Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - T. M. நாயர்

1910 ஆம் ஆண்டு, பாலக்காடு நகரமன்றம் கலைக்கப்பட்டது. உள்ளாட்சி  நிர்வாகங்களில் மக்கள் பங்கு பெற வேண்டும் என்ற அழுத்தமான நம்பிக்கை கொண்ட நாயர், அதற்கு எதிராக ஒரு கிளர்ச்சியை தலைமையேற்று நடத்தி, கலைக்கப்பட்ட நகரமன்றத்திற்கு உயிரூட்டினார்.

அப்போது நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில்  பேசும்போது காவல்துறை அதிகாரி ஒருவர் ரகசியமாக குறிப்பெடுத்துக் கொண்டிருந்ததார். இதை கவனித்த நாயர் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, "இந்த தீர்மானம் - குறிப்பெடுத்த ரகசிய போலீஸ் அதிகாரி தவிர மற்ற எல்லோராலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்று குறிப்பிட்டார்.

1912 மார்ச் 14 ம் நாள், சென்னை விக்டோரியா மண்டபத்தில் நமது உடனடி  அரசியல் கண்ணோட்டம் என்ற தலைப்பில் நாயர் பேசினார், நோயுற்றிருந்த நான் உடல் நலத்தோடு திரும்பி வரக்கூடாது, சாக வேண்டும் என்று சில புத்திசாலிகள் பிள்ளையாருக்கு நூற்றுக்கணக்கான தேங்காய்களை உடைத்தார்கள் என்று கேள்விபட்டேன்,
எனது மலபார் மாவட்டத்தில் விலையும் தேங்காய்களுக்கு தற்போது நல்ல விலையில்லை என்று அங்கே உள்ள தென்னை விவசாயிகள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நமது புத்திசாலி நண்பர்கள் மலபார் மாவட்ட தேங்காய்களுக்கு ஒரு புதிய சந்தையை ஏற்படுத்தி கொடுத்ததற்கு நன்றி என்று மூடநம்பிக்கையை  கேலிப் பொருளாக்கினார்.

1914, முதல் உலகப்போரின் போது பிரிட்டனுக்கு உதவ சென்னை மாகாணம்  சார்பாக இந்திய சிற்றரசர்கள், பொதுமக்கள் நன்கொடையில் மருத்துவ உதவிக் கப்பல் ஒன்று கொடுக்கப்பட்டது, அதன் பெயர் எஸ்,எஸ், சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பலர் அந்தக் கப்பலில் பணியாற்றினார்கள். அதே கப்பலில் லெப்டினன்ட் தகுதியுடன் மருத்துவராக பணியாற்றிய நாயர் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை பயிற்றுவித்தார். மாணவர்களின் தேர்வுக்கு அது பெரிதும் உதவியது. இதை பாராட்டிய பிரிட்டிஷ் அரசு, கேசரி இந்து என்ற பட்டம் கொடுத்ததுடன் அவரது மரணத்துக்குப் பின்னரும் தங்கப் பதக்கம் வழங்கி மரியாதை செய்தது.

நூல்   ; திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை.
பக்கம் ; 29 to 30.

No comments: