Sunday, June 16, 2019

#PutChatney_RajMohan ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

#PutChatney_RajMohan ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். மாரிதாஸ் அளவிற்கு மட்டமாக இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு அது ஓகே-வாகத் தான் இருக்ககிறது..

காரணம், அவர் ராஜராஜனை ஒரு சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட மன்னனாக வியந்தோதி இருக்கிறார்..

உள்ளபடியே ராஜராஜனின் கட்டிடக் கலை, நீர் மேலாண்மை, நகர வடிவமைப்பு எல்லாமே வியப்பிற்குரியவை தான்.. ஆனால் ராஜ் மோகன் வசதியாக மறைத்தாரா? அல்லது அறியாமையில் விட்டுவிட்டாரா? என்பது நமக்கு தெரியவில்லை..

ராஜராஜன் இத்தனை நிர்வாகத் திறன் கொண்டவனாக இருந்து யாரை வாழ வைத்தான்? யாருக்காக நிலங்களை எல்லாம் தானமாக வழங்கினான்? யாருக்காக அதிகப்படியான வரியினை வசூல் செய்தான்? யாருக்காக கோயில்களையும், மடங்களையும் கட்டியெழுப்பினான்?? என்கிற கேள்விகளிலிருந்து ராஜராஜனை அணுகும் போது தான் நிர்வாகத் திறன் என்பதைத் தாண்டிய ராஜராஜனின் உண்மை முகத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.. இந்த வரலாற்றுத் திரிபின் மயக்கத்திலிருந்து தெளியவும் முடியும்.

சரி இது இரிக்கட்டும்..

அத்தாம் பெரிய கோயில்.. 80 டன் விமானம்.. ஆஹா ஓஹோ என்று வாயைப் பிளக்கிறார் ராஜ் மோகன். ஆனால், அடிப்படையில் ஒரு மனிதனாக அந்த கோயிலின் பின்னால் எத்தனை பேருடைய உழைப்பு சுரண்டப்பட்டிருக்கிறது என்பதை நாம் பேசவேண்டியதில்லையா?? எத்தனை ஆயிரம் போர்க் கைதிகளின் உழைப்பு சுரண்டப்பட்டு வெறும் பிணமாக அங்கிருந்து தூக்கியெறியப் பட்டிருக்கிறார்கள் என்பதை பேசியாக வேண்டுமில்லையா??

80 டன் கல்லை திருச்சியிலிருந்து கொண்டு வந்து, வல்லம் செங்கிப்பட்டியில் இருந்து சாரம் கட்டி உச்சிக்குக் கொண்டு போவதற்கு எத்தனை எத்தனை பேர் அங்கு கொடூரமாக துன்புறுத்தப்பட்டிருப்பார்கள்?? இதையெல்லாம் அந்த மனிதர்கள் இன்புற்று கடமையாற்றினார்கள் என்று ராஜ் மோகன் போன்ற மன்னராட்சியை ரொமாண்டிசைஸ் செய்கிறவர்கள் நினைப்பார்கள் எனில் அதனை விட சைக்கோத் தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.

இப்படி உழைத்து உழைத்து செத்துப் போனவர்கள் ஒரு புறம் இருக்கையில் தான், ராஜராஜன் பார்ப்பனர்களுக்கும்.. சைவ வெள்ளாளர்களுக்கும் சேவை செய்து தன்னை பூலோக சிவனாக கருதிக் கொண்டு வாழ்ந்திருக்கிறான். யாரோ சுகபோகமாக இருக்க.. மகிழ்விக்க.. அப்பாவி மக்களின் உழைப்பைச் சுரண்டி சேவகம் செய்தவனை எத்தனையோ பேர் அம்பலப்படுத்தியும் இந்த பொது சமூகம் அவற்றை எல்லாம் கடந்து போவதற்கு, இது போன்ற வரலாற்று புரிதலற்றவர்களின் அதீதமான உணர்வு மீட்டல்கள் தான் காரணமாக இருந்து வந்திருக்கின்றன..

எல்லாவற்றிற்கும் மேலாக தேவதாசி முறையினை தோற்றுவித்து பெண்ணினத்திற்கே மாபெரும் இழுக்கினைத் தேடித் தந்தவன் ராஜராஜன். பெண்களை போகப் பொருளாகவே பாவித்து சுகித்துக் கிடந்தவன் அவன். அதனால் தான் பதினான்கு மனைவிகளை கட்டி வாழ்ந்திருக்கிறான். அவர்களில் 13 பேர் பார்ப்பனப் பெண்கள்.. பார்ப்பனர்களுக்காக தனது குடிகளின் உழைப்பினை ராஜராஜன் சுரண்டியதன் காரணம் இப்போது புரிந்திருக்கலாம் ஒருவேளை..

வரலாற்றில் நல்ல மன்னன், கெட்ட மன்னன் என்பதெல்லாம் இல்லை.. மன்னன் என்றாலே கெட்டவன் தான். காரணம் அங்கு உழைப்புச் சுரண்டலும், ஏகாதிபத்தியமும் தான் இருக்குமே தவிர, சமத்துவமும் சம உரிமையும் இருந்ததே இல்லை.. அதனால் தான் இங்கு மக்களாட்சி முறையே சிறந்த ஜனநாயக ஆட்சி முறை என்று கூறுகிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

இதற்கு மேல் சொல்வதற்கில்லை.. கட்டிடங்களின் பிரம்மாண்டங்களில் மறைந்திருக்கும் குடிமக்களின் ரத்தக் கறைகளில் இருந்து மன்னர்களை அணுகுவதே சரியான, அறிவுடைமைச் சமூகத்திற்கு அழகாகும்..

நன்றி!!

No comments: