Thursday, May 17, 2018

ஈழமும் LTTEயும் ஒன்று என நினைத்தால் , அது இஸ்லாமும் அல்-கொய்தாவும் ஒன்று என நினைப்பதற்கு ஒபபாகும்

அதென்ன டா எல்லாரும் நேதாஜியோட பிரபாகரன ஒப்பிடுறீங்க... கொஞ்சமும் அரசியல் அறிவு இருப்பவன் அதை செய்யமாட்டான்.. 
.
* இந்தியாவில் மக்கள் அஹிம்சா வழியில் போராடுறாங்க னு தெரிஞ்சி இங்க ஆயுத புரட்சி பண்ணா சரியான திசையில் போகும் போராட்டம் திசை மாறலாம், தன் போராட்ட முறையால் மக்கள் கொல்லப்பட கூடாது னு நாட்டை விட்டு வெளியேறி போராடியவர் எங்கள் மாவீரர் சுபாஷ் சந்திர போஸ்.. ஆனால் சொந்த மக்கள கேடயமா பயன்படுத்தி மக்களுக்கு நடுல ஒளிஞ்சிருந்து உயிர் வாழ்ந்தவன் பிரபாகரன்.. 
.
* சுபாஷ் சந்திர போஸ் ஆல் சுதந்திரத்திற்கு போராடிய இந்தியன் ஒருத்தன் கொல்லப்பட்றுப்பானா?மாற்றுக்கருத்து கூறிய ஒரே காரணத்துக்காக சொந்த இயக்க போராளிகளயே சித்ரவதை செய்து கொன்று, தன்னுடன் போராட வந்த 17 தமிழர் குழுக்களையும் மொத்தமா கொன்று ஈழ விடுதலை போராட்டத்தையே தன் பெயர் மட்டும் முக்கியம் னு சூனியமாக்கியவன் பிரபாகரன்.
.
* நேதாஜி என்றும் வெள்ளையனை எதிர்த்து தான் நின்றார்.. அனால் தனக்கு தேவை (இந்திய அமைதி படையை கொல்ல) என்றதும் எதிரியான சிங்களனிடமே வெக்கம் இல்லாம ஆயுதம் வாங்கியவன் பிரபாகரன்.
.
* தன் நாட்டு மக்களின் விடுதலைக்காக ஜப்பான், ஜெர்மனி னு குடும்பத்தை விட்டு அலைந்தவர் நேதாஜி.. ஆனா தன் சொந்த மக்களே வரி் கொடுமையாலும் பசி கொடுமையாலும் தன் எல்லையை விட்டு தப்பிக்க முயன்ற போது குழந்தைகள், முதியவர்கள் என்று கூட பார்க்காமல் குடும்பம் குடும்பமாக மரண தண்டனை விதித்து கொன்றவன் பிரபாகரன். (மக்கள் வெளியேறினால் யாரை கேடயமாக பயன்படுத்தி தானும் தன் குடும்பமும் உயிர் வாழ்வது?)
.
நேதாஜியுடன் எத்தனை இஸ்லாமியர்கள் இருந்தார்கள்.. ஆனா புலிகளுடன் இருந்த ஒரு 5 இஸ்லாமிய பெயர்களை சொல்ல சொல்லுங்க பாப்போம்.. முடியாது.. ஏன் னா உலகிலேயே இஸ்லாமியர்களை விடுதலை புலிகள் அளவிற்கு வெறுத்த, கொன்றொழித்த ஒரு இயக்கம் கிடையாது.. அது தெரியாம இங்கு இருக்கும் ஒரு சில இஸ்லாமியர்கள் பிரபாகரன் படத்த வச்சிருக்கும் கட்சில இருக்கீங்க.. சந்தேகம் இருந்தா pls Google, காத்தான்குடி அவலம், muslim killings of LTTE.. இலங்கை இஸ்லாமியனிடம் பிரபாகரன், புலிகள் னு சொன்ன காறி துப்புக்குவாங்க..
.
* சர்வதேச போர் நெறிமுறைகள் படி மருதுவமனை, பள்ளிக்கூடத்தில் குண்டு போட முடியாது னு தெரிஞ்சிக்கிட்டு இறுதி போரின்போது இந்த இரு இடங்களிலும் புளி குரூப்ஸ் தங்கள் உயிரை காப்பாதிக்க நோயாளிகளோடும், குழந்தைகளோடும் பதுங்கி.. அது உளவாளிகள் மூலம் ராணுவத்திற்கு தெரிந்து அங்கேயும் குண்டுகள் விழ காரணமாக இருந்தனர்.. மேலும் பல மக்களும் குழந்தைகளும இறந்தனர்.. இப்படி பட்டவர்களை நேதாஜியோடு ஒப்பிடலாமா?
.
* அந்நிய நாட்டு தலைவர்களிடம் தன் மக்களுக்காக சர்வதேசத்திடம் உதவி கேட்டவர் நேதாஜி.. ஆனா அந்நிய நாட்டு தலைவரை அப்பாவி தமிழ் மக்களுடன் கொன்று (ராஜீவ் காந்தி) தன் நாட்டு மக்களுக்கு கிடைக்க இருந்த உதவிகளை சர்வதேசத்திடம் இருந்து தடுத்த மேதாவி பிரபாகரன். அதை விட சுனாமி சமயத்தில் பாதிக்கப்பட மக்களுக்கு உதவ வந்த பன்னாட்டு சர்வதேச தொண்டு நிறுவனங்களை தடுத்து, தன் உயிரை காப்பாற்றிக்க (உதவ வர்ற பேர்ல இவர கொன்றுவாய்ங்கலாம்) அந்த பேரிடர் ல மருத்துவ, உணவு உதவி கிடைக்காமல் சொந்த அப்பாவி மக்களே சாக காரணமாயிருந்த தன்னலமற்ற மக்கள் நலம் விரும்பிய ஒரு தலைவன் பிரபாகரன்.
.
* இந்திய ஜனநாயகம் அமைய போராடிய நேதாஜி எங்கே.. ஜனநாயகத்தை வெறுத்த பிரபாகரன் எங்கே? ஜனநாயகம் அமைஞ்சா ஒரு பய நமக்கு ஒட்டு போட மாட்டான்னு (தீர்க்கதரிசி ல? ) தேர்தலை ரத்து பண்ணி.. வட மாகான தமிழ் முதல்வர் அமிர்தலிங்கத்தை கொன்னு (எப்புடி கொன்னாய்ங்கனு தெரிஞ்சா காறி துப்புவீங்க) ராணுவ ஆட்சியாவே வச்சிருந்து மக்கள மேலும் அவதிப்படுத்தி.. யப்பா... இலங்கையும் சர்வதேசமும் சில கோரிக்கையை ஏற்று மக்கள் நலனுக்காக, ஜனநாயகத்துக்கு திரும்ப சொல்லி கேட்டப்ப மறுத்தது வீரம் இல்ல, கோழைத்தனம்.. மக்களாட்சி வந்தா மக்கள் நல்லா இருப்பாங்க ஆனா தன் மீது போர் குற்ற விசாரணை வரும், நா என்ன பண்றது , என் உயிருக்கு பாதுகாப்பில்ல னு அந்த அமைதி முயற்சிகள எல்லாம் தடுத்தது னு சொல்லிட்டே போலாம்.. சரி கடைசி வரைக்கும் கூட அந்த வீராப்போடு நின்றுந்தாலோ, சயனைட் குப்பி கடிச்சிருந்தாலோ கொஞ்சமாச்சும் மதிச்சிறுக்கலாம்.. ஆனா 1 லட்சம் அப்பாவி மக்கள் சாகும்போது லாம் வராத சமாதான எண்ணம் தன்னோட சாவு வரப்போதுனு தெரிஞ்சதும் உங்க குரூப் மட்டும் வெள்ளைக்கொடி புடிச்ச வீரத்த எங்க போயி சொல்ல.. 
.
இப்புடி இன்னும் சொல்ல பல மட்டமான விஷயங்கள் இருக்கு.. இறுதி போர் ல சிங்களன் 1 லட்சத்துக்கும் மேல தமிழ் மக்கள கொன்னான் னு சொன்னா, 1985 - 2008 வரைக்கும் புலிகள் கொன்ன இஸ்லாமிய மக்கள், தமிழ் மக்கள் பல லட்சம் தாண்டும்.. ஒரு உண்மையான தமிழ் பற்றாளன் னா உனக்கு பிரபாகரன் மேலயும் புலிகள் மேலயும் கண்டிப்பா கோவம் வரணும்.. ஆனா இது எதுவும் தெரியாம புளி டா, தலிவன் டா னு இங்க நீங்க சுத்திட்டு இருக்கீங்க.. அதுக்கு காரணம் புலிகளின் பிரச்சார ஊடகம்.. பொய் சொல்வதில் வல்லவர்கள். இணையத்தில் பிரபாகரனனின் ஆட்சி னு வருவதெல்லாம் நல்ல கற்பனை கதைகள்.. இந்திய தமிழ் மீடியாக்கள பொறுத்த வரை ஈழ அரசியல் ஒரு பணம் காய்க்கும் மரம்.. அது விடுதலை புலிகளை சுற்றியே நகர்வதால் உண்மை தெரிந்தும் அவர்கள் வியாபாரத்திற்க்காக புலிகளின் பிம்பம் மக்களிடையே உடையாமல் பார்த்து கொள்கிறார்கள்.. விடுதலை புலிகளை ஒரு இந்தியனா வெறுக்க 100 காரணம் இருக்கு னா ஒரு தமிழனா வெறுக்க 1000 காரணம் இருக்கு.. 
.
உண்மையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உடன் ஒப்பிடும் தகுதி இருக்கு னா ஈழ வரலாற்றில் அது திரு.பத்மநாபாக்கு தான்.. நேதாஜி போலவே நாட்டை விட்டு வெளியேறி பல வெளி நாடுகளிள் தலைமறைவா வாழ்ந்து, கற்று, சரியான ஒரு இயக்கம் அமைத்து பல வெளி நாட்டு தலைவர்களிடம் அன்று ஈழத்தை பற்றிய தேவையை உணர்த்தி, ஈழம் அமைய சரியான வழிகளில் போராடினார்.. அவர் மட்டும் இருந்திருந்தால் ஈழம் அமைந்துவிடும், அப்றம் பேர் பிரபாகரனுக்கு கிடைக்காது என்ற காரணத்தால் புலிகளால் இதே நாளில் 26 வருடங்களுக்கு முன்னாள் கொல்லப்பட்டார்.. பத்மநாபாவால் ஒரு ஈழ போராளியோ, மக்களோ பாதிக்கப்பட்டதோ, இறந்ததோ இல்லை.. ஆனால் பயன்பெற்றவர்கள் பலர்.. தன்னை கொல்ல முயற்சி செய்த பல புலிகளை தனி ஆளாக ஓட விட்ட மாவீரன்.. இவரை நேருக்கு நேர் நின்று சாய்க்க முடியாமல்.. அகதியாய், படிக்க உதவி கேட்பதுபோல் நடித்த ஒருவனுக்கு இறக்கப்பட்டு உதவப்போய் துரோகத்தால் (புலிகள் ஸ்டைல்) வீழ்த்தப்பட்டார்.. உங்களுக்கு ஈழ போராட்டம் பற்றி தெளிவான புரிதல் வேணும் னா நீங்க கண்டிப்பா படிக்க வேண்டிய ஒரு முக்கிய ஆளுமை திரு.பத்மநாபா.. நிஜ ஹீரோ பத்மநாபா பேசிய ஈழ அரசியல் இன்று காமெடி வில்லன் சீமான்கள் கையில் இருப்பது பரிதாபம்..
.
ஈழமும் LTTEயும் ஒன்று கிடையாது . ஈழமும் LTTEயும் ஒன்று என நினைத்தால் , அது இஸ்லாமும் அல்-கொய்தாவும் ஒன்று என நினைப்பதற்கு ஒபபாகும்..

No comments: