நான் அலுவல் நிமித்தமாக இரண்டு அல்லது மூன்று மாநிலங்களுக்கு
சென்றிருக்கிறேன். வட இந்தியாவில் வசித்தும் இருக்கிறேன். அப்பொழுதெல்லாம்
நமது மொழியைப் பற்றிய தீவிரமான சிந்தனைக்குத் தள்ளப் பட்டிருக்கிறேன். நம்
தமிழைத் தவிர வேறு எல்லா இந்திய மொழிகளிலுமே க, ச, ட, த,ப ஆகியவற்றில்
நான்குவிதமான சப்தங்கள் வரும்படி நான்கு எழுத்துக்கள் உள்ளன. அதாவது க
என்று எடுத்துக் கொள்வோம். அதில், க, kha, ga, gha என்று இருக்கும். இதே
போலத்தான் மற்ற எழுத்துக்களிலும். எனவே பேசும் பொழுது ஏற்படும் ஒலி
மாறுபட்டு தெரியும். மற்றவர்கள் உச்சரிப்பதற்கும், நாம் உச்சரிப்பதற்கும்
வேறுபாடு இருக்கும். இதை எல்லோரும் மிகவும் கேலி செய்து பேசினார்கள்.
ஒரு முறை ராஜா என்று நான் கூறினேன். உடனே அவர்கள் எங்கே ராஜா என்று உன் மொழியில் எழுதிக் காட்டு பார்க்கலாம் என்றார்கள். அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது ஜா என்கிற ஒலி ஏற்படுத்தும் எழுத்து தமிழில் இல்லை என்பது. முதலில் எனக்கு இது அவமானமாகவே இருந்தது. தமிழ் அப்படிப்பட்ட குறைபாடுகள் உள்ள மொழியா? மற்ற ஒலி சப்தங்களை சரியாக உச்சரிக்கும் படியான வசதிகள் இங்கு இல்லையா என்று இரவு பகலாக யோசித்தேன். சிறிது தெளிவு கிடைத்தது. அடுத்த முறை நான் சொன்னேன். ஐயா, ராஜா என்பது தமிழ் வார்த்தையே இல்லை. உடனே ஒரே சிரிப்பு சப்தம். அப்படியானால் King என்பதை நீங்கள் எப்படி சொல்லுவீர்கள் என்று கை தட்டி சிரித்தார்கள். நானும் சிரித்து கொண்டே சொன்னேன், “ஐயா, மன்னன், வேந்தன், கொற்றவன், அரசன் என்பதுதான் எங்கள் மொழி சொற்கள். ராஜா இல்லை.” டக்கென்று சிரிப்பு சப்தம் அங்கே அடங்கியது. ஆனால் என் மன சிந்தனைகள் ஓயவே இல்லை. இது என்னை வாட்டிக் கொண்டே இருந்தது. என் தாய் தமிழில் இந்த குறைபாடு இருக்கிறதா என்று நிறைய நேரம் யோசித்து யோசித்து பார்த்த பின் எனக்கு ஒரு தெளிவு பிறந்தது.
மற்ற மொழிகளில் ஒவ்வொரு சப்ததிற்கும் ஒரு எழுத்து இருக்கிறது. ஆனால் என் தாய் மொழியில் அப்படித் தேவையே இல்லாத இயற்கையாகவே ஒரு arrangement இருக்கிறது. கீழே பல உதாரணங்கள் சொல்கிறேன். பாருங்கள்.
தலை,
புது,
மனிதம்.
மத்தது.
இந்த வார்த்தைகளை கவனித்துப் பாருங்கள். த என்கிற எழுத்து தன் இடத்திற்கேற்ப ஒலியை தானாகவே மாறுபடுத்திக் கொள்கிறது. தலையில் முதல் எழுத்து, புது என்ற வார்த்தையில் இரண்டாமிடம், மனிதம் என்ற வார்த்தையில் மூன்றாமிடம், அடுத்ததில் நான்காம் இடம். உச்சரித்துப் பாருங்கள். தானாகவே உச்சரிப்பு மாறும். ஹிந்தியில் முதல் “த”, இரண்டாம் “த”, மூன்றாம் “த”, மற்றும் நான்காம் “த” என்பதை ஒட்டி இந்த சப்தங்கள் அமைந்திருக்கின்றன. மற்ற மொழிகளைப் போல ஒவ்வொரு உச்சரிப்புக்கும் தனி எழுத்து தேவையே இல்லை.
மேலும் உதாரணங்கள்:
1) கதவு. தகவு, நாடகம், வாங்குக (“க”என்கிற எழுத்தின் உச்சரிப்பை கவனியுங்கள். ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் நான்காம் இடத்தில் உள்ளது )
2) தமிழ், பதவி, அதது, நடந்து (த என்கிற எழுத்தை கவனியுங்கள்)
அதே போல் மெய் எழுத்துகளும் இந்த வேலையை கவனித்துக் கொள்கின்றன. இப்போது பாருங்கள்:
அது, அந்த
பத்து, பந்து
ஓடு, ஓட்டை
படம், பட்டம்.
பசை, பச்சை
“த்” “ட்” “ச்” மற்றும் “ந்” என்கிற மெய்யெழுத்துக்கள் தமக்கு அடுத்து வரும் எழுத்தின் ஒலியை (அதன் உச்சரிப்பை) எப்படி மாற்றுகின்றன என்று பாருங்கள். அந்த மெய்யெழுத்துகளை எடுத்து விட்டு உச்சரித்துப் பாருங்கள். ஒலி மாறும். இந்த அற்புதமான கட்டமைப்புகள் நம் தமிழ் மொழியின் செழுமையை பறைசாற்றுகின்றன. அதே போல “ன்” மற்றும் “ண்” என்கிற எழுத்துக்களும் இந்த வேலையை சரிவர செய்ய உதவுகின்றன. பன்றி, கறி, வெற்றி, மன்னன், கண்ணன் என்கிற வார்த்தைகளை நன்றாக உச்சரித்துப் பாருங்கள். ஒலி வேறுபாடுகள் புரியும்.
எனவே அடுத்த தடவை நான் நெஞ்சு நிமிர்த்தி சொன்னேன். “தோழர்களே, என் மொழியில் எல்லா சப்தங்களையும் சொல்லும் அற்புதமான ஏற்பாடு இருக்கிறது. உங்களைப் போல ஒவ்வொன்றுக்கும் ஒரு எழுத்து என்கிற பயம் எங்களுக்கு இல்லை. அப்படி இல்லாமலேயே நாங்கள் எல்லா ஒலியையும் சரியாக உச்சரிக்க வசதி கொண்டிருக்கிறோம். அது தவிரவும் நீங்கள் உபயோகப் படுத்தும் பல ஆங்கில வட மொழி சொற்களுக்கு சரியான தமிழ் வார்த்தைகள் எங்களிடம் கொட்டிக் கிடக்கின்றன”
இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். சிலர் சில வார்த்தைகளைத் தவறாகவே உச்சரிக்கின்றனர். அதாவது குதிரை என்பதை Guதிரை என்றும் பூசை என்பதை Bhuசை என்றும் உச்சரிக்கின்றனர். தமிழில் எப்பவுமே முதல் எழுத்தின் உச்சரிப்பு “ப்ப”, “க்க, ச்ச த்த” என்கிற உச்சரிப்புகளில் மட்டுமே இருக்கும். Bha, Gha, Dha, Da என்கிற ஒலி சப்தங்கள் முதல் எழுத்தாக தமிழில் வரவே வராது. வந்தால் அவை தமிழ் மொழி சார்ந்த வார்த்தைகள் இல்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். கோபால்சாமி என்பதின் முதல் எழுத்தை Gho என்கிற சப்தம் வரும்படி உச்சரிக்கிறோம். இது தவறு. கோபால் என்பது தமிழ் வார்த்தை அல்ல.
எனவே தமிழ் மொழி வேறு எந்த மொழிக்கும் சளைத்தது இல்லை என்பதுடன் மற்ற மொழிகளை விடவும் உயர்வானதே என்பதே எனது முடிவு. நான் சொல்வது சரியா தவறா? உங்களின் மேலான கருத்துக்களை எதிர்ப்பார்க்கிறேன்.
(நான் அலுவல் நிமித்தமாக இரண்டு அல்லது மூன்று மாநிலங்களுக்கு சென்றிருக்கிறேன். வட இந்தியாவில் வசித்தும் இருக்கிறேன். அப்பொழுதெல்லாம் நமது மொழியைப் பற்றிய தீவிரமான சிந்தனைக்குத் தள்ளப் பட்டிருக்கிறேன். நம் தமிழைத் தவிர வேறு எல்லா இந்திய மொழிகளிலுமே க, ச, ட, த,ப ஆகியவற்றில் நான்குவிதமான சப்தங்கள் வரும்படி நான்கு எழுத்துக்கள் உள்ளன. அதாவது க என்று எடுத்துக் கொள்வோம். அதில், க, kha, ga, gha என்று இருக்கும். இதே போலத்தான் மற்ற எழுத்துக்களிலும். எனவே பேசும் பொழுது ஏற்படும் ஒலி மாறுபட்டு தெரியும். மற்றவர்கள் உச்சரிப்பதற்கும், நாம் உச்சரிப்பதற்கும் வேறுபாடு இருக்கும். இதை எல்லோரும் மிகவும் கேலி செய்து பேசினார்கள்.

தமிழ் உலகின் எந்த மொழிக்கும் சளைத்ததல்ல
அதே நேரத்தில் ஒவ்வொரு மொழியும் அதற்கான தனிச்சிறப்புடன் விளங்குகிறது
எனவே நாம் எந்த மொழியையும் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை
ஆனால் ஆகச்சிறந்த மொழிகளிலே தாய்மொழியாம் தமிழே...

No comments:
Post a Comment