செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்! செப்டம்பர் 17 - தந்தை பெரியார் பிறந்தநாளும் கழகம் தோன்றிய நாளும்! இரண்டுக்கும் இடைப்பட்ட செப்டம்பர் 16 க்கும் சிறப்பு இல்லாமல் இருக்குமா? இதோ இருக்கிறது!
செப்டம்பர் 16 ஆம் நாள்தான் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வகுப்புரிமை உத்தரவு போடப்பட்ட நாள்! சமூக நீதி அரசாணைக்கு இன்று 100 வயது!
M.R.O. public ordinary sevice G.O.no 613. dated 16.9.1921 - என்பது இந்த அரசாணைக்குப் பெயர். அப்போது சென்னை மாகாணத்தில் ஆட்சி செலுத்தி வந்த கட்சி நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஆகும். நீதிக்கட்சி ஆட்சியின் இரண்டாவது முதலமைச்சராக பொறுப்பேற்ற பனகல் அரசர் ஆட்சியில் தான் இந்த அரசாணை வெளியிடப்பட்டது.
1919 சட்டப்படி இரட்டை ஆட்சி நடைமுறைக்கு வந்தது. அதன்படி நடந்த முதல் தேர்தலில் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. முதல் முதலமைச்சராக 1921 ஜனவரியில் கடலூர் ஏ,சுப்பராயலு தலைமையில் அமைச்சரவை அமைந்தது. பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்று நீதிக்கட்சி உறுப்பினர் ஏ,தனிகாசலம் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இது பெண்ணினத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இதனிடையே உடல்நிலை குன்றியதால் முதலமைச்சர் ஏ,சுப்பராயலு ஜூலை 11 பதவி விலகினார், அதைத் தொடர்ந்து பணகல் அரசர் முதல்லமைச்சராக ஆனார். அவரது ஆட்சி அமைந்ததும். ஆகஸ்ட் 5 - ம் நாள் சட்டமன்றத்தில் டாக்டர் நடேசனார் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். பார்ப்பனரல்லாதாருக்கு நியாயமான விகிதாச்சார அடிப்படையில் வேலை வாய்ப்புகள் வழங்கவேண்டும், என்று தீர்மானம் கொண்டுவந்தார், அரசே இதை ஆணையாக வெளியிட உள்ளது என்று பனகல் அரசர் சொன்னதன் அடிப்படையில் நடேசனார் இந்த தீர்மானத்தை திரும்ப பெற்றார்,. அதனடிப்படையில் நீதிக்கட்சி அமைச்சரவையின் முதல் வகுப்புரிமை அரசாணை 16.9.1921 அன்று போடப்பட்டது.
கல்வி, வேலைவாய்ப்பு, சட்டசபை ஆகிய மூன்றிலும் மக்களின் விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் உதயமானது, வெள்ளுடை வேந்தர் தியாகராயரும், சமூக மருத்துவர்களுமான டி,எம், நாயரும், நடேசனாரும், இணைந்து உருவாக்கிய அமைப்பு இது.
1912 ம் ஆண்டு திருவல்லிக்கேணியில் திராவிடர் இல்லம் தொடங்கினார் நடேசனார், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உணவு விடுதிக்கு வெளியே சோற்றுப் பொட்டலத்தைப் தூக்கிப் போட்டதைப் பார்த்து நொந்த நடேசனார். ஒடுக்கப்பட்டவர் உட்கார்ந்து சாப்பிடவும், தங்கிப் படிக்கவும் உருவாக்கிய இல்லம் தான் திராவிடர் இல்லம், இந்த இல்லத்தில் மாதந்தோரும் ஒன்றுபட்ட சிந்தனை கொண்டவர்களை அழைத்து பேச வைத்தார், அங்கு பேசவந்தவர்கள் தான் தியாகராயரும், நாயரும்.
Tuesday, September 21, 2021
திராவிடம் அறிவோம் - சமூக நீதி அரசாணைக்கு 100 வயது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment