பிராமணர் அல்லாத பெருங்குடி மக்களே ! நாங்கள் தான் உங்களுடைய உண்மையான பிரதநிதிகள், எங்களை நம்புங்கள் எல்லோரும் வாருங்கள் என்று அழைப்பு விடுத்த போட்டி இயக்கம்,1917 செப்டம்பர் 15 ம் நாள் கோகலே மண்டபத்தில் கூடியது. காங்கிரஸில் உள்ள பார்ப்பனர் அல்லாதாருக்கான தனி அமைப்பு என்றும் வலைவீசியது.
தலைவர் தூண்டிலில் மாட்டியவர் திவான்பகதூர் கேசவ பிள்ளை. 1885 -ல் ஆலன் ஆக்டோவியன் ஹியும், காங்கிரஸ் கட்சியை துவங்கியபோது அக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.துணைத் தலைவர்களாக லாட்கோவிந்த தாஸ், சல்லா குருசாமி செட்டியார் ஈரோடு ராமசாமி நாயக்கர்(பெரியார்) நாகை வி.பக்கிரிசாமி பிள்ளை . சீர்காழி சிதம்பரநாத முதலியார், தஞ்சாவூர் சீனுவாச பிள்ளை, ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
கோபால்சாமி முதலியார், குருசாமி நாயுடு, டாக்டர் வரதராசலு நாயுடு, சர்கரைச் செட்டியார், கல்யான சுந்தர முதலியார், (திரு,வி,க.) ஆகியோர் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்..
இதில் பெரியார் அப்போது காங்கிரஸில் உறுப்பினராக இல்லை . காங்கிரஸ் தலைவர்களான சி, ராஜகோபாலாச்சாரியார், அன்னிபெசன்ட், டாக்டர் வரதராஜலு, கருணாகரன் மேனன் ஆகியோரிடம் நல்ல தொடர்பில் இருந்தார், இராஜகோபாலாச்சாரியார், வாரதராஜலு நாயுடு இருவரும் வற்புறுத்தி அழைத்து சென்னை மாகாண சங்க துணைத்தலைவராக்கினார்.
பார்ப்பனர் அல்லாதார் நலன் என்ற நோக்கத்துடன் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் அமைக்கப்பட்டவுடன், ஆகாயத்திற்கும் பூமிக்குமாக அலறிக் குதித்து எதிர்ப்பு தெரிவித்த இந்து ஏடும், நியூ இந்தியா ஏடும், காங்கிரஸில் உள்ள பார்ப்பனரல்லாதாருக்கான அமைப்பு என்று உறுவாக்கப்பட்ட சென்னை மாகாண சங்கத்தை வரவேற்று எழுதின. இப்படி ஒரு சங்கம் தேவை, பார்ப்பனரல்லாதாருக்கான நிரந்தர அமைப்பு வளர்ந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை - தற்காலிகம் என்ற சொல்லாக வெளிவந்தது,
நூல் ; திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை,
பக்கம் ; 52 to 53.
Tuesday, September 21, 2021
திராவிடம் அறிவோம் - சென்னை மாகாண சங்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment