Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - " தேசியம் அன்று மதச்சார்புள்ள தேசியமாக இருந்தது.

 " தேசியம் அன்று மதச்சார்புள்ள தேசியமாக இருந்தது.

(உதா). மராட்டியத்தில் திலகரால் விநாயக சதுர்த்தி விழா பத்துநாள் பெருவிழாவாகப் புதுப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு நாள் விழாவிலும் ஆங்கிலேயருக்கு எதிரான சொற்பொழிவுகள் நடைபெற்றன.

அதுபோலவே வங்கத்தில் தேசியம் காளியையொட்டி வளர்ந்தது. அங்கும் நவராத்திரி பூசை புதுப்பிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டு வந்தது.

இதுகுறித்து பண்டித நேரு குறிப்பிடுவது.
"1907 - ல் நிலவிய இந்திய தேசியப் புத்துணர்வினைச் சமுதாயக் கோணத்தில் பார்க்கும் போது அது பிற்போக்குத் தன்மை வாய்ந்தது என்றே கூறவேண்டும். தவிர்க்க முடியாத வகையில் இந்தியாவில் எழுந்த தேசியம் இதர கிழக்கு நாடுகளில் தோன்றியது போலவே மதச் சார்புடைய தேசியமாகும்.
இந்த "மதச்சார்பு" பார்ப்பனர்களை வசீகரிக்கவும்,  துவக்க காலத்தில் காங்கிரஸ் அவர்கள் வசமாகவும் ஒரு காரணமாக இருந்தது.
தீவிரவாதிகளும் இந்தத் தன்மையையே பெற்றிருந்தனர்.

1911 - ஆம் ஆண்டு ஜுன் மாதம் 17 ஆம் நாள்  மணியாச்சி ரயில் சந்திப்பில் வாஞ்சிநாதன் (அய்யர்) திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆஷ் (Ashe) என்பவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு , ரயில் பெட்டியில் உள்ள கழிவரைக்குச் சென்று தன்னைத்தானே  துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்தாரல்லவா? அப்போது அவரது சட்டைப் பையில் அவர் எழுதி வைத்திருந்தக் கடிதத்தில், "சுயராஜ்ஜியத்தையும், சனாதானத் தர்மத்தையும் நிலைநாட்டுவதற்காக" (to "Restore Swarajya and the Sanatan Dharma") இப்படிச் செய்ததாக எழுதப்பட்டிருந்தது.

ஆங்கிலேயர்களின் வருகையால் தங்கள் பார்ப்பனர்களின் ஆதிக்கம் பாதிக்கப்படுவதாக கருதினர். காங்கிரசும் இந்தியாவும் காந்தியார் வசமான பிறகும்கூட,ஸொ இந்த "மதச்சார்பு" முற்றிலும் மறைந்துவிடவில்லை. காந்தியார் அடிக்கடி ராமராஜ்யம் பற்றி பேசியது நினைவிருக்கலாம்.

நூல்     ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம் ; 141 to 143.

No comments: