Friday, May 18, 2018

பிறரை குறை சொல்வதை தவிர்த்து ஈழ மக்களும் ஈழ ஆதரவாளர்களும் இதை முதலில் உணரவேண்டும்

21 ம் நூற்றாண்டில் தமிழர்கள் கேட்டது இரண்டு தனிநாடுகள் இரண்டும் கிடைக்காத நிலையில் இவற்றின் இன்றைய நிலை ?
தனிநாடு பெறுவதென்றால் இழப்பின்றி முடியவே முடியாது இதனால் நாம் பெரும் உயிரிழப்பை சந்திக்க நேரிடும் போராட்டங்களாலும் கலவரங்களாலும் தமிழகத்தின் வளர்ச்சி இந்தியாவின் கடைசி இடத்திற்கு தள்ளப்படும் இந்திய ராணுவத்துடன் நடக்கும் சண்டையில் நம் தமிழ் சகோதரிகள் லட்சக்கணக்கில் விதவையாவது உறுதி என்பதும் அப்படி பல இழப்புகளை சந்தித்தாலும் திராவிடநாடு கிடைக்காது என்பதையும் தெள்ள தெளிவாக அறிந்துதான் அண்ணா கலைஞர் போன்ற தலைவர்கள் அன்றே திராவிடநாடு கோரிக்கையை கைவிட்டனர் அதன் பலனாகதான் வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழகம் இன்றும் தொடர்ந்து டாப் 3 இடத்திற்க்குள் இருக்கிறது ஆசியாவின் மிகபெரிய நகரங்கள் பட்டியலில் சென்னை செழிப்பாக இருக்கிறது நாம் தமிழ்நாட்டில் நிம்மதியாக வாழவும் தூங்கவும் முடிகிறது
ஆனால் அதேவேளையில் ஈழ பகுதிகளை கொஞ்சம் உற்று நோக்குங்கள் போரில் பல சமாதான வாய்ப்புக்களை உதறி தள்ளிய சக போராளி தலைவர்களை கொன்று குவித்த சாகபோகிறோம் என்று தெரிந்தும் பிரபாகரன் என்ற சரியான முடிவெடுக்க தெரியாத தலைவரால் இன்று இவர்கள் கேட்ட அந்த ஈழ நாடே உருத்தெரியாமல் அழிந்து கிடக்கிறது. ஒரு மகாராஷ்டிரா போலவோ ஒரு தமிழ்நாடு போலவோ வளர்ந்திருக்க வேண்டிய ஈழ பகுதிகளின் இன்றைய நிலை கொடூரமானது அடிப்படை வசதிகூட இல்லாத நிலையில் பரிதாபமாக சுற்றுகிறார்கள் தமிழகத்தை போல கல்வியில் எஞ்சினியரிங் மருத்துவம் உள்பட எந்தவித மேற்படிப்புகளும் படிக்க கல்லூரியும் இல்லை படித்தால் வேலை கொடுக்க கம்பெணிகளும் இல்லை தமிழகத்தை போல மானாட மயிலாட நிகழ்ச்சியோ Vgp குயின்ஸ்லேண்ட் Mgm என குடும்பத்தை மகிழ்விக்க எந்த போழுது போக்கும் டிஸ்கோத்தே ஹோட்டல் பார்ட்டி என்று எந்த உல்லாச வாழ்க்கைகளும் கிடையாது நம்ம ஊர் போல மெட்ரோ ரயிலும் கிடையாது நம்ம ஊர் போல பல ஏர்போட்டுகளும் கிடையாது அதைவிட திருநெல்வேலி அளவுக்கு கூட ஈழத்தில் ஒரு ஊர் கிடையாது ஆகையால் பிரபாகரன் போல சரியாக முடிவெடுக்க தெரியாத தலைவர்களால் தனிநாடு கேட்ட ஈழம் சுடுகாடாய் மாறியதையும் கண்கூடாக பார்க்கிறோம்
அண்ணா கலைஞர் போன்று திராவிடநாடு வேண்டாமென முடிவெடுத்த நல்ல புத்திசாலி தலைவர்களால் தனிநாடு கேட்ட தமிழ்நாடு தனிநாடு கிடைக்கவில்லை என்றாலும் தன்னிறைவான வளர்ச்சியை பெற்றிருக்கிறது என்பதே உண்மை பிறரை குறை சொல்வதை தவிர்த்து ஈழ மக்களும்
ஈழ ஆதரவாளர்களும் இதை முதலில் உணரவேண்டும்.

No comments: