Saturday, May 19, 2018

தமிழரையே சுட்டு கொல்லும் இவர்களா தமிழர் உரிமையினை பாதுகாப்பார்கள்?

இந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வு என்பதே கலைஞரையும் காங்கிரசையும் திட்டுவதற்கு என்றே நடத்தபடுகின்றது, நடக்கட்டும்
இதில் 2005ல் நடந்த சம்பங்கள் , 2009க்கு எப்படி வழிவிட்டது என்பதை மட்டும் எல்லோரும் மறக்கின்றார்கள், உண்மையில் புலிகள் ராஜிவ் கொலையில் சாகவில்லை. அவர்கள் செய்த ஏகபட்ட அட்டகாசங்களுக்காக சாகவில்லை
2001ல் உலகளாவிய தீவிரவாதிகள் நெட்வொர்க்கை பின்லேடன் அட்டகாசத்தையொட்டி அமெரிக்கா தேட தொடங்கியபொழுது பல்வேறு தீவிரவாதகுழுக்களுடன் புலிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது
உச்சமாக வடகொரியாவிடம் இருந்தும் எல்லா தீவிரவாதிகளுக்கும், புலிகளுக்கும் ஆயுதம் வருவது கண்டறியபட்டது
புலிகள் ஒரு இணைப்பு புள்ளியாக இருப்பதை உணர்ந்த சக்திகள் , புலிகளை அமைதியாக்க விரும்பினர். அழிக்கும் திட்டமெல்லாம் அப்போது இல்லை
சில தீர்வுகளை பெற்றுகொண்டு அமைதியாக இருங்கள் இனி ஆயுதம் எடுக்க கூடாது என சொல்லி நார்வே தூதுகுழுவினை அனுப்பியது.
அகாலத்தில் இந்தியா சொன்னதும் இதுதான், அமெரிக்கா கடைசியில் சொன்னதும் இதுதான்
இலங்கை அரசுக்கு எதிராக அங்கு ஒரு சக்தி வேண்டும், ஆனால் அந்த சக்தி ஆயுதமில்லா சக்தியாக இருக்க வேண்டும்
அதற்கு பெப்பே காட்ட நினைத்தனர் புலிகள், அமெரிக்கா சகித்துகொண்டது, அப்பொழுது இலங்கை அரசு சார்பில் ஒரு தமிழரே பேசிகொண்டிருந்தார்
அவர் பெயர் ல்ஷ்மன் கதிர்காமம்
ஆம் அவர் தமிழர் ஆனால் இலங்கை அரசபிரதிநியாக அவர்தான் வெளிநாடுகளில் பேசினார்
"எங்கள் பிரதிநிதியே தமிழர் இதற்குமேல் நாங்கள் எப்படி உரிமை கொடுக்கமுடியும், இந்த இலங்கையிலா இன அடக்குமுறை உலகமே.." என இலங்கை சொன்னபொழுது மேற்குலகத்தால் தட்டமுடியவில்லை
இந்த லஷ்மன் கதிர்காமத்தை துரோகி என அறிவித்த புலிகள் கொழும்பிலே அவரை சுட்டு கொன்றனர்
வாய்ப்பினை அட்டகாசமாக பயன்படுத்திய இலங்கை, கொழும்பிற்கான அமெரிக்க தூதரிடமே அழுதது. "இந்த கொலைவெறியர்களிடம் என்ன சமாதானம் பேச சொல்லுங்கள், தமிழரையே சுட்டு கொல்லும் இவர்களா தமிழர் உரிமையினை பாதுகாப்பார்கள்? இவர்களுக்கா பேச வந்தீர்கள்?" என்றெல்லாம் வாதிட்டது
அன்று அமைதியாக இருந்த அமெரிக்க தூதர் இருநாள் கழித்து அறிக்கை வெளியிட்டார்
"புலிகள் இன்னும் போரை தொடர்ந்தால் மிக மிக அவமானமான அழிவுக்கு ஆளாவார்கள், அவர்கள் இருந்த தடமே இங்கு இருக்காது"
ஆனால் பிரபாகரன் திருந்தவில்லை, பாலசிங்கம் விலகினார், அப்படியே மரணமடைந்தார்
மீண்டும் மாவிலாறு அணையினை பூட்டி சிங்களனை வம்புக்கு இழுத்தனர் புலிகள், சண்டை அங்குதான் 20006ல் தொடங்கியது
அத்தோடு தன் சமாதான முகமான நார்வேயினை பின்னுக்கு இழுத்துவிட்டு தன் கோரமுகமான இஸ்ரேலை இறக்கியது அமெரிக்கா
இஸ்ரேல் தளபதிகளே இறுதி திட்டத்தை கொடுத்தனர், அது அக்காலத்திலே மோஷே தயான் வகுத்த திட்டங்களில் ஒன்று
"அதாவது நேருக்கு நேர் மோதாதே, 4 புறமும் இருந்து தாக்கு எதிரி சிதறுவான், அப்பொழுது இன்னொரு சில படைபிரிவுகளை உள்ளே இறக்கு எதிரி குழம்புவான்
அப்பொழுது கையில் கிடைத்தவனை எல்லாம் போட்டு அடித்து கொல்"
சிங்கள அரசு 200ல் தொடங்கிய யுத்தத்தை 2009ல் தான் முடித்தது, அதாவது ஒரே நாளில் முடிக்க முடியும் ஆனால் அழிவுகள் பெருகும் என அது முடிந்தவரை நிதானமாகத்தான் செய்தது
2 வருட அவகாசத்தையும் கணக்கில் எடுக்கா புலிகள் இறுதியில் அழிந்தனர்
இதெல்லாம் எவனும் பேசமாட்டான், கலைஞர் கெடுத்தார் இந்தியா கெடுத்தது என சொல்லிகொண்டே இருப்பான்
புலிகளின் இமாலய தவறு அந்த லஷ்மன் கதிர்காமர் எனும் தமிழரை கொன்றது
அது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழர் கொலையோடு பிரபாகரன் சாவோடு முடிந்தது

No comments: