Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - ஆச்சாரியார் அவங்க ஆட்களை நிரப்பி...

"இப்ப வந்து பொறுப்பு ஏத்துகிட்டாரே, என்ன செஞ்சாரு? அரசாங்கத்துலே திறமை உள்ளவங்களுக்குப் பஞ்சமா? அரசாங்க வேலையிலே ஓய்வு பெற்றுப் போனவங்கள்லே, எத்தனைப் பேரை உள்ளே உட்கார வச்சிருக்காரு? நினைச்சுப் பாருங்கள்!"
"பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னே ஓய்வு பெற்றவரு வயசும் ஏழுபதுக்கு மேலே ஆனவரு, ஆர்.வி, கிருஷ்ணய்யரு! அவருக்கு ஏன் சட்டசபை காரியதரசி வேலையைப் போட்டுக் கொடுத்தாரு?
"வெங்கடகிருஷ்ண அய்யர்னு ஒருத்தரு , அவர் தலைமை இன்ஜினியரா இருந்தவரு! அவரும் ஓய்வு பெற்று ஆண்டு பத்துக்கு மேலே ஆயிடுச்சு, வீட்டுக்குப் போனவரைக் கூப்புட்டுகிட்டாரே! இப்படி எத்தனையோ பேரை, விதிமுறைகளுக்கு மாறா சேர்த்துக்கிட்டதுக்கு எது காரணம்".

"பாண்டியன் படிச்ச, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்கு துணை வேந்தராப் போடச் சொல்லி யார் பெயரை வற்புறுத்தினார்ரு, சி.பி. இராமசாமி அய்யரைத் தானே?! வேலையில்லா விட்டாலும் வேலையை உண்டாக்கி , அய்யருமாருங்களைக் கொண்டு வந்து உட்கார வச்ச ஆச்சாரியாரு, நம்மாளுங்களுக்குச் செஞ்ச கொடுமைகளை நாம மறக்காம நினைச்சுப் பார்க்கனும்! என்றார் வேலாயுதம்,

"பெரிய நிபுணர், பொருளாதாரத்திலே என்று பாராட்டப்படுபவரு டாக்டர் பா,நடராசன் என்பவர்! அவர் அரசாங்கத்திற்கு நிதித் துறை ஆலோசகரா இருந்தாரு! அவரு நம்ம ஆளு! அந்தப் பதவியே தேவை இல்லைனு, அவரை வெளியேத்துனவர் தானே இவரு!

அரசாங்க நிர்வாகத்துலே, ஆச்சாரியார் அவங்க ஆட்களை நிரப்பியும், நம்ம ஆட்களை விரட்டியும், அவங்க ஆட்களை மேன்மைபடுத்தியும் காட்டறதுக்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் இருக்கு! அதை எல்லாம் நாம தெரிஞ்சுக்கணும். இப்பொழுது படிச்சு கிட்டு  இருக்கிற மாணவர்கள் சேர்க்கையை எண்ணிப் பார்த்தா, மிகவும் அதிர்ச்சியாய் இருக்கிறது! டாக்டருக்குப் படிக்கிற மணிமுத்து வினுடைய பேராசிரியர் கிட்டே பேசிகிட்டு இருந்தேன் அவர் ஒரு பட்டியலைக் காட்டுனாரு! பொறியியல் கல்லூரியிலே 378 இடமாம், அதுலே பார்ப்பனப் பிள்ளைகள் மட்டும் 160 பேராம்" என்றார் பாண்டியன்.

நூல்     ; பயணம் -2
பக்கம் ; 1022 to 1023.

No comments: