Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - 1920 - ல்மாணவர்களின் எண்ணிக்கை

1920 - ல் இன்டர் மீடியட் வகுப்பில் படித்த பார்ப்பன மாணவர்களின் எண்ணிக்கை 1900. திராவிட மாணவார்களின் எண்ணிக்கை  640.

பி.ஏ. வகுப்பில் பார்ப்பன மாணவர்கள் 469. திராவிட மாணவர்கள் 133.

எம்.ஏ. வகுப்பில் பார்ப்பன மாணவர்கள் 104. திராவிட மாணவர்கள் 11.

சென்னையை அடுத்த பொன்னேரிக்கு அருகில் உள்ள சின்னக்கவனம் என்ற ஊரை பூர்வீகமாகக் கொண்டவர்கள் டாக்டர் நடேசனாரின் முன்னோர்கள் மூன்று தலைமுறைகளுக்கு முன்பாக திருவல்லிக்கேணி பெரிய தெரு அழைக்கப்படும் வீரராகவப் பெருமாள் தெருவில் குடியேறினார்கள் இவரின் தந்தை கிருஷ்ணசாமி முதலியார்.

திருவல்லிக்கேணி பெரிய தெருவில் உள்ள டாக்டர் நடேசனாரின் இல்லத்திலேயேசென்னை அய்க்கியக் கழக தலைவர்களின் சந்திப்புகளும் ஆலோசனைகளும் நடந்தன கழகத்தின் செயலாளர் பொருப்பை நடேசனார் ஏற்றுக் கொண்டார். எல்.ஜி. அரங்க ராமானுஜம் துணைச் செயலாளர்.

1913 - ல் சென்னை அய்க்கிய கழகத்தின் முதலாம் ஆண்டு விழா டாக்டர் நடேசனாரின் மருத்துவமனை தோட்டத்தில் நடைபெற்றது. அமைப்பின் பெயர் நோக்கத்தைப் பிரதிபலிப்பதாக இல்லை எழுச்சியும், ஈர்ப்பையும் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் என்றார்கள்.
பார்ப்பனர் அல்லாத சங்கப் என்றப் பெயர் பெரும்பான்மையோரின் கருத்து.
பார்ப்பனர் என்று ஒரு இனத்தைக் குறிப்பிட்டு அந்த இனம் அல்லாதவர்கள் என்று நம்மை ஏன்  எதிர்மறையாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும்? நம் இனத்தின் பெயரால் திராவிடார் சங்கம் என்று பெயர் வைக்கலாம் என்றார் நடேசனார்.

1914 ம் ஆண்டு தொடங்கிய முதல் உலகப் போரில் பிரிட்டனுக்கு பல வகையிலும் உதவி செய்தது இந்தியா. அதற்குப் பிரதிபலனாக இந்தியாவிற்கு தன்னாட்சியும் அதற்கான பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுக்கும் உரிமையும் - பிரிட்டன் இந்தியாவிற்கு தரும் என்ற நம்பிக்கை ஏறபட்டிருந்த நேரம். அந்த உரிமை கிடைத்தால் மக்கள் பிரதிநிதியாகும் வாய்ப்பு பார்ப்பன மயமாகிவிட்ட காங்கிரசுக்கு தான் போகும், திராவிடர்கள் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால் திராவிடர்களுக்கென்று ஒரு அரசியல் கட்சி தேவை.

காங்கிரசிலிருந்து விலகிஇருந்த பி,டி தியாகராயர், டி.எம் நாயர் நாயரையும் சந்தித்து பார்பனரல்லாதார் பிரச்சினைகள் குறித்து விவாதித்தார், அந்த மூன்று தலைவர்களும் கண்ட இயக்கம் தான் நீதிக்கட்சி எனும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம்.

நூல்    ; திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை,
பக்கம்; 12 to 16

No comments: