பேராசிரியர் மங்கல முரகன் எழுதிய நூலில்லிருந்து நாகம்மையார் மேடை ஏறிப் பேசியதில்லை . ஆனால் அவர் கலந்துகொண்டுட கூட்டங்களில் பெண்கள் அதிகளவில் கலந்துகொண்டார்கள். அம்மையார் பெரியாரின் அருகில் இல்லாமலிருந்தால், என்னதான் பெண்ணுரிமைக் கருத்துக்களை பேசியிருந்தாலும் கூட, பெண்கள் அதிகளவில் திரண்டிருப்பார்களா என்பது கேள்வி குறி. அறிவுக்கருவூலம், தலைமை அய்யா அவர்கள் தான், ஆனால் அதனை ஏதுவாக்கி காட்டியதில் அம்மா அவர்களின் பங்கு இருக்கின்றது. அன்றைய தினம் அவர்களின் குடம்பச் சொத்துதான் இயக்கத்திற்கு இருந்த ஒரே சொத்து. ஆணால் உவப்புடன் அனைவரையும் அரவனைத்து அன்னமிட்டு ஆதரித்தார்கள்,குடியரசு இதழின் பதிப்பாசிரியராகவும் நாகம்மையார் இருந்தார்கள்.
பதிப்பாசிரியர் என்பது வெறுமனே பத்திரிக்கையில் பெயர் போட்டுக்கொள்வது மட்டுமல்ல, அப்போது குடியரசு பத்திரிகை காவல் துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்த நிலை. பத்திரிகைகளில் வெளிவரும் விசயங்களுக்கு விளக்கம் கேட்கப்படலாம், கைதுகூடா செய்யப்படாலாம். இது போன்ற பொருப்பு தான் அம்மையார் ஏற்றுக்கொண்டார். குடியரசு மட்டுமல்ல, ரிவோல்ட் என்கின்ற ஆங்கிலப் பத்திரிக்கையின் பதிப்பாசிரியரும் இவாரே, அந்த ஏட்டில் குஞ்சிதம் குருசாமி, முத்துலட்சுமி ரெட்டி ஆகியோர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள்.
குஞ்சிதம் அம்மையார், நீலாவதி ஆகியோர் செய்துகொண்ட சாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணங்களுக்கு, விதவை திருமணங்களுக்கு நாகம்மையார் அவர்களும், அவர்களின் தாய் தகப்பன் நிலையிலிருந்து திருமணப்பத்திரிக்கை அடித்து அழைப்பு விடுத்திருக்கிறார்கள். 1930 களில் நடந்த - இராமசுப்பிரமணியம் திருமணம் தாலி மறுப்பு திருமணம் கூட, சுயமரியாதை இயக்கத் திருமணங்கள் இங்கிருந்துதான் தொடாங்குகிறது. முதன்முதலில் தாலி மறுப்பு திருமணம் நடைபெற்ற செய்தியை குடியரசு இதழில் எழுதும்போது "இன்று முதல் தாலி ஒழிந்தது" என்று எழுதினார்கள் . திருமணத்தை புரட்சிக்காண ஆயுதமாக மாற்றிய இயக்கம் சுயமரியாதை இயக்கம். சுயமரியாதை திருமணம் பெரிய அளவில் நடத்தப்படுவதற்கு காரணம் அந்த திருமண நிகழ்வில்தான் தாய்மார்களை சந்திக்க முடிகிறது என்றார் பெரியார்.
அய்யாவின் வெளிநாட்டு சுற்றுபயணங்களான மலேசியா, பர்மா, சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்கு அம்மாவும் செல்கிறார். இரண்டாவது முறை அய்ரோப்பா சுற்று பயணத்தின் போது அம்மா செல்லவில்லை. இங்கு இருந்து இயக்க வேலை தொய்வில்லாமல் செயல்படுத்தினார். அய்யாவை வரவேற்பதற்காக இலங்கை சென்று அய்யாவை அழைத்து வாந்தார். திருமணத்திற்கு பின் இதுவே முதல் முறை அய்யாவை அம்மா பிரிந்தது. தனது நாற்பத்தெட்டாவாது வயதில் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார்.
நூல் ; கருஞ்சட்டைப் பெண்கள்.
பக்கம் ; 70 to 80.
Tuesday, September 21, 2021
திராவிடம் அறிவோம் - நாகம்மையார் கலந்துகொண்டுட கூட்டங்களில் பெண்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment