திராவிட இயக்கத்தைப்போல இழிமொழிகளுக்கும் பழிச்சொற்களுக்கும் ஆளான அமைப்பு இந்தியாவில் வேறு எதுவும் இருக்க முடியாது . இதற்குக் காரணம் ஒரு வர்க்கத்தாரால் செய்யப்படும் தவரான பிரச்சாரமே!
குறிப்பாக நீதிக்கட்சியின் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள்;-
அது வெள்ளையர் தூண்டுதலால் துவங்கப்பட்டது.
அது வெள்ளையருகளுக்கு வால்பிடித்த கட்சி என்பனவாகும் .
அந்தக் காலக்கட்டத்தில் அன்று இருந்த சமுதாய அரசியல் சூழ்நிலையின் அடிப்படையில் - நீதிக்கட்சியை எடைப்போட மறந்தவர்களின் கூற்றுக்களே இவை.
அன்றைய இந்தியாவில் இருந்த பிரதான அரசியல் அமைப்புகள் காங்கிரஸ், முஸ்லிம் லீக் - ஆகியவைதான்!
அவைகளும் இந்த குற்றச்சாட்டிற்க்குத் தப்பவில்லை.
உதா.. இந்திய தேசியக் காங்கிரஸ் 1885 - ல் டிசம்பர் மாதத்தில் பம்பாயில் ஏ.ஓ ஹியூம் என்கிற ஆங்கிலேயரால் துவங்கப்பட்டது. தாங்களே கட்டணம் செலுத்திக்கொண்டு 70 பேர் முதல் மாநாட்டிற்க்குத் தங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொண்டனர். 1885 முதல் 1900 வரை காங்கிரஸ்சின் தலைவர்களாக மூன்று ஆங்கிலேயர்கள் இருந்தார்கள்.
அப்போதெல்லாம் மாநாடு கூட்டிக் குறைகளை பிரிட்டிஷ் அரசிற்கு எடுத்துக் கூறி, இந்தியர்களுக்கு அதிக உத்தியோகங்களைக் கேட்பதுதான் காங்கிரசின் தலையாய பணியாக இருந்தது.
லாலா லஜபதிராய் "யுவ பாரதம் (அ) இந்தியத் தேசிய இயக்கத்தின் வரலாறு என்னும் நூலினை 1927 -ல் வெளியிட்டார். அதைத் தமிழில் மொழிபெயர்த்தவர் பேராசிரியர் கல்கி.
இந்தியத் தேசியக் காங்கிரஸ் ஆரம்பிக்கும் யோசனை முதன் முதலாக டப்ரின் பிரபு சிந்தித்தார். அவார் அதை ஹியூம்மிடம் தெரிவித்தார், ஹியூம் ஏற்றுக் கொண்டு சம்மதித்தார்.
"உலக சரித்திரத்திலேயே இச்சம்பவத்திற்கு உவமை கிடையாது, யதேச்சதிகார அந்நிய அரசாங்கம் ஒன்றின் தூண்டுதலினால் அரசியல் சுதந்திர இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதாக எவரேனும் கேள்விபட்டதுண்டா?.
நூல் ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம் ; 130 to 132.
Tuesday, September 21, 2021
திராவிடம் அறிவோம் - நீதிக்கட்சியின் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment