Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - 1929 - ல் பிப்ரவரி 13 ம் நாள் செங்கற்பட்டுலே மாநாடு

1929 - ல் பிப்ரவரி 13 ம் நாள் செங்கற்பட்டுலே மாநாடு நடந்தது. . சென்னைப் பட்டணத்துலே, தியாகராயர் சதுக்கத்துலே இருந்து ஊர்வலம் புறப்பட்டு, 35 கல் தொலைவிலே உள்ள செங்கற்பட்டுக்கு அந்த காலத்திலே வந்து சேர்ந்தது!"

இன்றைய நடப்புக்கு எல்லாம் விதை போட்ட மாநாடு செங்கற்பட்டு சுயமரியாதை மாநாடு! அன்னைக்கு அந்த மாநாட்டுல போட்ட தீர்மானத்தையும், இன்னைக்கு நம்ம ஊரு நடப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கிற பொழுது தான், அங்கே போட்ட விதை தான், இப்ப நாடு முழுதும் செடியா, மரமா வளர்ந்து பலன் தருவதை பார்க்கிறோம்! சடங்குகளை விலக்கிக் கல்யாணம் நடத்துறது பெண்ணுங்களை எல்லாம் படிக்க வைக்கிறது. அவங்களை வேலை பார்க்க அனுப்பி வைக்கிறது, இன்னைக்கு நமக்கு சுளுவான காரியமா தோணலாம்!

என் மருமகளா இருக்கிற தமிழரசி படிக்கிறதுக்குக் காரணமா இருந்ததே, அந்த மாநாடுதான்! நம்ம கந்தசாமி பொண்ணுக்கு , நம்ம நற்பணி மன்றத்துப் புள்ளைங்க எல்லாம் கல்யாணம் நடத்தி, எதிர்ப்புகளை எல்லாம் அடக்குனது குறைச்சு மதிக்கிற காரியம் இல்லே!" சின்னதம்பி தீண்டத்தகாதவர்னு ஒதுக்குபுறமா தள்ளி வச்சவங்க குடியிருக்கிற இடத்துலே தான், நம்ம ஊருலே ஒரு "கலைமணி" இஞ்சினியரா மாறிகிட்டு இருக்கிறதை இப்போ நாம பார்க்கிறோம்! வெளுக்கிற குலம்னு சொல்ற குடும்பத்துலே பொறந்த மணிமுத்து, டாக்டர் படிப்பை முடிக்கப் போறதை, நாம பார்த்துகிட்டு இருக்கிறோம்! அவங்க எல்லாம் மேலெழுத்து வரதுக்கு, அந்த மாநாட்டுலே உதவித் தொகை போட்ட தீர்மானங்கள் எல்லாம் சட்டம்மா மாறுனதுனாலே தான் சமுதாயத்துலே நாம மாற்றத்தை பார்த்துகிட்டுதான் இருக்கோம்!

ஒரு காலத்துலே தீண்டத் தகாதவங்களா மதிக்கப்பட்டவங்க தான் நாடாருங்க! அவங்களை நல்லது கெட்டதுகளில் விலக்கி வைச்ச நாடு தான் இந்த நாடு! அவங்க தொட்டதை சாப்பிடாத காலம் கூட இருந்துச்சி! அந்த சுயமரியாதை மாநாட்டுலே தான், அந்த நாடாருங்க சமைச்சு எல்லாமே சாப்பிட்டது நடந்தது! அப்போ அது பெரிய புரட்சியாவே இருந்தது!

இன்று இந் அம்பது நாலுலே, அந்த நாடார் குலத்துலே வந்த காமராசரு முதலமைச்சர்னு நினைச்சு பார்க்கிற பொழுது, எவ்வளவு மகிழ்ச்சி.

நூல்   ; பயணம் 2,
பக்கம் ; 1046 to 1047.

No comments: