Friday, May 18, 2018

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் - ஈழத்துரோகி, தமிழினத்துரோகி கலைஞர் ஒழிக. திமுக ஒழிக. செயலு பெயிலு

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்ற சீமான் அவர்களின் வார்த்தைக்கு இணங்க ஈழம் பெற்றுத்தந்த எங்கள் ஈழத்தாய் இதயதெய்வம் புரட்சித்தலைவி செல்வி டாக்டர் அம்மா அவர்களை இந்த நாளிலே நினைவுகூர்ந்து ஈழத்துரோகி திமுகவை திட்டுவோம்.
தமிழக மக்கள் ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுத்த அதிமுக எம்பிக்கள் 39பேர் நாடாளுமன்றத்தில் இருந்து காவிரியில் தண்ணீர்தான் பெற்றுத்தரமுடியாது. ஆனால் திமுக ஏன் ஈழம் பெற்றுத்தரவில்லை? கலைஞர் ஏன் உண்ணாவிரத நாடகம் நடத்தினார்? புரட்சித்தலைவி அம்மாவைப்போல் போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று தைரியமாகச் சொல்லக்கூட கலைஞருக்கு வக்கில்லை.
சீன ராணுவம் இலங்கை ராணுவம் இணைந்து இன அழிப்பை நிகழ்த்தியபோது இந்திய ராணுவம் போய் ஏன் தடுத்து நிறுத்தவில்லை? இந்தியா செய்த துரோகம் எத்தனை கொடுமையானது? நார்வேவும் ஐநா சபையும் தடுத்து நிறுத்தாத போரை ஏன் கலைஞர் தடுத்து நிறுத்தவில்லை. ஈழம் பெயரைச்சொல்லி பலரும் பிழைப்பு நடத்தும்போது, 1991ல் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்பதற்காக திமுக அரசை டிஸ்மிஸ் செய்தபிறகு அதிமுகவுக்கு ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த எம்மக்கள் என்ன இளிச்சவாயர்களா??
வெகுஜன மக்களை கேடயமாக்கி அங்கே ஆயுதப்போராட்டம் நடக்கிறது என்று தைரியமாகச்சொன்ன வீரப்பெண்மணி தைரியப்பெண்மணி ironlady ஜெயலலிதாவைப் போற்றுவோம். தலைவரைப் பார்க்கப்போய் ஆமைக்கறி தின்றுவிட்டு AK 74ல் ஆயுதப்பயிற்சி எடுத்த சீமான் அவர்களைப் போற்றுவோம். மெரீனாவில் தனக்கு சாதகமாகும் வரை போராட்டம் நடத்தவிட்டுப் பின் இறுதியில் போலீஸை விட்டு கொலைவெறித்தாக்குதல் நடத்திய போராட்டம் மாதிரி எதையும் நடத்தாத கலைஞரை திட்டுவோம்.
ஈழத்துரோகி, தமிழினத்துரோகி கலைஞர் ஒழிக. திமுக ஒழிக. செயலு பெயிலு.

அன்று திமுக தனது ஆதரவை விளக்கி கொள்வதாக அறிவித்திருந்தாலும் மத்திய அரசுக்கு எந்த இழப்பும் இருந்திருக்க போவதில்லை. கருணாநிதி நினைத்து இருந்தால் போரை நிறுத்தி இருக்கலாம் என்பது முட்டாள்த்தனம்.

திமுக ஆட்சியில் ராமேஸ்வரம் வழியா ஈழத்துக்கு ஆயுதம் போகுதுன்னு ஆட்சியைக் கலைக்கச்சொன்னவங்கள்லாம்தான் இப்போ நல்லவங்க. திமுக ஒழிக

திமுகவை திட்டுபவர்கள் யாரும் இதோ இங்கிருக்கும் அகதிகள் முகாமிற்கு சென்று ஒரு வேளை உணவு போட வக்கில்லாதவர்கள்.. அவர்களின் அரசியல் பிழைப்பு.

No comments: