Sunday, June 16, 2019

பெரியார் காங்கிரஸ்காரராக இருந்தபோது 1922ல் திருப்பூர் மாநாட்டில் சொன்னார்

"பெரியார் காங்கிரஸ்காரராக இருந்தபோது 1922ல் திருப்பூர் மாநாட்டில் சொன்னார், 'தாழ்த்தப்பட்டவர்களையும், நாடார்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும்' என்ற தீர்மானத்தை கொண்டுவந்தார். அதை கொள்கை அளவில் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளட்டும் என்று கேட்டார். ஏற்றுக்கொள்ளவில்லை காங்கிரஸ் கட்சி.

இதை எதிர்த்தவர் யாரென்றால், 1939இல் கோவில் நுழைவுப்போராட்டத்திற்கு காரணமாக இருந்தவர் என்று சொல்லப்பட்ட வைத்தியநாத அய்யர்தான். அப்போது, 'உனக்கு சாஸ்திரம் தெரியுமா? இராமாயணம் தெரியுமா?' என்று வைத்தியநாத அய்யர் கேட்டதற்கு, அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் பெரியார் சொன்னார், 'மனுசாஸ்திரமும் இராமாயணமும் தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் நுழையத் தடையாக இருந்தால் அதை இரண்டையும் எரிக்கனுமே தவிர இதைப்பற்றி பேசக்கூடாது' என்றார்.

'இராமாயணத்தையும் மனுசாஸ்திரத்தையும் எரிப்போம்' என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த போது 1922ல் திருப்பூர் மாநாட்டில் பெரியார் பேசினார்."-

No comments: