தமிழக இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் கீழ்கண்ட பல உண்மைகள் தெரியவந்துள்ளது..
1. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள், மத்திய இந்திய அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது..
2. இந்திய அரசுக்கு 33% வரியை, 25% GDPயை வழங்கும் ஐந்து தென் மாநிலங்களுக்கு, மத்திய அரசு ஒதுக்குவது வெறும் 18% நிதி மட்டும் தான்..
3. உத்திர பிரதேசம் ஒரு ரூபாயை வரியாக கொடுத்து, 1.79 ரூபாயை திரும்ப பெறுகிறது.. ஆனால், தமிழ் நாடோ, ஒரு ரூபாயை வரியாக மத்திய அரசுக்கு கொடுத்து, வெறும் 0.40 பைசாவை திரும்ப பெறுகிறது...
4. தென்மாநிலங்கள், மத்திய பிஜேபி அரசால் முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றன.. நிதி ஒதுக்கீடுகளும் இல்லை.. மத்திய அரசின் புதிய திட்டங்களும் இல்லை.. ஏற்கனேவே இருந்த திட்டங்களும், நிறுவனங்களும் வட மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது..
5. தமிழ்நாட்டு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா -- இந்த தென் மாநிலங்கள்தான் இந்திய மத்திய அரசுக்கு பெரும் நிதியை வரி வருவாயாக செலுத்துகிறது. ஆனால் இந்த வரி வருவாயின் பெரும்பகுதி வட மாநிலங்களின் வளர்ச்சிக்குத்தான் பயன்படுத்தப்படுகின்றன.. தென்மாநிலங்களுக்கு வரும் வெளிநாட்டு முதலீடுகளும், தனியார் நிறுவனங்களும் வட மாநிலங்களுக்கு மத்திய அரசால் திருப்பிவிடப்படுகிறது....
6. அனைத்து தரப்பும் பலன் பெரும், ஒருங்கிணைந்த, ஒன்றுபட்ட வளர்ச்சி, இன்குளுசிவ் வளர்ச்சி தென் மாநிலங்களில் உள்ளது.. ஐம்பது ஆண்டுகளுக்கு முன், இந்தியாவின் ஏழை மாநிலங்களின் பட்டியலில் இருந்த தமிழ் நாடு, இப்போது இந்தியாவின் பணக்கார மாநிலங்களின் முதல் மூன்று இடங்களில் உள்ளது.. தமிழ் நாட்டின் தனிநபர் வருவாய் 1,40,000 ரூபாய்.. ஆனால், உத்திரபிரதேசத்தின் தனிநபர் வருவாய் 43,000 ரூபாய் மட்டுமே..
7. தென் மாநிலங்களின் வரியில், அவர்களுடைய மொழிகளின் வளர்ச்சிக்கு எந்த பெரிய நிதியையும் ஒதுக்காமல், அவர்களுடைய வரிகளை கொண்டு, ஹிந்தி மொழிக்கு நூற்றுக்கணக்கான கோடிகளை ஆண்டுதோறும் மத்திய அரசு ஒதுக்குகிறது..
8. தென் மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகளில், திட்டமிட்டு, உள்ளூர் இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டு, வட மாநில இளைஞர்கள், பல்வேறு முறைகேடான வழிகளில் ஆக்கிரமிகிறார்கள்.. சொந்த மாநில இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டு, அங்கெல்லாம், வட மாநில இளைஞர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்..
9. சமூக சீர்திருத்தவாதிகளால், சாதி சமய வேறுபாடுகள் குறைந்து, தென் மாநிலங்கள் மேம்பட்டு, தங்களது வளர்ச்சி திட்டங்களால், ஹிந்துத்துவா மூடநம்பிக்கைகளால் பீடிக்கபட்டுள்ள வட மாநிலங்களை விட பல மடங்கு சமூக, பொருளாதார, கல்வி, சுகாதார & மருத்துவ குறியீடுகளில் முன்னேறியுள்ளன..
10. 1920-40 கள் வரை ஆந்திரா (பகுதி), கர்நாடகா (பகுதி), தமிழ் நாடு உள்ளடங்கிய சென்னை மாகாணத்தை ஆட்சி செய்த திராவிட இயக்க முன்னோடியான நீதிக்கட்சியின் சமூக சீர்திருத்த செயல்பாடுகளாலும், இடஒதுக்கீடு போன்ற திட்டங்களாலும், தந்தை பெரியார், நாராயண குரு, அய்யா வைகுண்டர் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளாலும், இங்கு அதிகமாக செயல்பட்ட கிருஸ்துவ கல்வி & மருத்துவ நிறுவனங்களாலும், தென் மாநிலங்கள், வட மாநிலங்களை விட, மேம்பட்ட சமூக கட்டமைப்பும் குறைவான சாதி மத வெறுப்புணர்வும், கல்வி & சுகாதார முக்கியத்துவமும் கொண்டுள்ளன.. இவற்றால், இம்மாநிலங்களின் வளர்ச்சி துரிதமாக நடந்தேறியது. ஆனால், வட மாநில நிலைமை தலைகீழ்.. சமூக சீர்திருத்தம் பெரியளவில் இல்லை.. மிக அதிகமான சாதி மத வெறுப்புணர்வு.. RSS ஹிந்துத்துவா போன்ற மக்களை பிளவுபடுத்தும் சக்திகளின் ஆதிக்கம்... சரியாக நடைமுறைப்படாத இடஒதுக்கீடு முறைகள்.. ஒருசில முன்னேறிய சாதிகளே அனைத்து கல்வி & வேலைவாய்ப்புகளை ஆக்கிரமித்ததுகொண்டு, OBC, SC, ST பிரிவினர்களுக்கு அவர்களின் உரிமைகளை மறுப்பது.. இவைகளால், அம்மாநிலங்களில் வளர்ச்சி பெரியளவில், சம அளவில் இல்லை..
ஆனால், இந்த உண்மைகளை மறைத்து, ஹிந்துத்துவா RSS பிஜேபி கும்பல், ஏதோ பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் வளர்ச்சியடைந்து முன்னேறிவிட்டதை போலவும், தமிழகம் போன்ற பின்தங்கிய மாநிலங்களும் அவ்வாறு வளர்ச்சியடைய, "கழகங்கள் இல்லாமல்" பிஜேபி ஆட்சிக்கு வரவேண்டும் என பொய் பிரச்சாரம் செய்துவருகிறது..
திராவிடத்தால் வீழ்ந்தோம்னு சொல்லீட்டு திரியரவங்களை எல்லாம் அடுத்த ரயிலை புடுச்சு பீகாருக்கோ இல்ல உ.பி க்கோ டிக்கெட் எடுத்து அனுப்பி விட்டுருங்க !!

No comments: