Sunday, June 16, 2019

பா.ரஞ்சித் சோழனை இப்படி சொல்லி விட்டார்.. அப்படி சொல்லி விட்டார்

பா.ரஞ்சித் சோழனை இப்படி சொல்லி விட்டார்.. அப்படி சொல்லி விட்டார் என்று அவர் மீதான வெறுப்பு பதிவுகளைப் பார்த்தேன்.

அவர்கள் இதை கட்டாயம் படிக்க வேண்டும்.

தமிழக கல்வெட்டுகளில்

அறவழி கோட்பாடுகள் என்ற புத்தகத்தில் முனைவர் கா.அரங்கசாமி எழுதிய அந்தப் புத்தகத்தில் இருந்து சில தகவல்களை எடுத்து இங்கே கொடுக்கிறேன்.

இவை அனைத்தும் கிபி 1000 வருசத்தில் இருந்து 1500 வருசம் வரைக்கும் நடந்த விஷயங்களாக கொள்ளுங்கள் ( தோராயமாக)

1.பிற்கால சோழர்கள் ஆட்சிக்கு பிறகு தமிழகத்தில் வடமொழி கல்வி பிரபலம் ஆகிறது. வடமொழி இலக்கியங்கள், வடமொழி சொற்கள், வடமொழி நீதி ( அநீதி) நூலான மனுநீதி நூல் பிரபலம் ஆகிறது. மன்னர்களும், குட்டி மன்னர்களும், நிலச்சுவான்தார்களும், பணக்காரர்களும், மக்களும் பிராமண மதமே சிறந்த மதம் என்று நம்புகிறார்கள். தந்திரமாக நம்ப வைக்கப்படுகிறார்கள். அதையொட்டி அடுத்த 800 வருடங்கள் பிராமணர்கள் நினைத்துப் பார்க்க முடியாத சலுகைகளை பெற்று வாழ்கிறார்கள்.

2. தேவராயன் கல்வெட்டில் முக்கிய செய்தி இருக்கிறது. அதன்படி ஒரு அரசனின் நிலம் என்பது அவன் தங்கை மாதிரி. அதை ஒரு பிராமணனுக்கு தானம் செய்வது என்பது நிலம் என்னும் தங்கையை இன்னொரு ஆணுக்கு கல்யாணம் செய்து கொடுப்பதாகும். ஒருவேளை அந்த நிலத்தை மறுபடியும் அரசன் பிராமணனிடம் இருந்து திரும்ப பெற்றால் சொந்த தங்கையை மறுபடி ஒரு அண்ணன் வலுக்கட்டாயமாக திருமணம் செய்த பாவத்துக்கு ஆளாகிவிடுவான். அந்த தோஷம் அவனைப் பிடிக்கும்” என்கிறது. இதிலிருந்து பிராமணர்கள் தங்கள் நிலங்களை எவ்வாறெல்லாம் தக்கவைக்க தந்திரங்கள் செய்திருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

3.இராசேந்திரன் சர்வசி பண்டிதர்க்கு அதாவது ஆரிய தேசம், மத்திய தேசம் தேசங்களின் வந்த பண்டிதர்களுக்கு நிறைய கிராமங்களை தானம் செய்துள்ளான். முதலாம் குலோத்துங்கன், கொங்கு சோழன் ஏராளமான நிலங்களை பிராமணர்களுக்கு கொடுத்துள்ளான்.

4. பிராமணர்களுக்கு கொடுக்கும் நிலத்தை பிரம்மதேயம் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். அவர்களுக்காக உருவாக்கப்படும் குடியிருப்புகளுக்கான நிலத்தை சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கிறார்கள்.

5. இந்த பிரம்மதேயத்தையும் சதுர்வேதிமங்கலத்தையும் பிராமணர்களுக்கு தானமாக கொடுத்த கல்வெட்டு மட்டும் தமிழில் நூற்றுக்கு மேலே இருக்கிறதாம். அக்கல்வெட்டுகள் மூலம் அரசர்கள் பிராமணர்களுக்கு கொடுத்த தானங்களின் விவரமாக தெரியவருகிறது.

6.எதிரிலிச் சோழன் சம்புவரையன் தான் வெற்றிபெற யாகம் வளர்த்தவருக்கு 167 வேலி நிலம் கொடுத்துள்ளான். வீரராசேந்திரன் நாற்பதாயிரம் பிராமணர்களுக்கு நிலம் கொடுத்துள்ளான். முதலாம் பரமேசுவரன் 20 பிரம்மதேயம் கொடுத்துள்ளான். பராந்தவீர நாராயணன் எண்ணிறைந்த பிரம்மதேயம் கொடுத்துள்ளான்.முதலாம் சடையவர்மன் குலசேகரன் 1030 பிராமணர்களுக்கு பிரம்மதேயம் கொடுத்துள்ளான். ( . பிராமணர்களுக்கு கொடுக்கும் நிலத்தை பிரம்மதேயம் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.

7.சேந்தன் மாறன் 121 பிராமணர்களுக்கு 200 வேலி நிலம் கொடுக்கிறார். அச்சுதேவராயர் பட்டர்களுக்கு என்று தனிப்பாதையே அமைத்துக் கொடுக்கிறார். அதில்லாமல் 1000 பசுக்களை தானம் கொடுக்கிறார்.

8.பாதவிருத்தி, பட்டவிருத்தி, புராணவிருத்தி போன்ற ஊர்பெயரால் பல ஊர்கள் பிராமணர்களுக்கு தானமாக வழங்கப்பட்டிருக்கிறது.

9.இராசராசன் கல்வெட்டில் பிராமணர்கள் இருக்கும் ஊரில் பிராமணர்கள் அல்லோதோர் கட்டாயம் நிலத்தைக் பிராமணர்களுக்கே கொடுத்து விடும்படியான கட்டளை பிறப்பிக்கப்பட்டும் மற்றவர்கள் ஊரைவிட்டு விரட்டப்பட்டனர்.

10. குந்தவை பிராட்டி பிராமணர்கள் அல்லோதோர் நிலத்தை விலைக்கு வாங்கி அதை கருந்திட்டைக்குடிக் கோவிலுக்கு விளக்கு எரிக்க தானமாக கொடுத்தார். முக்கியமாக வேளாளர்களின் நிலம் மொத்தமாக பிடுங்கபட்டன.

11. எந்த உழைப்பையும் கொடுக்காமலேயே பிராமணர்களுக்கு 12 நாழி நெல் கொடுத்து விட வேண்டும் என்ற உத்தரவு இருந்திருக்கிறது.
.
12.அச்சமயத்தில் அன்னதானம் என்றாலே அது பிராமணர்களுக்கு இடும் தானமாகத்தான் கருதப்பட்டது. அவர்களுக்கு தானம் கொடுப்பது புண்ணியம் என்பதை மக்கள் மேல் திணித்தார்கள். சாப்பாடு,கறிவகை, பருப்பு, நெய், பற்படகம், உப்பேறி, பச்சடி, கறியமுது, வெற்றிலை இவை அனைத்தும் சேர்ந்ததுதான் ஒரு பிராமண போஜனம். எந்த பிராமணருக்கு அன்னதானம் செய்தாலும் இதில் ஒரு வகை கூட குறையக் கூடாது என்று கல்வெட்டு சொல்கிறது.

13. பிராமணர்கள் கொலை செய்தால் அவர்களுக்கு மரண தண்டனை கிடையாது. மற்ற சாதியினருக்கு உண்டு. உதாரணமாக ஆதித்த கரிகாலனை கொன்ற ரவிதாசன் என்ற பிராமணனுக்கு வடமொழி நீதி நூல் அடிப்படையில் நாடுகடத்தல் தண்டனை மட்டுமே வழங்கப்பட்டது என்பதை உடையார்குடி கல்வெட்டு சொல்கின்றது.

14.கொலை செய்தால் அவர்களை நரபலி இட்டுவிடுங்கள். ஆனால் பிராமணர்களை மட்டும் நரபலி கொடுக்காதீர். சிறைத்தண்டனை போதும் என்று விஜயநகர கல்வெட்டு சொல்கிறது.

15. வடமொழி நீதிநூலின் மொழியான “தருமத்துக்காக பாவம் செய்யலாம்” என்ற கொள்கையை பல்வேறு கவ்லெட்டுகள் கூறுகின்றன. ( அந்த தருமமம் என்பது பிராமணர்களின் நலமே )

பதினைந்து பாயிண்டுகள் என்பது நான் உதாரணத்துக்கு எழுதியது. புத்தகத்தில் நிறைய இருக்கிறது.

பிராமணர்கள் எப்படி தமிழகத்தில் நிலம் பெற்றார்கள்?

அரசர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி பிராமணர்கள் நிலத்தை வாங்கி இருக்கிறார்கள்.

அரசர்களை எப்படி பிராமணர்கள் கவர்தார்கள்?

அவர்களை மதம் மூலம் நம்ப வைத்து கவர்கிறார்கள்.

தங்களுக்கு பல்வேறு சலுகைகளை பிராமணர்கள் பெறுகிறார்கள். எப்படி பெற்றார்கள்?

பிராமணர் என்பவர் உயர்ந்தவர் என்ற இந்து மதக்கருத்தை திரும்ப திரும்ப மகாபாரதம், ராமாயணம், புராணக் கதைகள் மூலமாக சொல்லி மக்களை நம்ப வைத்து பெற்றார்கள்.

பல தண்டனைகளில் இருந்து பிராமணர்கள் தப்பினார்கள். எப்படி தப்பினார்கள்?
பிராமணரைக் கொன்றால் பிரம்மஹத்தி தோசம் வந்து விடும் என்று இந்து மதம் வாயிலாக நம்ப வைத்து தப்பினார்கள்.

கோவிலை எப்படி பிராமணர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தினர்?

கோவிலுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று ஏராளமான செல்வத்தையும், நிலத்தையும் கோவிலுக்கு வாங்கிக் கொண்டனர்.

கோவிலுக்குள் தாங்கள் மட்டுமே அதிகாரமிக்க ஆட்கள் என்று இந்து மதத்தில் சொல்லி இருக்கிறது என்று மதத்தின் பெயரால் கோவிலை சாதகமாக்கிக் கொண்டனர்.

ஆக பிராமணர்கள் இவை அனைத்தையுமே இந்து மதம் என்ற மதத்தின் மூலமாகவே செய்திருக்கிறார்கள்.

No comments: