நீதிக்கட்சியின் மீது சாட்டப்படுகிற இன்னொரு குற்றச்சாட்டு, அக்கட்சி அன்னிய ஆட்சியை ஆதரித்ததாகக் கூறப்படுவதாகும். உண்மையில் ஒரு காலகட்டத்தில் காங்கிரஸின் லட்சியமும், நீதிக்கட்சியின் லட்சியமும் ஒன்றாகவே இருந்திருக்கின்றன.
தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் சட்டதிட்டங்களின் 2 வது பிரிவு கீழ்கண்டவாறு கூறுகிறது.
"அமைதியான, சட்டபூர்வமான, அரசியல் அமைப்பு வழிகள் அனைத்தின் மூலமும், இயன்ற வரையில் கூடிய சீக்கிரம், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இந்தியாவிற்குச் சுயராஜ்யம் கிடைக்கப் பாடுபடுகிறது."
இப்போது அன்றைய காங்கிரஸ் கட்சியின் சட்டதிட்டங்களை பாருங்கள், அதன் முதல் பிரிவு கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
"இந்திய தேசிய காங்கிரஸ்ன் நோக்கம் அமைதியான, சட்டபூர்வமான வழிகளில் இந்திய மக்கள் சுயராஜ்ஜியத்தைப் பெறுவது," -
அதணால்தான் 1929 - ல் நெல்லூரில் நடைபெற்ற பிராமணரல்லாதாரின் 12 - வது மாநாட்டிற்குத் தலைமை வகித்த பி.முனுசாமி நாயுடு, "நமது குறிக்கோளுக்கும் இந்திய தேசிய காங்கிரஸ்சின் குறிக்கோளுக்கும் அதிக வித்தியாசமில்லை" என்று குறிப்பிட்டார்,
சுயராஜ்யம் என்றால் டொமினியன் அந்தஸ்தா"? அல்லது பிரிட்டன் தொடர்பை அரவே துண்டித்துக் கொண்ட விடுதலையா?
அதுபற்றிய தெளிவு அப்போதில்லை. "
எங்கள் தலைவர்களில் பெரும்பாலோர் சுயராஜ்யம் என்பதற்கு விடுதலைக்கு குறைவான ஒன்றாகவே பொருள் கொண்டனர் என்பது தெளிவாகத் தெரிந்தது. காந்திஜி இந்த விஷயத்தில் மகிழ்ச்சியோடு தெளிவற்றவராக இருந்தார். அதுகுறித்துத் தெளிவான சிந்தனையையும் அவர் தூண்டவில்லை" காந்தியார் வருகைக்குப்பிறகும் இந்த தெளிவற்ற நிலை நீடித்ததைத்தான் பண்டி நேரு சுட்டிக்காட்டுகிறார்.
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் காங்கிரஸ்சைப் போல ஒரு விடுதலை இயக்கமல்ல. இருந்தாலும் சுயராஜ்ஜியத்தை அது நோக்கமாகக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் கொள்கைகளான நீதி, அனைவருக்கும் சம வாய்ப்பு - என்கிற அடிப்படையில் அரசு நடத்தப்பட வேண்டும் - என்று அக்கட்சி வற்புறுத்தியது, இக்கருத்துத்தான் " பிராமணரல்லாதாரின் கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது,
நூல் ; திராவிட இயக்க வரலாறு,
பக்கம் ; 151 to 153.
Tuesday, September 21, 2021
திராவிடம் அறிவோம் - நீதிக்கட்சியின் மீது சாட்டப்படுகிற இன்னொரு குற்றச்சாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment