Saturday, May 19, 2018

நாங்கள் உண்மையை கூறுகிறோம் அதை திரித்துரைக்கும் வேலையை நீங்கள் செய்கிறீர்கள்.

திமுக காமராஜரை விமர்சித்தது. காமராஜருக்கு எதினான கட்சி.
-காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக 24.05.2006 அன்று அறிவித்தவர் கலைஞர்.
திமுக நாத்திக கட்சி. கடவுள் மறுப்பாளர்களை கொண்டது. கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு எதிரானது.
-பெரியார் தான் கோவிலுக்குள் செல்லும் உரிமைக்காக போராடினார். கலைஞர் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை 02.12.1970 இல் கொண்டு வந்தவர்.
திமுக தமிழ் மொழிக்கு எதிரான கட்சி. தமிழை அழித்தவர்கள் அவர்கள் தான்.
-இருமொழி கொள்கையை கொண்டு வந்தவர் அண்ணா. கடைகளின் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும்‌ திரைப்படங்களின் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர். தமிழ்தாய் வாழ்த்து கொண்டு வந்தவர் கலைஞர்.செம்மொழி மாநாடு நடத்தியவர் கலைஞர்.
திமுக தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தை விமர்சிப்பவர்களை கொண்டது‌. கண்ணகியையும் பழிப்பவர்கள்.
-கண்ணகிக்கு கோவில் எழுப்பயவர் கலைஞர்.
திமுக வில் இருப்பவர்கள் திருவள்ளுவரை கூட விமர்சிப்பவர்கள்.
-திருவள்ளுவருக்கு 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் முடிவு இங்கு என்று சொல்லாதீர்கள் இதுதான் ஆரம்பம் என்று சொல்லும்படி வானுயர சிலை அமைத்தவர் கலைஞர்.
இதே போல் நாங்கள் இன்று பிரபாகரன் அவர்களையும் விமர்சிக்கிறோம். அது விமர்சனம் மட்டுமே. மற்றவர்கள் எங்கள் மீது உமிழ்வதை போன்ற காழ்ப்புணர்வு அல்ல. சொல்லமுடியாது ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு அவருக்கு சிறப்பு செய்யும் வகையில் தமிழகத்தில் ஏதேனும் ஒரு நினைவகமோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றோ கூட அமைக்கப்படலாம். அல்லது அவ்வாறு அமைந்தால் அது திமுக ஆட்சியில் மட்டுமே நடக்கும்.
நாங்கள் உண்மையை கூறுகிறோம். ஆனால் அதை திரித்துரைக்கும் வேலையை நீங்கள் செய்கிறீர்கள். நாங்கள் பேசுவது உண்மை என்பது உங்களுக்கும் புரியும். காலம் தான் அதற்கான விடை.

No comments: