1909 ஆம் ஆண்டு, உரிமைக்குரல் கொடுக்க அவர்கள் உருவாக்கிய அமைப்பிற்குப் பெயர் - பார்ப்பனர் அல்லாதார் சங்கம். சங்கத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. உறுப்பினர்கள் சேர்ந்தார்கள் ஆனால் போதிய பொருளாதாரம் இல்லை.
பார்ப்பனீயத்தின் மூலபலமே திராவிட இனம் பிளவுபட்டுக் கிடப்பதுதான் என்ற உண்மை புரிந்த பார்ப்பனர்கள், பார்ப்பனர் அல்லாதார் சங்கம் வரை அனுமதிப்பார்களா? வகுப்புவாதத்தைப் பரப்புகிறார்கள், இனவெறியைத் தூண்டுகிறார்கள் என்று திண்ணைகளில் சதஸ் வைத்தார்கள். பத்திரிகைகளுக்கு ஆசிரியர் கடிதங்களை எழுதிக் குவித்தார்கள். பிரயாணம் செல்லும் இடங்களிலெல்லாம் பிரசங்கம் செய்தார்கள்.
எதிர்ப்புகளை சமாளிக்க முடியாமல் தளர்நடை போட்டது புதிய இயக்கம், அதே நேரம் இன்னொரு புதிய அமைப்பும் உருவானது. சாதியிலும் அரசுப்பணிகளிலும் நான்காம் நிலையில் இருக்கும் நமக்கு விடிவே கிடையாதா? என்று ஏங்கித் தவித்தார்கள் அரசு அலுவலர்கள். திராவிடர்கள் நெல்லிக்காய்கள் அவர்களை ஒன்றுதிரட்ட முடியாது, குறைந்தது அரசு அலுவலர்கலையாவது ஒன்று திரட்டவேண்டும் என்பது அவர்களது விருப்பம். கைகட்டி குனிந்ததும், வாய்பொத்தி இளித்ததும் போதும் என்று ஒரு அமைப்பை உறுவாக்கினார்கள்.
1912 -ஆம் ஆண்டு உறுவான அமைப்பிற்குப் பெயர் சென்னை அய்க்கியக் கழகம், தமிழகத்தின் அத்தனை உதடுகளும் உச்சரிக்கும் சொல்லை உருவாக்கியவர்கள் ஜி.வீராசாமி நாயுடு, என். நாராயண சாமி நாயுடு, சரவணப்பிள்ளை, துரைசாமி முதலியார் நான்கு பேரும் சேர்ந்து உருவாக்கினர்.
மூன்று ஆண்டுகளாக தளர் நடை போட்ட பார்ப்பனரல்லாத சங்கம் - புதிதாக உருவான சென்னை அய்கியக் கழகம் ஒன்னுகொன்று தோள் கொடுத்து மகிழ்ந்தன. ஓராண்டில் இரண்டு கழகமும் பெயரலவுக்குதான் வளர்ந்தன, பெயர் சொல்லும் அளவிற்கு இல்லை.
பார்ப்பனீயத்தின் வல்லடி வழக்குகளை எதிர்த்து வலிமையான குரல் கொடுக்கும் வசீகரமான ஒரு தலைமை தேவை. இரண்டு அமைப்பைச் சார்ந்தவர்களும் அப்படி ஒரு தலைவரைத் தேடினார்கள்.
அந்தத் தலைவரின் பெயர் டாக்டர் சி. நடேச முதலியார்.
நூல் ; திருவல்லிகேணி முதல் திருவாரூர் வரை.
பக்கம் ; 10 to 11.
Tuesday, September 21, 2021
திராவிடம் அறிவோம் - பார்ப்பனர் அல்லாதார் சங்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment