காவேரிக்காக ஸ்டாலின் போராடுவது வேடிக்க்கையாக இருக்கிறது - சீமான்
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்து இந்த நொடிவரை விவசாயத்தை காத்து நிற்பது திமுக
பலமுறை விவசாய கடனை ரத்து செய்ததும் திமுக
உரமானியம் முதல் பலமானியங்களை வழங்கியதும், உழவர் சந்தை வரை அமைத்துகொடுத்ததும் திமுக
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்தது முதல் டெல்டா கால்வாய்களை தூர்வாரியதும் திமுக
காவேரியில் 1970ல் இருந்து போராடி 1990ல் காவேரி நடுவர்மன்றம் அமைய காரணமாயிருந்ததும் திமுக
இடைபட்ட காலங்களில் அவசரவழக்கு பல தொடுத்ததும் திமுக
நேற்றுகூட அந்த நடுவர்மன்ற தீர்ப்பின் அடிப்படையிலே இறுதி தீர்ப்புவழங்கியதாக உச்சநீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டிருக்கின்றார்
ஆக காவேரிக்காக உருப்படியாக போராடிய கட்சி திமுக அதனை எல்லாம் சொல்லாத சைமன், ராமசந்திரன் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் குறைத்தது, இன்றைய பழனிச்சாமியின் நெஞ்ஞ்சாண்கிடை பற்றி எல்லாம் கூட சொல்லவில்லை
அங்கிள் சைமன்
காவேரிக்கு திமுக முதல் வழக்கு தொடுத்த காலத்தில் நீர் பிறக்கவே இல்லை
காவேரி நடுவர்மன்றத்தை திமுக அமைத்தபொழுது நீர் கல்லூரியில் அரியர் வைத்து முட்டிகொண்டிருந்தீர்
கலைஞர் அமைதிபடையினை திரும்பபெற்றபொழுது உமக்கு இலங்கை எங்கிருக்கின்றது என்றே தெரியாது
கலைஞர் இலவச மின்சாரம் கொடுத்தபொழுது உமது தோட்டத்திலும் இலவச மின்சாரம் என மகிழ்ந்தீர்
1991ல் நடுவர்மன்ற தீர்ப்பு அரசு இதழில் வந்து கன்னடம் பற்றி எரிந்தபொழுது நீர் பாரதிராஜா கேமராவினை துடைத்துகொண்டிருந்தீர்
1997களில் தேவகவுடாவுடன் திமுக காவேரிக்காக மல்லுகட்டியபொழுது நீர் பாலுமகேந்திரா காலடியில் இருந்து மரப்பசு நாவல் படித்துகொண்டிருந்தீர்
திமுக உழவர் சந்தையினை அமைத்தபொழுது நீர் பாஞ்சாலங்குறிச்சி படம் இயக்கிகொண்டிருந்தீர்
இன்னும் உரமானியம், டெல்டா பாசன சீரமைப்பு என திமுக பிசியான காலங்களில் நீர் "வாழ்த்துக்கள்" படம் எடுத்தீர், விஜயலட்சுமிக்கு தமிழ் சொல்லிகொடுத்தீர்
2009 வரை நீர் கோடம்பாக்கத்தின் கேமரா தவிர எதை சுற்றி வந்தீர்?
இப்பொழுது ஏதோ ஆமைகறி அரசியல் செய்யலாம் என வந்து குதிக்கின்றீர்
திமுகவின் 60 ஆண்டுகால சாதனை, அது செய்திருக்கும் சில முயற்சிகளையாவது தெரிந்துவிட்டு வந்து பேசும்
இல்லாவிட்டால் எங்களிடம் கேளும், ஆமைகறி அளவு இல்லை என்றாலும் பூனைகறி போட்டாவது சொல்லி தருகின்றோம்
அது அல்லாமல் அந்தரத்தில் கம்பு சுற்றும் உம்மை கண்டால் மகா வேடிக்கையாக இருக்கின்றது
No comments:
Post a Comment