"மதுரையிலே டி,வி.எஸ். நிறுவனக் கட்டிடத் திறப்பு விழாவிலே காமராசர் பேசியது, சூத்திரன் செய்யவேண்டிய மோட்டார்த் தொழிலைப் பிராமணன் செய்வதாக ஆச்சாரியார் பேசினார். அப்பொழுதுதான் ஆத்திரப்பட்டார் காமராசர். அது மட்டுமல்லே வாயதான சுந்தரம் அய்யங்கார் தமது மகன்களிடம் தொழிலை ஒப்படைத்திருக்கிறார் நான் பாராட்டுகிறேன் என்றார் ஆச்சாரியார்.
அப்பொழுதுதான் கமராசர் தன் கொதிப்பைப் பேச்சிலே வெளியிட்டார். வர்த்தகத்துலே மட்டுமல்லாமல் அரசாங்கம் நடத்துரதுலேயும் அந்த வழியை வயோதிகர்கள் பின்பற்றினால் நாட்டுக்கும் நன்மை ஏற்படும்னு கருத்தை வெளியிட்டார்!" என்றார் பாண்டியன்.
"அந்தப் பேச்சுதான் எங்களைப் போன்றவங்களை எல்லாம் வேகமாகச் செயல்பட வச்சது. எங்க டாக்டர் வரதராசுலு , அண்ணாமலைப் பிள்ளை போலவங்க எல்லாம் அதுக்குப் பின்னாலே முனைப்பா கையெழுத்து வாங்குரதுலே ஈடுபட்டாங்க! ஆச்சாரியாருடைய உடம்பும் கெட்டது. கட்சிக் கூட்டம் நடந்தது! அந்தக் கூட்டத்துலே கல்வித் திட்டத்தின் மீது ஓட்டெடுத்து என்னை அவமானப்படுத்த வேண்டாம். நான் விலகிக் கொள்கிறேன்! என்றார் ஆச்சாரியார்,
எங்கத் தலைவரும் வாக்குக்கு விடாமே கூட்டத்தை ஒத்தி வைச்சாரு இது நடந்தது சனவரி 6ல் என்றார் தியாகியார்.
"பின்னே ஏன் அப்பவே விலகாம இருந்தாரு"! என்று கேட்டார் ஆறுமுகம், "மேலிடத்திலே உள்ளவாங்க என்று தியாகியார் சொன்னார்.
எங்களுக்கு மேலிடம்னா டெல்லி தானே! மேலிடம் தன்னையே இருக்க சொல்வார்கள் என எதிர்பார்த்தார்! ஆனால் அது நடக்குல. சட்டசபை நடந்துகிட்டு இருந்த பொழுது மார்ச் 23 ஆம் தேதி உடல்நிலைக் காரணம் காட்டி, நான் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன்!" என்றார்.
"சட்டசபை நடக்கரை வரையிலும் இரண்டு மாதத்துக்கு மட்டும் சுப்ரமணியம் அவர்களை முதன்மந்திரியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்னு காமராசரிடத்துலே சொன்னவரு கட்சித் தலைவர் தேர்தல்லே இரண்டு மாசம்னு குறிப்பிட்டுச் சொல்லாமே சுப்பிரமணியம் இனி முதன்மந்திரியாய் இருப்பார்னு சொல்லவே காமராசர் இந்த ஏற்பாடு இரண்டு மாதத்துக்கு மட்டும் தான்னு சொல்லுங்க என்ற பொழுது கூட்டத்துலே ராஜாஜி அதை ஏத்துக்கலே!.
30 ம் தேதி தேர்தல் நடந்தது ஆச்சாரியார் காமராசர் நிப்பார்னு நினைக்கலே! ஆனால் எங்க டாக்டர் வரதராஜுலு காமராசர் பெயரைச் சொல்லிட்டார். எங்கத் தலைவருக்கு 93ம், சுப்பிரமணியத்துக்கு 41 வாக்கும் கிடைத்தது, முதல்வர் ஆனார் காமராசர்.
நூல் ; பயணம் -2.
பக்கம் ; 1026 to 1028.
Tuesday, September 21, 2021
திராவிடம் அறிவோம் - மதுரையிலே டி,வி.எஸ். நிறுவனக் கட்டிடத் திறப்பு விழாவிலே காமராசர் பேசியது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment