Sunday, June 16, 2019

பார்ப்பானிடம் மண்டியிட்ட அநீதி மன்றம்

பார்ப்பானிடம் மண்டியிட்ட அநீதி மன்றம், இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்க எங்கிருந்து தைரியம் வந்தது,

போலீஸை பார்த்து ஏன்யா லஞ்சம் வாங்குறீங்க நான் தரேன்யா, பிச்சை வாங்குறீங்களே வெட்கமா இல்ல, கோர்ட்டாவது , மயிராவது என்று தொடர்ந்து பொது வெளியில் அநாகரீகமாக பேசிவருகின்ற எச்ச. ராஜானிடம் மண்டியிட்ட அநீதி  மன்றம்,

உயர் பதவியில் இருப்பவர்களிடம் பெண்கள் அப்படி இப்படி என்று அனுசரித்துதான் போகவேண்டியிருக்கும் என்று பெண்களை இழிவாக பேசிய கோமாளி நடிகன்S.V.சேகரிடனிடம் மண்டியிட்ட அநீதி மன்றம்,

தொடர்ந்து பட்டியல் சமூக மக்களை கொச்சைபடுத்தி வரும், பாலியல் பலாத்கார கும்பல்களின் தலைவன் ராமர்தாஸனிடம் மண்டியிட்ட அநீதி  மன்றம்,

தமிழர்களை பொறுக்கிகள் என்று சொன்ன, உண்டகட்டி வாங்கி தின்ற சுப்பிரமணியன் ஆசாமியிடம் மண்டியிட்ட அநீதி மன்றம்,

தொடர்ந்து கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிவருகின்ற   பாஜக தருதலைகளிடம் மண்டியிட்ட அநீதி மன்றம் ,

இயக்குநர் பா.ரஞ்சித் அவர்கள் ராஜராஜசோழன் குறித்து பேசியதற்க்கு அநீதி  மன்றம் கண்டனம் தெரிவிக்க என்ன அவசியம் ஏற்பட்டது,

ராஜராஜசோழன் ஆட்சிகாலத்தில்தான் தலித்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது என்றும், ராஜராஜசோழனின் ஆட்சி பொற்கால ஆட்சி என்று சொல்கிறார்கள் எங்களை பொருத்தவரையில் அது இருண்ட காலம் என்று பேசினார் இதிலென்ன தவறிருக்கிறது,

மக்கள் கொண்டாடும் மாமன்னரை விமர்சிப்பதா என்று கேட்கும் அநீதி  மன்றம்,

இதுவரை கிடைத்த தகவல்படி 15 பெண்களை மனமுடித்த ஒருவன் எப்படி மக்கள் கொண்டாடும் மாமன்னராவார், யார் கொண்டாடுவது,

தற்போது எப்படி தேவைக்கேற்ப நிலம் கையகப்படுத்தப்படுகிறதோ, அதுபோல் அன்று ராஜராஜசோழன் நிலம் கையகப்படுத்தியிருக்கும் என்று கூறும் அநீதி மன்றம்,

அது எப்படி தலித் மக்களுடைய நிலங்கள் மட்டும் கையகப்படுத்தினான் ராஜராஜசோழன்,  அப்படியே கையகப்படுத்தி அந்த நிலத்தில் என்ன வளர்ச்சி திட்டங்கள் செய்து சாதித்தான், அந்த நிலங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் அளவில் இன்று யார் வசம் உள்ளது என்று தெரியுமா, தெரியாதா?

தேவதாசி முறை அன்றே ஒழிக்கப்பட்டுவிட்டது தற்போது அதுகுறித்து பேச வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கும் அநீதி மன்றம்,
கல்வி பாடபுத்தகங்களில் மட்டும் எதற்க்கு பழைய வரலாறுகளை பதிப்பிட வேண்டும் .

நாட்டில் தினம் நொடிக்கு நொடி, சிறுமிகள்,  பெண்களுக்கெதிராக குறிப்பாக தலித் பெண்களுக்கெதிராக எத்தனை பாலியல் பலாத்காரம், கொலை, வன்கொடுமைகள் நடக்கின்றன அதையெல்லாம் தட்டிகேட்க திராணியில்லாத அநீதி மன்றம், இயக்குநர் பா.ரஞ்சித் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் ராஜராஜசோழன் ஆட்சியில் நடைபெற்ற உண்மை அவலங்களை மக்களிடத்தில் பேசினார் இதிலென்ன தவறிருக்கிறது இதற்க்கு உடனே வழக்கு,  அநீதி மன்றம் கண்டனம், 

ராஜராஜசோழன் தரப்பில் புகார் கொடுத்தது யார், ராஜராஜசோழனுக்கும் புகார் கொடுத்தவனுக்கும் என்ன ரத்த உறவு,

ராஜராஜசோழன் மட்டுமல்ல இந்த நாட்டை ஆண்ட அத்தனை மாமாமன்னர்களும் பார்ப்பனர்களின் அல்லக்கைகள்தான்.

No comments: