Friday, May 18, 2018

எத்தனை எத்தனை பலியாடுகள் இந்த ஈழ ஆகுதியில் அநியாயமாக பலியாயின

அவசியம் படிக்கவேண்டிய பகிரவேண்டிய செய்தி. இதுபோல் எத்தனையோ சம்பவங்கள், நெஞ்சறிந்த பொய்கள், வஞ்சகம் நிறைந்த நட்புகள், சந்தர்பத்துக்கேற்ற, தங்கள் கடைந்தெடுத்த சுயநலனுக்கேற்ப, சுயதேவைகளுக்கேற்ப ஏழை எளிய தமிழ்நாட்டுத்தமிழர்களை toilet tissueக்களாக பயன்படுத்தி துடைத்தபின் கேவலமாக தூக்கியெறிந்த நிஜக்கதைகள் இங்கே ஏராளம்.
தங்களின் அன்றன்றைய சுயநலத்தேவைகளுக்காக யாரையும் எப்படியும் பயன்படுத்திக்கொள்ளலாம், அதனால் ஏதுமறியாத ஏழை பாழைகள் அப்பாவிகள் அவர்களின் குடும்பங்கள் எப்படி சீரழிந்தாலும் பரவாயில்லை என்பதே இவர்களின் எழுதப்படாத வாழ்நெறி.
1983 முதல் 1991 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு வந்த ஈழத்தமிழர்களுக்கு எந்த பிரதியுபகாரமும் எதிர்பார்க்காமல் தம் சக்திக்கு மீறி எல்லாவகையிலும் உதவிய உண்மையான உணர்வுள்ள பலருக்கும் அந்த உதவிகளால் பலன்பெற்றவர்கள் செய்த “கைம்மாறுகள்” கொஞ்சமா நஞ்சமா?
எழுதப்படாத வரலாற்றின் இருண்ட பக்கங்களில் அழிந்துபோன அசிங்கங்கள் அவை. அவர்களில் பலரின் பெயர்கூட யாருக்கும் தெரியாது. அந்த காலகட்டத்தில் நிலவியது தான் உண்மையான தொப்புள்கொடி உறவு. பாதிக்கப்பட்ட தன் சகோதர சகோதரிக்கு சக சகோதர சகோதரிகள் நீட்டிய உதவிக்கரம் உண்மையானது. உணர்ச்சிகளால் உந்தப்பட்டது. எந்தவித எதிர்பாப்பும் இல்லாதது. அத்தனையையும் ராஜீவைக்கொன்ற மனித வெடிகுண்டு வெடித்துச்சிதறடித்துவிட்டது. அன்றோடு முடிந்தது உண்மையான மக்கள் சார்ந்த “தொப்புள்கொடி” பந்தம்.
2009க்குப்பின் உருவான உண்டியல் குலுக்கிகளின் வர்த்தக வகைமாதிரியை மட்டுமே பார்த்துப்பழகிவிட்டவர்களுக்கு அதெல்லாம் தெரியவும் தெரியாது. சொன்னாலும் புரிபடாது.
பேரறிவாளனுக்காகவும் நளினிக்காகவும் இன்று உருகோ உருகென உருகும் யாரும் 1983 முதல் 1991 வரையில் ஈழத்தமிழருக்கு உதவிய காரணத்தால் வாழ்வைத்தொலைத்தவர்களின் வரலாற்றை தொட்டுக்கூட பார்க்க மாட்டார்கள். ஏனெனில் அது பேசமுடியா பெருஞ்சோகம். வெளிநாட்டு வெள்ளிக்காசு ஆதரவை பெற முடியாத வர்த்தகம்.
எதிர்காலத்தில் புகைப்படக்கலைஞனாக வர கனவுகண்டு ராஜீவ் படுகொலையில் பலியான வெள்ளந்தி ஏழை இளைஞன் ஹரிபாபு முதல் தென்னிந்தியாவின் முதன்மையான செய்தி/சினிமா புகைப்பட நிறுவன அதிபராக இருந்த சுபா சுந்தரம் வரை எத்தனை எத்தனை பலியாடுகள் இந்த ஈழ ஆகுதியில் அநியாயமாக பலியாயின? எத்தனை உயிர்கள், எத்தனை குடும்பங்கள், எத்தனை பேரின் வாழ்க்கை, எதிர்காலம்? எல்லாம் எதற்காக?
உதவி கேட்டு வந்த இடத்தில் நம்பிநீட்டிய நட்ப்புக்கரங்களுக்கு இத்தனை அழிவுகளையும் தெரிந்தே ஏற்படுத்திய அதே நபர்கள், அமைப்புகள், அறிவுசீவிகள் இன்று தமிழ்நாட்டுத்தமிழருக்கு தர்மோபதேசம் செய்வதை என்ன சொல்ல? காலக்கொடுமை. வேறென்ன சொல்ல. இதில் அறம், மறம் என எதுகை மோனைவேறு
முள்ளிவாய்க்கால் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பில் இருந்த போது மும்பை கணேசன் மற்றும் இறைசா ராஜேந்திரன் என்னை அனுகினார்கள்> அப்போது சிவசேனா குறித்து தமிழில் ஒரு சிறிய நூல் எழுதியதால் பால் தாக்கரே பாராட்டியிருந்தார். அது ஊடகத்தில் வந்திருந்தது,
தாராவியில் என்னைச் சந்தித்த இறைசா வளத்தியான ஒருவரை அறிமுகப்படுத்தினார்.
அவர் ஈழத்தில் இருந்து வந்திருப்பதாகவும், பாதித்த ஈழத்தமிழர்களுக்காக உலகம் முழுவதும் சென்று உதவிகள் கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் கூறினார். அப்போது விலாஷ் ராவ் தேஷ் முக் தலைமையில் காங்கிரஸ் மகர்ராஷ்டிராவில் இருந்தது, காங்கிரஸ் தலைவர்கள் அனுக முடியாத நிலையில் இலங்கையில் இருந்து வந்த நபர் என்று கூறிக்கொண்டவர் நான் அவரது நன்பர் பால்தாக்கரேவுடன் படித்தவர்கள் என்று கூறினார். சரி அவரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறிவிட்டு பாந்திரா மாதே சிறி இல்லம் சென்றோம், கணேசன் அவர்களது காரில் தான் சென்றோம்.
முதல் சந்திப்பின் போது பால்தாக்கரேவிற்கு உடல் சரியில்லாத காரணத்தால் அவரைச் சந்திக்க முடியவில்லை. மீண்டும் திரும்பிவிட்டோம், அதன் பிறகு அந்த ஈழத்துக்காரர் என்னைத் தொடர்புகொண்டு அவரது கட்சி பிரமுகரைச் சந்திக்கலாமா என்றார்.
இந்த யோசனை எனக்கு சரியாகப் படவில்லை. ஆகையால் அப்போது கட்சியின் இளைஞரணித்தலைவராக இருந்த உத்தவ் தாக்கரேவை சிவசேனா பவன் தாதரில் வைத்து சந்திக்க ஏற்பாடு செய்தேன் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, 13.5.2010 அன்று நன்பகல் உணவிற்குப் பிறகு சிறிது நேரம் பேசலாமே என்றார். உத்தவ் ஆங்கிலத்தில் பேசுவார், இருப்பினும் ஒரு மொழிபெயர்ப்பாளன் என்ற முறையில் நான ஈழத்தமிழரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தேன், அப்போது உள்ளே நுழைந்த அந்த ஈழத்தமிழருடன் ஒரு பார்ப்பனர் வந்திருந்தார். தாராவியில் இருந்த போது எல்லாம் அந்த ஈழத்தமிழர் இங்கு யாரும் தெரியாது, உங்களை நம்பி வந்துள்ளேன் என்று கணபதி, ரவிச்சந்திரன் இறைசா ராஜேந்திரன் போன்றவர்களிடம் கூறிக்கொண்டிருந்தவர், தீடிரென்று ஒரு பார்ப்பனருடன் வருகை புரிந்தார். நான் அவருடன் உள்ளே செல்ல முயன்ற போது அந்த ஈழத்தமிழர் என்னை வரவேண்டாம் என்று நேரடியாக கூறாமல் சரவணா கொஞ்சம் காத்திருங்கள் உள்ளே சென்று விட்டு உடனே வந்துவிடுகிறோம், நாம் வேறு ஒரு முக்கியமான ஒருவரைப் பார்க்கவேண்டும் என்று கூறிவிட்டு எனது பதிலுக்கு காத்திராமல் அவர்கள் இருவரும் உள்ளே சென்றுவிட்டனர்.
அப்போது அந்த ஈழத்தமிழர் மும்பை வந்ததில் இருந்து அவருடனே இருந்த கணேசன், இறைசா ராஜேந்திரன், வழக்கறிஞர் குணசீலன், தமிழ்நேசன் என்று யாருமே இல்லை. நானும் அவர்கள் வெளியே காத்திருக்கிறார்களா என்று பார்க்க சென்றால் அவர்கள் இல்லை. உடனே இறைசாவை தொடர்புகொண்டேன். அவர் கூறிய செய்தி எனக்கு அதிர்ச்சியை அளித்து அதாவது அந்த ஈழத்தமிழர் நம்மவர்களிடம் உடல்நிலை சரியில்லை ஆகையால் இன்று முழுவதும் நன்று ஓய்வு வேண்டும் என்று காலையிலேயே சொல்லிவிட்டதால் நாங்கள் யாரும் அவரை தொந்தரவு செய்யக்கூடாது என்று அவரது அறைக்கு சென்று சந்திக்கவில்லை என்றார்கள்,

அவர்கள் உத்தவைச் சந்திக்கச்சென்று ஒரு மணிநேரம் கடந்துவிட்டது, எனக்கு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிற்குச் செல்லவேண்டி இருந்ததால், நான் சிவசேனா பவன் செகரட்டி ஜெயந்த் மானே விடம் கூறிவிட்டு புறப்பட்டேன்,
இவ்வளவு நடந்தும் நான் எந்த ஒரு சந்தேகமும் படவில்லை, இது நடந்து முடிந்த இரண்டு நாளைக்குப் பிறகு மீண்டும் மும்பை தோழர்கள் அனைவரும் சேர்ந்து அவரை தாதர் எக்ஸ்பிரஸில் வழியனுப்பி வைத்தோம்.
அதன் பிறகு அந்த ஈழத்தமிழரைத் தொடர்புகொள்ள முடியவில்லை, நாங்களும் அதை மறந்தோ போனோம்,
இது நடந்த முடிந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அதிர்ச்சிகர தகவல் வந்தது, அது ஈழத்தில் சிவசேனா அதன் தலைவர் மரவன்புலவு க சச்சிதானந்தம் என்ற அந்த செய்திதான்.
இந்த சச்சிதானந்தம் தான் அன்று ஈழத்தமிழர்களுக்காக உலகம் முழுவதும் சென்று உதவிகேட்க பயனித்துள்ளேன் என்று என்னிடமும் மும்பை நன்பர்களிடமும் கூறி ஏமாற்றியவர்.

சமீபத்தில் ஒரு திருமணத்தில் அவர் வந்திருந்தார். அது எனது உறவினரின் வீட்டுத்திருமணம் அந்த திருமணத்திற்கு மும்பை சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து அரசியல் தலைவர்கள் பிரமுகர்கள் என அனைவரும் வந்திருந்தனர். அங்கு என்ன திட்டத்தோடு வந்தாரோ தெரியவில்லை. என்னைக் கண்டதும் முகம் வெளீரிப்போய் சிறிது நேரத்திலேயே மண்டபத்தை விட்டு வெளியே சென்றுவிட்டார்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான காரணம் சிங்களவர்கள் மூலமாக சில தமிழர்கள் நடந்திய கோடுர நாடகம் தான், சிங்களவன் அம்பென்றால் அதை எய்தவர்கள் நம்முடனே இருந்துள்ளனர்.
அன்று என்னை ஒரு காயாக பயன்படுத்திக் கொண்டார்கள். இது எவ்வளவு பெரிய துரோகம், இப்படிப் பச்சையாக துரோகம் செய்தவர்கள் அன்று சுயநலத்திற்காக நம்மக்களைக் பலிகொடுத்திருக்கமாட்டார்களா??

அப்போது ஒருவர் என்னை எச்சரித்தார், ஆம் பெரியார் திராவிடர் கழகத்தின் மும்பைத் தலைவர் திரு.கதிரவன் அவர்கள் என்னிடம் இவரது செயல்பாட்டில் சந்தேகம் இருக்கிறது, இவருக்கு எதுவும் செய்து பிற்காலத்தில் வருத்தப் படுவாய் என்றார். அப்போது நான் கூறியது அய்யா எல்லாத்தையுமே சந்தேகப் படுவதுதான் உங்கள் அமைப்பின் கொள்கையா என்று கூறினேன்.

No comments: