Friday, May 18, 2018

மதிய உணவுத் திட்டம்

உண்மையில் மதிய உணவுத்திட்டம் உங்களால் 'முன்னேற்றக்கழகம்'
எனக் கிண்டலடிக்கப்படுபவர்களின் முன்னோடிகளால் கொண்டுவரப்பட்டதுதான்
மிஸ்டர் .S P Udayakumaran
**************************
இந்த மதிய உணவுத் திட்டம்...
மதிய உணவுத் திட்டம்...
எனக்கூவுவதும் அதற்கு காமராசரை முழுமுதற் கடவுளாக்கிப் புகழ்வதும்
கூட ரொம்ப சாமர்த்தியம்தான்.
ஆனால் உண்மை வரலாறு என்னவென்றால் இன்று கோயாபல்சை விடப்பெரிய புளுகாண்டிகளாய் மாறிப்போன தமிழ்த்தேசிய முட்டாள்களால் தெலுங்கர்கள் மலையாளிகள் என அவதூறு செய்யப்படும் நீதிக்கட்சியினரின் ஆட்சிக் காலத்தில் பகுதி பகுதியாக அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டு பின்பு காமராசர் ஆட்சிக்காலத்தில் சென்னை மாகாணம் முழுவதும் அதாவது இன்றைய கேரளம், ஆந்திரம்,கர்நாடகம்,தமிழ்நாடு, ஓரிசாவின் சிலபகுதிகள் வரை விரிவுப்படுத்தப்பட்டதுதான் இந்த மதிய உணவுத் திட்டம்.
இந்த கோரிக்கையையும் முதன்முதலாக அன்றிருந்த சட்ட மேலவையில் பனகல் அரசர் முன்னிலையில் கோரிக்கையாக எழுப்பியவர் திரு.எல்.சி.குருசாமி அய்யா அவர்கள்.(காண்க:"ராவ்சாகிப் எல்.சி.குருசாமி சட்டமேலவை உரைகள்" :தமிழாக்கம் ம.மதிவண்ணன்.) இந்த வரலாற்றை நினைவுப்படுத்துவதன் மூலம் மாமனிதர் பெரியாரால் 'பச்சைத் தமிழர்'எனச் செறிவூட்டப்பட்டு முன்னிறுத்தப்பட்ட காமராசர் அவர்களின் மதிப்பை குறைத்துக் காட்டுவதாகாது .
திரு 'உத்தம' உதயகுமாரன்களால் தொடர்ந்து கேலியும் கிண்டலுமாக ஏசப்பட்டுஞம் திராவிடர் இயக்க முன்னோடிகளாம் 'ஆங்கில ஏகாதிபத்திய அடிமைகள்'
'மிட்டாமிராசுகள்' 'பூர்ஷ்வா வர்க்க பிழைப்புவாதிகள் ' என இன்றுவரை பார்ப்பனப்பொறுக்கி பத்திரிகையாளர்களாலும்
அவர்களின் அடியொற்றிப்பிழைக்கும் தற்குறி சூத்திரமுட்டாள்களாலும் அவதூறு செய்யப்பட்டு வருகிற நீதிக்கட்சியினர் போட்ட சமூக நீதிப் பாதையில் பெரியாரின் வழிகாட்டுதல்களின் படியும் நடந்ததாலேயே 'காமராஜ் நாடார்' என அன்றைய சமூகத்திற்கு அறிமுகமாகியிருந்த காமராஜர்
'பச்சைத் தமிழர் காமராசர்' ஆனார்.
ஆனாலும் பாருங்கள் உதயகுமார்
உங்கள் 'பச்சை வேறு'
எங்கள் 'பச்சை'வேறுதான்.
*பின்குறிப்பு: காமராசருக்கும் பெரியாருக்கும் இருந்த சமூகநீதி உறவு நிலைகளைப் புரிந்துகொள்ள சென்னைப் பல்கலைக் கழகத்தின்
முன்னாள் துணைவேந்தராகவும் காமராசர் ஆட்சிக் காலத்தில் கல்வியதிகாரியாகவும் இருந்த நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் எழுதிய#எனதுநினைவலைகள்"என்கிற இரு தொகுதிகளையும் அவசியம் வாசியுங்கள்.

No comments: