Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - காந்தியாரின் வருகைக்கு முன்பு இருந்த இந்திய அரசியல் நிலை

 ஒருவிதத்தில் இந்தியாவின் தேசபக்தி எழுச்சிக்கும், காங்கிரஸ் வளர்ச்சிக்கும் காரணம்மாக இருந்தவர் வைசிராய் கர்சன் என்றே கூறலாம். அவர் வங்க மாகாணத்தை இரண்டாகப் பிரித்த செயல்முறை அதுவரையில்லாத ஒரு புது எழுச்சியைத் தோற்றுவித்தது. வங்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டங்களும், அந்நியத் துணி எரிப்பும், சுதேசி இயக்கமும் தோன்றிய பின்னணியில் வன்முறை தலைவிரித்தாடியது.

"கர்சன் பிரபு தனது நடவடிக்கைகளால் தேசியவாதிகள் கூட்டத்தை ஒரு துடிப்புள்ள அரசியல் கட்சியாக உறுவாக்கினார். 1905 - ஆம் ஆண்டிற்குள் காங்கிரஸ் மத்தியதர வர்க்கம் முழுவதையும் கைப்பற்றி இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக உருவெடுத்தது. ( வங்க மாகாண பிரிவினையின்போது தவிர) காங்கிரஸ் பாமர மக்களிடையே செல்வாக்குப் பெறவில்லை. அது ஒரு விளையாட்டுப் பொருளாகவும், யதார்த்த நிலைக்கு ஒவ்வாததாகவும், தத்துவார்த்த ரீதியாகவுமே இருந்தது.

டாக்டர் அம்பேத்கார் ரத்தினச் சுருக்கமாக அன்றைய நிலையை 1940 - ல் தான் எழுதிய நூலில் வர்ணிக்கிறார்.
திரு. காந்தி இந்திய அரசியலில் நுழைவதற்க்கு முன்பு இங்கே அரசியல் மேடையில் காங்கிரஸ், மிதவாதிகள் (Liberala). வங்கத்து வன்முறையாளர் (terrorists  of Bengal) ஆகிய மூன்று கட்சிகள் தாம் இருந்தன. காங்கிரஸ்சையும், மிதவாதிகளையும் உண்மையில் ஒரே கட்சி என்று  தான் சொல்லவேண்டும் . இன்று போல் அன்று பிரித்து வைக்கும் பேதங்கள் இல்லை, எனவே அப்போது காங்கிரஸ் வன்முறையாளர்கள் என  இரண்டே கட்சிதான் என்றார். இந்த இரண்டிலும் சேர்வதற்காண நிபந்தனைகள் மிகவும் கடுமையானவை. மிதவாதிகள் கட்சியில் சேர்வதற்கு சாதாரணக் கல்வி மட்டும் இருந்தால் போதாது. மிக உயர்ந்த கல்வி அறிவு வேண்டும் கல்வியில் உயர் நிலையை காட்டவில்லை என்றால் மிதவாதிகள் கட்சியில் யாரும்  சேரவேமுடியாது.
படிக்காத மக்கள் அரசியல் அதிகாரத்தில் பங்கு பெருவது தடுக்கப்பட்டது.

வான்முறையாளர்கள் நினைத்து பார்க்கவே முடியாத கடுமையான நிபந்தனைகள் வைத்திருந்தனர். வெறும் வாயால் அர்பணிப்பது போதாது . தேவைபடும்போது உயிரை காவுகொடுக்கவேண்டும். அத்தகையோர்தாம் உறுப்பினர் ஆகலாம். ஏமாற்றுக்காரர்கள் உறுப்பினராக முடியாது .

சத்தியாக்கிரகப் போராட்டத்திற்க்கு கல்வி தேவையில்லை. உயிர் தியாகமும் செய்யவேண்டிய அவசியமில்லை,  தேசபக்கதர் எனப் பெயர் வாங்க நினைக்கும் பெரும்பாண்மையான மக்களுக்கு காந்தியாரின் சத்தியாக்கிரகம் எளிமையான வழியாயிற்று.  இந்த இடைப்பட்ட வழிதான் மிதவாதிகள், வன்முறையாளர்கள் கட்சியைவிட காங்கிரஸ் கட்சியை மிகவும் பிரபலமாக்கியது.

காந்தியாரின் வருகைக்கு முன்பு இருந்த இந்திய அரசியல் நிலை இதுதான்.

நூல்    ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம் ; 136 138.

No comments: