Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - பெரியாரும் அண்ணாதுரையும்

மருத்துவக் கல்லூரியிலே, 318 இடத்துலே 104 இடம் பார்ப்பனர்களுக்கு, நாம் போராடிப் பெற்ற வகுப்புரிமையின் குரல்வளை நெரிக்கிறாரு! இப்படித்தான் துணை நீதிபதிகளை, மாவட்ட நீதிபதிகளை, அய்.ஏ.எஸ். நியமனங்களிலே, கல்வித்துறையிலே, பாதிக்கு மேலே அவங்க இனத்து ஆட்களையை நியமித்திருக்கிறார். அதற்கெல்லாம் ஈடுகொடுத்து தலையெடுப்பதற்கு ஐம்பது, ஆறுபது ஆண்டுகள் போனாலும்  முடியாது.

"அதணால் தான் அரும்புலேயே  நெருப்பபை  அள்ளிப்  போட்டுட்டா, அதன் வேர்கூட மிஞ்சாது இல்லையா? அதனால தான் ஆணி வேறையே ஒழிக்கிற மாதிரி, குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தாரு" இதை நம்ம மக்கள் புரிஞ்சிக்காம இருக்கிறார்களே" என்றார் ஆறுமுகம்.

"அது மட்டுமில்லே ஆறுமுகம், அவரை ராஜாஜினு கூடச் சொல்றதில்லே, நம்மாளுங்க அவர் ராஜரிசினேசொல்லிக் கால்லே விழறாங்கே! அவர் கையைத் தூக்கி ஆசிர்வாதம் என்பார்!" என்றார் ஆசிரியர் கந்தப்பன்.

எங்க தலைவரை உண்மையிலேயே முதல் மந்திரியா ஆக்குனவங்க, நாங்க இல்லே! நீங்கள் தான் என்றார் தியாகியார், பெரியாரும் அண்ணாதுரையும் தான்! நீங்கள் இந்த ரெண்டு வருசமா வெளியிலே போட்டது வெறும் சத்தமில்லே! ஆச்சாரியாருக்கு வெச்ச வேட்டு என்றார் தியாகியார்,

பெரியாரும் அண்ணாவும் பேசாம இருந்திருந்தா, உங்கத் தலைவர் (காமராசர்) முதல் மந்திரியா வந்திருக்க முடியாது, அப்படி தானுங்களே" என்றார் ஆறுமுகம்.
"அந்த உண்மையை மத்தவங்க ஒத்துகிறாங்களோ இல்லையோ, நான் ஒத்துக்குவேன், நாங்க அண்ணாத்துரை கட்சியைத் தொடங்குனப்போ அது அற்பாயுசு கட்சின்னு தான் நினைச்சோம்! அதுமட்டுமில்லே பெரியாரும், அண்ணாத் துரையும் மோதிகிட்டே இருப்பாங்க! நமக்கு வேலை குறைச்சலுனு எங்க ஆளுங்க பலர் நினைச்சாங்க!

ஆணால் இந்தியை அழிக்கிறதுலே இரண்டு பேரும் முன்னே போனதும், குலக்கல்வித் திட்டம்னு வர்ணாசிரமத்தை நிலை நாட்டுறத் திட்டம்னு ஓயாமே ஊர்வலம், மறியல்னு அண்ணாதுரை ஒரு பக்கம் மும்முனைப் போராட்டம்னு நடத்துனா, பெரியாரு மாநாடு போட்டுக் கண்டிக்க நாகப்பட்டினத்துலே இருந்து நடைப்பயணம்னு புறப்பட்டு வர, நாள் தவராம அரசாங்கத்துக்குத் தலைவலியை உண்டாக்கிட்டு நீங்க ஓயாம போராடாம இருந்தா, எங்க தலைவர்முதல் மந்திரியா பொறுப்பு  எளிதில் ஏத்துகிட்டு இருக்க முடியாது.

நூல்     ; பயணம் - 2.
பக்கம் ; 1023 to 1025.

No comments: