Saturday, May 19, 2018

இனி ஈழம் அழியும் என கண்ணால் கண்ட சாட்சிகள் மிக சில

ஆளாளுக்கு முள்ளிவாய்க்கால் என கதறுங்கள், அலறுங்கள், பிரபாகரன் மீன்பிடித்து பொரித்து கொடுத்தான் என கதையும் விடுங்கள்
ஆனால் இனி ஈழம் அழியும் என கண்ணால் கண்ட சாட்சிகள் மிக சில, தமிழகத்தில் இதனை பற்றி பேசும் ஒரே தகுதி கொண்டவர் மிக சிலர், சில‌ர் மகா முக்கியமானவர்கள் ஆனால் அவர்கள் வாய்திறப்பதில்லை
பண்ருட்டி ராமசந்திரனும் ப.சிதம்பரமும் அதில் முக்கியமானவர்கள்.
ப.சிதம்பரம் பிரபாகரன் இந்தியாவில் பயிற்சிபெறும்பொழுது அவனை தன் பாதுகாப்பிலே வைத்திருந்தார், திராவிட கும்பலோடு பழகிய பிரபாகரன் சிதம்பரத்திடம் சொல்லிகொள்ளாமலே ஈழம் கிளம்ப அவருக்கும் பிரபாகரனுக்கும் பொருந்தவில்லை, அந்த உறவை பிரபாகரனே முறித்தார்
பண்ருட்டி ராமசந்திரனை முதல்வர் ராமசந்திரன் ஈழவிவகாரங்களை கையாளும் பொறுப்பையே கொடுத்திருந்தார்
ஐ.நாவில் ஈழதமிழருக்காக பேசிய இந்திய அரசபிரதிநிதி இன்றுவரை பண்ருட்டி ஒருவர்தான்
ஈழசிக்கலின் தொடக்கபுள்ளி ராஜிவும் பிரபாகரனும் டெல்லியில் சந்தித்த அந்த நிகழ்வு
ஏன் இந்தியா நேரடியாக தலையிட்டது என்றால் அந்த வடமாராட்சி முற்றுகைக்கு பின்
அந்த 1987ல் என்ன நடந்தது என்றால் வடமாராட்சியில் இதே முள்ளிவாய்க்கால் போல் புலிகளை சுற்றியது இலங்கைபடை, புலிகள் இதே போல் மக்களை கேடயமாக பிடித்து பயமுறுத்தினர்
மொத்தமாக கொல்லும் முடிவிற்கு ஜெயவர்த்தனே வந்தபொழுதுதான், இந்தியா கப்பலில் முதலில் உதவிபொருளை அனுப்பியது, திருப்பி அனுப்பியது இலங்கை
சட்டென உத்தரவிட்டார் ராஜிவ், இந்திய ராணுவ விமானம் உதவிபொருளோடு பறந்தது, அதற்கு பாதுகாப்பாக மிக் ரக விமானமும் பறந்தது
அலறியது இலங்கை, ஐநா அனுமதி கூட இன்றி தைரியமாக செய்தது ராஜிவ் அரசு. இனி புலிகளால் ஈழமக்களை காக்க முடியாது இந்தியா தலையிட்டே தீரவேண்டும் என்ற முடிவு அப்ப்போழுதுதான் வந்தது
இந்தியா இலங்கை ஒப்பந்தம் அப்பொழுதுதான் போட வேண்டும் என முடிவு செய்யபட்டது
எல்லா இயக்கமும் ஏற்க பிரபாகரன் முரண்டு பிடித்தார், இறுதியில் டெல்லிக்கு இந்திய ஹெலிகாப்டர் அவரை திருச்சி வழியாக ஏற்றி வந்து பேச்சுவார்த்தை நடத்தியது
எங்களை மட்டுமே போராளிகளாக ஏற்க வேண்டும், ஒப்பந்தத்தில் எங்களை சேர்க்க வேண்டும் என ஏகபட்ட நிபந்தனைகளை விதித்தார் பிரபாகரன்
இந்தியா மறுத்தது, சர்வதேச விதிபடி ஒரு நாடு இன்னொரு நாட்ட்டோடுதான் ஒப்பந்தம் போடமுடியும், இதோ சிரியாவில் கூட அப்படித்தான் நடக்கின்றது, இதை எந்நாடும் மீற முடியாது
கடும் அடம்பிடித்த பிரபாகரனை பல வழிகளில் சம்மதிக்க வைக்க எடுத்த முயற்சிகள் தோற்றன, தாங்கள் பல குழுக்களில் ஒன்று என்பதை ஒப்புகொள்ள பிரபாகரன் மறுத்தார்
எல்லா குழுக்களையும் ஒழித்துகட்ட அவர் நினைத்தது இங்குதான்
இறுதியில் தமிழகத்து இரு ராமசந்திரன்களையும் அழைத்தார் ராஜிவ் காந்தி
அதுவரை ஈழவள்ளல், பிரபாகரனின் கொடையாளி என்றெல்லாம் சொல்லபட்ட எம்ஜி ராமசந்திரன் ஆளைவிட்டால் போதும் என ஓட்டம் பிடித்தார்
காரணம் அன்று ராஜிவ்காந்தி ஜெயலலிதாவினை வளர்க்க நினைத்தது அவருக்கு பிடிக்கவில்லை, இதற்காக புலிகளை ஆதரித்து ராஜிவ் எதிர்ப்பு அரசியல் செய்தார். நிலமை எல்லைமீறி செல்ல ஓடியே விட்டார் எம்ஜிஆர்
இறுதிவரை பேச்சுவார்த்தையில் இருந்தது பண்ருட்டி
இறுதியில் சம்பிரதாயத்திற்கு சில ஆயுத ஒப்படைப்பு, மாதம் இந்தியா 50 லட்சம் தரும் போன்ற சில வாக்குறுதியோடு சம்மதித்தார் பிரபாகரன், ஆனால் முழுமனம் இல்லை
எப்படியும் யுத்தம் தொடர்வார் என இந்தியாவும் எதிர்பார்த்தது, பிரபாகரனும் அதே முடிவில் இருந்தார்
அமைதி ஒப்பந்தத்திற்கு தற்காலிகமாக பிரபாகரனை சம்மதிக்க வைக்க பெரும் விலை கொடுத்தது இந்தியா
(காரணம் புலிகள் வரிவசூல் செய்ய கூடாது என்றது இந்தியா, பின் எப்படி இயக்கம் நடத்த என எதிர்த்தார் பிரபாகரன் இதற்குத்தான் இந்த தொகை
ஆனால் பின்னாளில் அதை 1 கோடியாக மாற்றி கேட்டு அழிச்சாட்டியம் செய்து , அதாவது இந்தியா ஈழம் பக்கம் வரவே கூடாது என அமைதிபடையோடு மோதி சிங்களனோடு பிரபாகரன் கை கோர்த்தது வேறு கதை)
இந்த முடிவு கடைசியில் எடுக்கபட்டது , ஆனால் நாள் முழுக்க நடந்த வார்த்தை சண்டையில் தீட்சித், அண்டன் பாலசிங்கம், பண்ருட்டி ராமசந்திரன், அதிகாரி பூரி என சிலர் இருந்தனர்
முதலில் ஒப்பந்தத்தை கிழித்து எறிந்தார் பிரபாகரன், ஆளாளுக்கு பேசி பார்த்தனர், எதுவும் நடக்கவில்லை
அப்பொழுது அதிகாரி பூரி சொன்னார்
"பிரபாகரன் நிச்சயம் உங்களுக்கு ஒருநாடும் உதவ வராது, நீங்கள் எல்லோரும் மொத்தமாக செத்துகிடந்தாலும் வராது
உங்களுக்கு ஓரளவு உதவ கூடியது இந்தியா, இதை தவிர உங்களுக்கு ஒரு முடிவும் இல்லை. மீறினால் பேரழிவு
அழிவு மட்டுமே சாத்தியம், அதனால் இதனை ஏற்றுகொள்ளுங்கள்"
பிரபாகரன் முறைக்க ஆண்டன் பாலசிங்கம் சொன்னார், நீங்கள் சொல்லும் மாகாண ஆட்சியினை விட தனிநாடு அடைய தலைவருக்கு தெரியும், நீர் கிளம்பும்
பூரி சொன்னார், ஒருநாள் உணர்வீர்கள் அன்று எல்லாம் அழிந்திருக்கும்
ஆனால் புலிகள் வாயை மூடி கிளம்பும் என்ற தொணிக்கு வந்தனர்
இதை எல்லாம் பார்த்துகொண்டிருந்த சாட்சி பண்ருட்டி ராமசந்திரன்
ராஜிவும் பிரபாகரனும் பேசும்பொழுது அவர்தான் இருந்தார், ராஜிவ் தன் குண்டு துளைக்கா சட்டையினை பிரபாகரனுக்கு கொடுத்தபொழுதும் அவர்தான் கூட இருந்தார்
பின் காட்சிகள் மாறின, அமைதிபடை மோதல் தொடங்கி 1500 வீரர்கள் செத்து இந்திய வீரர்கள் பிணமாக வரும்பொழுது இந்திய ராணுவம் சொன்னது
"ஒரு நாள் அவர்கள் யாரும் கேட்க ஆளில்லாமல் அனாதையாக அழிவார்கள்"
பின் ராஜிவ் கொலையோடு இந்தியா அடித்து சொன்னது, இனி ஈழமாகாணத்திற்கு கூட வழியில்லை
இறுதியில் அந்த அதிகாரி பூரி சொன்னதுதான் நடந்தது "நீங்கள் ஒரு உரிமையும் இல்லாமல் இருக்கின்றீர்கள், ஒருங்கிணைந்த மாநில அரசை ஏற்றுகொள்ளுங்கள், இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லாமல் போய்விடுவீர்கள்"
இன்று ஒன்றுமே இல்லா நிலைதான் இருகின்றது
முள்ளிவாய்க்கால் கொடுமைக்கு முதல் புள்ளி அந்த டெல்லி சம்பவம் , பிரபாகரன் இந்திய கையினை தட்டிவிட்ட சம்பவம்
இனி புலிகளால் பேரழிவு அங்கு நடக்கும் என கட்டியம் கட்டி சொன்ன சம்பவம் அது
இதை அருகில் இருந்து பார்த்த பண்ருட்டி ராமசந்திர்ன, இன்னும் சில அதிகாரிகள் உண்டு
அவர்கள் எல்லாம் புலிகளால் இலங்கை எரியும் அழியும் என உணர்ந்து அன்றே அமைதி ஆனவர்கள், அதுவும் ராஜிவ் கொலைக்கு பின் கனத்த அமைதி
இவர்கள் எல்லாம் இன்று அமைதியாக இருக்க, அந்த 1987ல் சிவகங்கை பக்கம் ஒரு கிராமத்தில் மாட்டுசாணம் அள்ளிகொண்டிருந்த சைமனும், தஞ்சாவூர் பக்கம் தவழ்ந்து கொண்டிருந்த திருமுருகனும்
அன்று பிறக்கவே இல்லா சில பதர்களும் என்னவெல்லாமோ பேசிகொண்டிருக்கின்றன‌
எங்கள் சொல் கேளாமல் ஆயிரகணக்கான மக்களோடு அழிந்தாயே பிரபாகரா என கண்ணீர்விடும் தகுதி இன்றைய தேதியில் பண்ருட்டி ராமசந்திரனுக்கும், பா.சிதம்பரத்திற்கு மட்டுமே உண்டு
வேறு ஒரு பயலுக்கும் இல்லை...
(இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம், இந்த இன உணர்வாளர்களின் குருநாதர் ம.நடராசன் என்ன செய்துகொண்டிருந்தார்
அவர் ஜெயலலிதாவினை அதிமுக தலைவராக ராஜிவிடம் நடையாய் நடந்தார், எல்லா தரகு வேலையும் செய்தார். புலிகள் ஒழிக்கபடவேண்டும் என்பதில் ராஜிவிற்கு ஆதரவாய் இருந்தார்
ராஜிவினை போயஸ்கார்டனுக்கு அழைத்து விருந்து கொடுத்த காலமும் உண்டு
ஈழம் பற்றியோ, புலிபற்றியோ ஒரு துரும்பும் அவர் செய்யவில்லை, மாறாக அவர் ஈழம்பற்றி கவலைபட்டது எல்லாம் கலைஞருக்கு எப்படி சிக்கலை உண்டாக்கலாம் என்பது பற்றியே..)

No comments: