Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - வட மொழியை அறவே நீக்குவதென்பது

இன்றைய நிலையை பார்க்கும் போது வட மொழியை அறவே நீக்குவதென்பது தெழுங்கு மொழிக்கு அரிதாகும்; கன்னட மொழிக்கோ மிகவும் அரிது; மலையாள மொழிக்கோ அரிதினுமரிது. இம்மொழிகள் கணக்கு வழக்கு இல்லாமல் வட சொற்களை எடுத்தாண்டு வந்துள்ளமையாலும், அச்சொற்களின் உதவியை நாடுவதே வழக்கமாகக் கொண்டுள்ளமையாலும், தத்தம் சிறப்புப் பண்புகளை இழந்து தனித்து நின்றியங்கும் ஆற்றலையும் இழந்து நிற்கின்றன. ஆனால் திராவிட மொழிகள் அனைத்திலும் மிகவும் திருந்திய பண்பட்ட நிலையிலுல்ல தமிழ் மொழியோ வடசொற்களை அறவே அகற்றித் தனித்தியங்கும் ஆற்றல் வாய்ந்திருப்பதோடன்றி, அவற்றின் உதவியில்லாமல் மிகவும் மேம்பட்டு, வளமுற்று மிளிரும் ஆற்றலும் வாய்ந்ததாகும்.

தமிழிலோ, எவ்வளவுக்கெவ்வளவு தமிழ் நூல்கள் வட மொழியின் உதவியை நாடாமல் தனித்தியங்குகின்றனவோஅவ்வளவுக்கவ்ளவு சிறப்புடன் போற்றப்படும்.

இன்றும் கிராமப் புறங்களில் வாழ்வோரும், நகர் புறங்களில் வாழும் வட மொழிச் சொற்களைக் கையாளாமல் ஒதுக்குவதையும்; அப்படியே அவசியம் கருதிக் கையாள நேரிட்டாலும் "ஜிலேப்பி என்பதை "சிலேப்பி என்றும், ஸ்டேசன் என்பதை டேசன் என்றும் உச்சரிப்பதையும் காணலாம். இயல்பு காரணம்மாக தமிழ் மக்களுக்கு
வடமொழி உச்சரிப்பு வாயில் நுலையாமிலிருப்தை காட்டுகிறார்.

தமிழ் தவிர்த்து ஏனைய திராவிட மொழிகளில் வடமொழிக் கலப்பு மிகுந்து காணப்படுகிறதென்றால், "அவை புதுமை கருதி எடுத்தாளப்பட்டன அல்ல, கிட்டத்தட்ட இன்றியமையானததாகவே கருதிக் கையாளப்பட்டன. இந்த நிலைமை வந்ததற்க்கு காரணம் அம்மொழியின் இலக்கிய வளர்ச்சி முதன்மையாகப் பார்ப்பனர்கள் கையிலேயே ஒப்படைக்கப்பட்டு வந்துள்ளமையேயாம், என்று கூறுகிறார்,

நூல்     ; திராவிடம் அறிவோம்.
பக்கம் ; 172 to 177.

No comments: