Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - இந்திய அரசியலில் காந்தியாரின் வருகைக்கு முன்பு வன்முறை

  " இந்திய அரசியலில் காந்தியாரின் வருகைக்கு முன்பு வன்முறையில் நம்பிக்கை கொண்ட புரட்சிவாதிகள் தனியாகச் செயல்பட்டனர்.

இடதுசாரி அல்லது தீவிரவாதிகள் குழுவிற்குத் திலகர் தலைமை வகித்தார். இவர்கள் அரசுடன் எந்தவிதத்திலும் சமரசம் செய்து கொள்ளாதவர்கள்.

வலதுசாரிகள் என்று அழைக்கப்பட்ட மிதவாதிகள் (Moderates) இவர்கள் படிப்படியான பாராளுமன்ற ஜனநாயக முறையில் செய்யப்படும் மாற்றங்களில் முழுக்க முழுக்க நம்பிக்கை வைத்தவர்கள் கோகலே தலைவர்.

திலகரும், கோகலேயும் பம்பாயைச் சேர்ந்தவர்கள். அவர்களிருவருக்கும் உள்ள கருத்துவேருபாடு 1897 ஆம் ஆண்டு பம்பாயில் "பிளேக்" நோய் பரவியபோது நன்கு வெளிப்பட்டது அப்போது திலகர் நவீன தடுப்புமுறைகளுக்குப் பதிலாக, பழைய சம்பிரதாய முறைகளை வலியுறுத்தினார். சிவாஜி அப்சல்கானைக் கொன்றது தார்மீகச் சட்டத்திற்கு அப்பார்பட்டதென்று கூறி அத்தகைய "வன்முறை" யைப் புகழ்ந்தார். இதன் காரணமாக ராஜத்துவேஷாத்தைப் பரப்புவதாகச் சிறையிலடைக்கப்பட்டார். கோகலே, நீதிபதி ரனடேயின் சீடர், நாடாளுமன்ற நடைமுறையில் நம்பிக்கை வைத்தவர், மத்திய சட்டசபையின் உறுப்பினராகி, அப்போது இந்தியாவின் தலைநகராக இருந்த கல்கத்தாவில் ஆண்டுதோறும் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் மீது நிகழ்த்தும் சொற்பொழிவும், ஆண்டுதோறும் காங்கிரஸ் மாநாட்டில் அதன் தலைவர் நிகழ்த்தும் சொற்பொழிவுகள்  அன்றைய அரசியலில் மகத்தான நிகழ்ச்சிகளாக இருந்தன.

1907 - ல் நடைபெற்ற சூரத் காங்ரஸ்சில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் மோதல் ஏற்பட்டு கூட்டம் சலசலப்பில் முடிவுற்றது. இருந்தாலும், காங்கிரஸ் மிதவாதிகளின் வசமாயிற்று. அதற்கடுத்த ஆண்டு வன்முறையைத் தூண்டியதாகத் குற்றம் சாட்டப்பட்டு திலகர் ஆறாண்டுக்காலம் தண்டிக்கப்பட்டு சிறைக்கனுப்பப்பட்டார். அதிலிருந்து முதல் உலக யுத்தம் துவக்கம் வரை காங்கிரசில் மிதவாதிகளின் கையே மேலோங்கியிருந்தது.

நூல்    ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம் ; 139 to 140.

No comments: