தமிழனை பைத்தியமாக்கிய பிரபாகரன்.
1970-80 களில் தமிழகம் தான் ஈழ அமைப்புகளுக்கு புகலிடமாக இருந்துவந்தது. ராஜீவ் கொலைவரைக்குமே அதுதான் நிலை. ஈழ அரசியலை கொள்ளைத் தொழிலுக்கு பயன்படுத்திக்கொண்ட தமிழர்கள் பலர் உண்டு. ராஜிவ் கொலைச் சதியில்கூட கோடியக்கரை கடத்தல்காரன் சண்முகம் கைது செய்யப்பட்டு பிறகு தப்பியோடி தூக்கில் தொங்கி செத்தான். ஆனால் இன்னொரு பக்கம் தயைக் குணம் கொண்டபலரும் ஈழ அமைப்பினர்களுக்கு உதவியது உண்டு. சேலம் பாவரசு என்பவர் அப்படிப்பட்ட ஒருவர். பத்மநாபாவின் ஆதரவாளரான பாவரசு சென்னையில் பத்மநாபாவின் அலுவலகத்திலேயே தங்கியிருந்தார். பிரபாகரனின் தளபதியாக இருந்து பிறகு விலகிவந்த நாகராஜா என்பவர் புலிகளை விமர்சித்து அறிக்கைகளை வினியோகித்துக்கொண்டிருந்தார். நாகராஜா சென்னையில்தான் தலைமறைவாக இருந்தார் என்பதால் அவருக்கு பத்மநாபா அடைக்கலம் கொடுத்திருக்கலாம் என்று நினைத்த புலிகள் திடீரென ஒரு நாள் பத்மநாபா அலுவலகத்துள் துப்பாக்கிகளுடன் ஆவேசமாக நுழைந்தனர். அவர்களில் பிரபாகரனும் ஒருவர். நாகராஜாவோ பத்மநாபவோ இல்லாததால் அங்கிருந்தவர்களை துப்பாக்கிக்காட்டி மிரட்டினர.
தன்முன்னால் பிரபாகரன் துப்பாக்கிக் காட்டி மிரட்டிநிற்பதைக் கண்டு அதிர்ச்சியுற்ற பாவரசு மனம் குழம்பினார். ஈழத்தை ஆதரிக்கும் தன்னையும் ஏன் ஒரு ஈழப்போராளி மிரட்டவேண்டும் என்று மனம் சிதையும் நிலைக்கு சிந்தித்த பாவரசு சென்னை சாலைகளில் அழுக்கேறிய உடைகளுடனும் உடலுடனும் மழிக்கப்படாத மயிருடனும் பைத்தியமாக கிடந்தார். நாபா பலமுறை அவரை காரில் தூக்கிவந்து குளிப்பாட்டுவார். ஆனாலும் பாவரசு பைத்தியமாகவே காணாமல் போனார்.
No comments:
Post a Comment