Friday, May 18, 2018

1990-ல், ஈழம் பற்றிய ஜெயகாந்தனின் தெளிவான பேச்சு

1990-ல், ஈழம் பற்றிய ஜெயகாந்தனின் தெளிவான பேச்சு.
ஈழ வரலாற்றை 1990யிலிருந்து தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
சாகித்திய விருது, பத்ம பூஷன் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன்.
இந்த காணொளி 1990 ல் தமிழ் தேசிய கூட்டணியால் சென்னையில் நடத்தப்பட்டது. இதில் தமிழ் தேசியவாதி மாபொசியும் கலந்து கொண்டுள்ளார்.
அன்றைய நாளில், ஈழத்திற்காக இரு அணிகள் போராடினர்.....
அமைதி வழியில், பத்மநாபா, அமிர்தலிங்கம் தலைமையில் ஒரு அணியும்,
ஆயுதம் ஏந்தி வன்முறை வழியில் பிரபாகரன் தலைமையில் ஒரு அணியும் போராடினர்.
1990-ல், பிரபாகரனும், பத்மநாபாவும் சென்னை வந்திருந்தனர்.
சென்னையில் அப்போது கலைஞர் முதல்வர்.
பத்மநாபா தேர்தல் களத்தில் பிரபலமாகி வந்தார். தமிழ் இளைஞர்களிடம் செல்வாக்கு பெற்று வந்த பத்மநாபாவை பிரபாகரனுக்கு பிடிக்கவில்லை.
பத்மநாபா, பிரபாகரன் இருவரும் தங்களுக்குள் அடித்து கொள்ளக்கூடாது ..ஒற்றுமையாக இருங்கள் என்று பல முறை பல தலைவர்கள் அறிவுரை கூறி வந்தனர்.
ஆனால், அதை பொருட்படுத்தாமல் பிரபாகரன், 1990-ல், சென்னை கோடம்பாக்கத்தில், பட்டப்பகலில், பத்மபாவையும், அவர் உடன் இருந்த மற்ற 10 தமிழ் தலைவர்களையும் சுட்டு கொன்றுவிட்டு தப்பித்து விட்டார்.
கடல் வழியாக தப்பிக்க முயன்ற பிரபாகரனை தமிழக போலீஸ் மடக்கி பிடித்து விட்டது. கலைஞரிடம் தகவல் செல்கிறது. ஆனால், முதல்வர் கலைஞர் பிரபாகரனை தப்பிக்க விட்டு விடும்படி காவல்துறையிடம் கூற பிரபாகரன் சென்னையை விட்டு தப்பி இலங்கை சென்று விட்டார். அதுதான் பிரபாகரனின் கடைசி சென்னை பயணம். பிரபாகரனை தப்ப வைத்ததே கலைஞர்தான். அன்று கலைஞர் அப்படி செய்ய வில்லை என்றால் பிரபகாரன் தமிழக சிறையில் எப்போதோ தூக்கிலிடப்பட்டிருப்பார்.
பத்பநாபா கொலையை கண்டித்து அன்றைய தமிழ் தேசியவாதிகள்(ஜூன் 1990) கண்டன கூட்டம் நடத்தினர்.
புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஜெயலலிதா கலைஞர் மீது தமிழ் நாடு முழுவதும் பரப்புரை செய்கிறார்.
150 MLA க்களுடன் அருதி பெரும்பான்மை திமுக ஆட்சி, ஜெயலலிதா, சுப்பிரமணியம் சாமி தூண்டுதலின் பேரில் கலைக்க பட்டது.
ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆக, புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்ய படுகிறது. புலிகளை ஆதரித்து பேசிய வைகோ, சுபவீ போன்றவர்கள் பொடாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டனர். பிரபாகரன் தூக்கிலிடப்பட்ட வேண்டும் என்று சட்டசபையில் சீமானின் மாமனார் காளிமுத்து தலைமையில் ஜெயலலிதா தீர்மானத்தை நிறைவேற்றுகிறார்.
ஆனால், புலிகளுக்கு எதிராக பேசிய மபொசி யைத்தான் சீமான் தலைவர் என்கிறார், ஜெயலலிதாவை ஈழத்தாய் என்கிறார். காளிமுத்து மகளை திருமணம் செய்து கொண்டார்.
ஜெயகாந்தன் அன்றே சொல்லிருக்கிறார் ..புலிகள் அழிவுப்பாதையை நோக்கி செல்கின்றனர்..அவர்கள் அழிவார்கள் என்று.
ஏறத்தாழ 20 ஆண்டுகள் கழித்து ஜெயகாந்தன் சொன்னது போலவே புலிகள் தானும் அழிந்து, தமிழர்களும் அழிய ஒரு காரணமாகி விட்டனர்.

No comments: