திராவிடம் அறிவோம் (88)
1956ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற தி. மு. கழக இரண்டாவது மாநில மாநாட்டில்தான், கழகம் தேர்தலில் போட்டியிட வேண்டுமா – வேண்டாமா என்று மாநாட்டுக்கு வந்தோரிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
56,942 பேர் தி. மு. கழகம் போட்டியிட வேண்டும் என்றும், 4,203 பேர் போட்டியிட வேண்டாம் என்றும் வாக்களித்தனர்.
மக்களின் மிகப் பெரும்பான்மையான ‘வேண்டும்’ என்ற முடிவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இறுதித் தீர்மானமான “பொதுத் தேர்தல்களில் தி. மு. கழகம் போட்டியிடுவது என்று இந்த மாநில மாநாடு தீர்மானிக்கிறது” என்ற தீர்மானத்தை மாநாட்டுத் தலைவர் நெடுஞ்செழியன் வாசித்தபோது மக்கள் எழுப்பிய கையொலியும், ஆரவாரப் பேரொலியும் அடங்க சில நிமிடங்கள் ஆயின.
கழகம் இந்த முடிவை மேற்கொண்ட முறை, அரசியல் இயக்கங்கள் மேற்கொள்ளாதது – வரலாற்றில் புதுமையானது – ஜனநாயகத் தத்துவத்திற்கு மேலும் தெளிவு தரும் சீரியதொரு நடைமுறை.

No comments:
Post a Comment