தோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும்….
( தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் )
நண்பர்களே…
தமிழ் செய்தி சேனலில் ( NEWS 18 ) தோழர் பெ.மணியரசனின் பேச்சைக் கேட்டேன். நன்றாகப் படித்த படிக்கின்ற பண்புள்ள அவர் பொய்யையும் புளுகையும் அள்ளி வீசியது எனக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. அவருடைய பெரும் புளுகுகளில் இரண்டை மட்டும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அவர் புளுகுகிறார் என்பதற்கான ஆதாரங்களையும் அந்த ஆதாரங்களைக் கொண்டுள்ள நூல்களின் இணைப்பையும் உங்களுக்குத் தருகின்றேன்.
தோழரின் பொய்1. தமிழ்நாட்டில் வேத வேள்விகளை பார்ப்பனர்களைக் கொண்டு செய்து அவர்களுக்கு நிலங்களைக் கொடுத்தது “களப்பிரர்கள்“ என்று கூறினார். உண்மையி்ல் சங்க கால சேர சோழ பாண்டிய மன்னர்களே வேத வேள்விகளைத் தொடங்கி வைத்து பார்ப்பனர்களுக்கு நிலம் வழங்கியவர்கள் என்பதை சங்க நூல்கள் பல இடங்களில் குறிப்பிடுகின்றன. சங்க இலக்கியங்களில் உள்ள இத்தகைய வேத வேள்விகள் சார்ந்த ஆதாரங்களை குறிப்பிடும் பாடல்களையும் அப்பாடல்கள் இடம் பெற்றுள்ள பகுதிகளையும் தொகுத்து விரிவாகப் பேசுகின்ற “சங்கநூல்களும் வைதீக மார்க்கமும்” என்ற நூலை நீங்கள் வாசிப்பதற்கு உதவியாக அந்த நூலின் இணைப்பைக் கொடுத்துள்ளேன்.
சங்ககால தமிழ் மன்னர்களால் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களை களப்பிரர்கள் மீண்டும் பறித்தார்கள். அதனால் அவர்கள் பிற்காலத்தில் வந்த வேதம் சார்ந்த வைதீகர்களால் தூற்றப்பட்டார்கள் என்ற வரலாற்றுச் செய்தி பதிவாகி உள்ளது. இந்தச் செய்தியைக் குறிப்பிட்டுள்ள நூலின் பக்கத்தை உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன். இதே நூலை இலங்கையிலும் மொழிபெயர்த்துள்ளார். இந்த மொழிபெயர்ப்பை தரவிறக்கம் செய்து கொள்ள இதன் இணைப்பை இத்துடன் இணைத்துள்ளேன்.
தோழரின் பொய் 2. சோழர் காலத்தில் “குலுக்குச் சீட்டு“ முறையில் பார்ப்பனர்களை மட்டும் பார்ப்பனார்களால் மட்டும் குலுக்கி எடுக்கப்பட்ட பார்ப்பன சபை அங்கத்தினர்களைப் பற்றிக் கூறுகின்ற ஒரு இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. அதனை உத்திரமேரூர் கல்வெட்டு என்று சொல்லுவார்கள். இந்தக் கல்வெட்டுகளைச் சுட்டிக்காட்டி தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு ஜால்ரா அடித்து வந்த அடிவருடி கல்வியாளர்களும் சோழர்காலத்திலேயே தமிழ்நாட்டில் தேர்தல் முறை இருந்ததாக தமிழ் மக்களின் காதுகளில் பூ சுற்றி கப்சா அடித்து வந்ததை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இத்தகைய கப்சாவை தானும் அடித்து ஒரு கூடுதல் கப்சாவையும் தோழர் இணைத்துக் கொள்கிறார். அது என்னவென்றால் இந்த இரண்டு கல்வெட்டுகளும் கி.பி.919 இல் முதலாம் பராந்தக சோழன் என்று குறிப்பிடப்படுகின்ற இராஜராஜனின் பாட்டனாரால் வெளியிடப்பட்டது என்பதை மறைத்து இராஜராஜ சோழன் வெளியிட்டார் என்பதுதான். இந்தச் செய்திகான ஆதாரத்திற்கான படத்தையும் இணைத்துள்ளேன்.
( “சங்கநூல்களும் வைதீக மார்க்கமும்” )
http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ0luUy&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D#book1/
(தென் இந்திய வரலாறு - இலங்கை மொழிபெயர்ப்பு)
http://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81
குறிப்பு
கி.பி. 8 ம் நூற்றாண்டு வாக்கில் வெளியிடப்பட்ட வேள்விகுடி செப்பேடு சங்ககால மன்னர்கள் பார்ப்பனர்களுக்கு வழங்கிய நில கொடைகள் களப்பிரர்கள் பறித்து பொது மக்களுக்கு அளித்ததாகவும் நெடுஞ்சடையன் பராந்தகன் என்ற பாண்டிய மன்னன் பொது மக்களிடமிருந்த நிலங்களை மீண்டும் பறித்து பார்ப்பனர்களுக்கு வழங்கியதைப் பேசுகின்றது. இந்த வேள்விகுடிச் செப்பேடு பதிவாகியுள்ள பாண்டிய செப்பேடுகள் பத்து என்ற பெரிய நூலின் இணைப்பையும் கொடுத்துள்ளேன்.
(பாண்டியர் செப்பேடுகள் பத்து) வேள்விகுடி செப்பேடும் இதனுள் உள்ளது.
http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZI8kJQy&tag=%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
தோழர் பெ.மணியரசன் அவர்களின் வீடியோ இணைப்பு https://www.facebook.com/tamizhdesiyam/videos/2063637237273502/

No comments:
Post a Comment