Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - தியாகராயர்

சென்னைக்கு அருகில் உள்ள சத்திய மேடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தியாகராயரின் முன்னோர்கள். இப்போது அப்பெயர் மருவி சத்தியவேடு என்று அழைக்கப்படுகிறது . சத்தியமேட்டிலிருந்து சென்னைக்குக் குடியேறி நெசவுத் தொழிலும், தோல் பதனிடுதல்  ஏற்றுமதி முதலான வணிகங்களிலும் ஈடுபட்டு பெரும் செல்வந்தராகத் திகழ்ந்தவர் அய்யப்ப செட்டியார் பிட்டி என்பது அவார்களது குடும்பப் பெயர். தேவாங்கம் எனும் ஒருவகை ஆடைகளை நெய்வதில் சிறந்து விளங்கியதால் தேவாங்க செட்டியார் என்று அழைக்கப்பட்டார்கள்.

அய்யப்ப செட்டியாரின் முதல் மகன் முனியசாமி, இரண்டாம் மகன் பெரிய தியாகராயர். 1852 ஏப்ரல் திங்கல் 27 ஆம் நாள் மூன்றாம் மகனாகப் பிறந்தவர் நம் தியாகராயர்.
சென்னைக்கு முதன் முதலாக கார் வந்த போது அதை வாங்கிய குடும்பங்களில் ஒன்று தியாகராயரின் குடும்பம். குதிரை பூட்டிய வண்டியில் வளம் வந்த இளம் வயது தியாகராயர் 1876 ஆம் ஆண்டு பி,ஏ,பட்டம் பெற்று தேவாங்க செட்டியார் குலத்தின் முதல் பட்டதாரியானார். தோல் பதனிடுதல் அதை லண்டனுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம், மிகப்பெரும் கைத்தறி நெசவுக்கூடம் ஆகியவைகள் மூலம் பொருள் ஈட்டிய அவர் தென்னிந்திய வர்த்தக சபை தொடங்கி - 1910 முதல் 1921 வரை அதன் தலைவராகவும் இருந்து, தென்னகத்தின் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுத்தார்.

சென்னை வண்ணாரப் பேட்டை எனும் வண்மை ஆர்த்த பேட்டையில் அவர் துவக்கிய பள்ளி அவர் பெயராலே மிகப் பெரும் கல்லூரியாக வளர்ந்து இன்றும் ஏழை மாணவர்களின் வேடந்தாங்களாக உள்ளது. பச்சையப்பன் அறக்கட்டளையின் இயக்குநராகவும், தலைவராகவும் இருந்ததால் ஏழை மாணவர்களுக்கு எட்டா கனியாக இருந்த கல்வி அனைவருக்கும் கிடைக்கசெய்தார். செங்கல்வநாயக்கர் தொழிர்கல்வி நிறுவனங்களின் நிர்வாகப் பொருப்பு மூலம் திராவிட மாணவர்கள் தொழிர்கல்வியும் பெருவதற்கு வழிவகுத்தார்.

நூல்    ; திருவல்லிகேணி முதல் திருவாரூர் வரை.
பக்கம் ; 17 to 19.

No comments: